Posts

Showing posts from 2024

தமிழக வரலாறு

தமிழக வரலாறு (History of Tamil Nadu) தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தைப் பற்றியதாகும். இம்மண்டலம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பு முதல் மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் பண்பாடும் உலகின் மிகப் பழமையானவைகளில் ஒன்றாகும். முந்தைய பழங்கற்காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் வரலாறு முழுவதிலும், இந்தப் பகுதியானது பல்வேறு புறக் கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைந்து இருந்து வந்துள்ளது. வரலாற்றில் ஒப்பீட்டளவில் குறுகிய காலப் பகுதிகளைத் தவிர்த்து, பிற காலகட்டங்களில் தமிழ்நாடு பகுதி புற ஆக்கிரமிப்புகள் எதுவுமின்றி சுதந்திரமாக இருந்து வந்துள்ளது. சோழர் காலத்தியக் கோவில் தென்னிந்தியாவின் பல்வேறு தீபகற்பகங்களை பத்து மற்றும் பதினோறாம் நூற்றாண்டில் ஒரே நிருவாகத்தின் கீழ் சோழர்கள் இணைத்தனர். சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ பேரரசுகளே நான்கு பண்டைய பூர்வீக தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்கள் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர், இதனால் உலகில் அழியாமல் வழக்கத்திலிருந்த சில பழ...