தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு


இலமுரியா கண்டம்.
ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள்.

பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்.

பேரறிஞர் கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை சென்று பின்பு தென் மேற்காகத் திரும்பி மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தீவு வரை சென்றது எனச் சுட்டிக் காட்டுகிறார் என பேராசிரியர் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.

ஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும்.

குமரிமாந்தரின் மொழியற்ற நிலை.
“சைகை மொழி” – Sign Language.
குமரி நாட்டு மாந்தன், முற்காலகட்டத்தில் ஆடையின்றி விலங்குகளைப் போல் தன் இச்சைகளைப் பெற்று வந்தான். மனவுறமுமின்றி, மொழியுணர்ச்சியுமின்றி, உணர்ச்சியொலிகளையும், விளியொலிகளையும் கையாளத் தொடங்கினான். காலப் போக்கில் தன் கருத்துக்களைச் சைகைகளாலேயே வெளிப்படுத்தி வந்தான். (Gesture Language or Sign Language) இதை ஊமையர் மொழி என்றே கூறலாம்.

இயற்கை மொழி தோரா. கி.மு.1,00,000 – 5,00,000 எழுத்தும், உச்சரிப்பும் சொற் பொருத்தமும் இல்லாமல் இயல்பாகப் பேசப்படும் ஒலித்தொகுதி (Natural Language) இயற்கை மொழியாம், இம்மொழியை “முழைத்தல் மொழி” (Gesture Language – or Sign Language) என்கிறோம். இம்மொழியின் ஒலிகள் 8 வகைப்படும். அவை

1. உணர்ச்சியொலிகள் (Emotional Sounds)
    இன்ப துன்ப உணர்வை வெளியிடும் ஒலிகள்.
2. விளியொலிகள் (Vocative Sounds) 
    பிறரை விளித்தல், அழைத்தல், கூப்பிடிதல் போன்றவைகள்.
3. ஒப்பொலிகள் (Imitative Sounds)
    இரு திணைப் பொருளுரைக்கும் ஒலிகள்.
4. குறிப்பொலிகள் (Symbolic Sounds) 
    வழக்கப்படிகருத்துக்களைத் தெரிவிக்கும் ஒலிகள்.
5. வாய்ச் செய்கையொலிகள்
    வாயினாற் செய்யும் செய்கைகளும் செயல்களும்.
6. குழவி வளர்ப்பொலிகள் (Nursery Sounds)
    குழந்தைப் பருவத்தினருக்குப் பொருந்தும் ஒலிகள்.
7. சுட்டொலிகள் (Decitive Sounds)
    சுட்டிக் காட்டும் ஒலிகள் சுட்டொலிகள், மற்றும்.
8. வினாவொலிகள் என்பவைகளும் உண்டு,
    அவை ஐயம், சந்தேகம் மற்றும் வினாக்களை எழுப்பும் ஒலிகள் எனப்படும்.

தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். இதைச் செயற்கை மொழி (Artificial Language or Artificial Speech) என்கிறோம். மொழித் துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்
பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே!குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே! அம்மொழியும் தமிழ் மொழியே! கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.

நான்கு பெருங் கடல் கோள்கள்
1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது
2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது
3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது
4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.

சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது.
தொல்காப்பியம்பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம். தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.

மூன்று தமிழ். 
தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.
1. பழந்தமிழ்
2. இடைக்காலத்தமிழ்
3. தற்காலத்தமிழ்

1. பழந்தமிழ் (Ancient Tamil) உட்பிரிவுகள் மூன்று.
அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ் Early ancient Tamil (or) Proto Ancient Tamil
ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil
இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil

2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil) உட்பிரிவுகள் மூன்று.
அ. முன்இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil
ஆ. மத்தியஇடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil
இ. பின்இடைக்காலத் தமிழ் – Later Medieval Tamil

3. தற்காலத் தமிழ் (Modern Tamil) உட்பிரிவுகள் மூன்று.
அ. முன் தற்காலத் தமிழ் – Early Modern Tamil
ஆ. பின் தற்காலத் தமிழ் – Later Modern Tamil

முன்பழந்தமிழ் அல்லது தொல்பழந்தமிழ்.
Early ancient Tamil (or) Proto Ancient Tamil.
திராவிட மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு மூல மொழியிலிருந்து உருவானவைகள். தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக இருந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். அவற்றை நாம் ” திராவிட மொழிக் குடும்பம்” என்று அழைக்கிறோம். பல மொழிகள் உருவாக மூலமாக, கருவாக இருந்த மொழியினைத் தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட மொழி (Proto Diravidan Language) என்கிறோம்.

திராவிட மொழிக் குடும்பம்மூலத்திராவிட மொழி அல்லது தொல் திராவிட மொழியாகத் திகழ்ந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ், கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா, கொண்டா, நாயக்கி, குருக், மால்தோ, பிராகூய் போன்றவைகளோடு இன்னும் பல பல உண்டு. திராவிட மொழிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

1. தென் திராவிட மொழிகள் – தமிழ், மலையாளம், கன்னடம்.
2. நடுத்திராவிட மொழிகள் – தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி மேலும் பல   
    உள்ளன.
3. வடதிராவிட மொழிகள் – குருக், மால்தோ, பிராகூப் மேலும் பல உள்ளன.

தமிழ்மொழியின் பெரும்புகழ்திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். சுமார் ஐந்தாயிரம் (5000) ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்று பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (Diravidan Etymological Dictonary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள்.

இத்தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.

தமிழினம் மற்றும் மொழிச் சிதைவுஉலகெங்கும் தன்னிகரற்ற பேரரசனாகக் கொடிகட்டிப் பறந்த தமிழினமும், அவன் தாய் மொழியாகிய தமிழ் மொழியும், நான்குமுறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்களால் அழிவுற்றது. அப்பெரும் கடல் கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே பேரழிவுகளால் மலை மடுவானது, உலகின் பல நாடுகள் அழிவுற்றன. உயிரினங்கள் மாண்டன, மொழிகளும் சிதைவுற்றன. அவ்வாறே குமரிக்கண்டமும் நீரில் மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின் மரபு, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து நாசமாகியது. உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம் பெற்றது.

வரலாற்றுச் சான்றுகள்வரலாறு பலவகை உண்டு. அவற்றில் மொழிவரலாறும் ஒன்று. மொழி வரலாறு என்பது மொழியின் தோற்றம், வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின் மாற்றங்கள், பிறமொழிக் கலவை, வரிவடிவ மாற்றங்கள் இப்படிப் பல மொழிச் செய்திகளை நமக்குத் தருவது மொழி வரலாறு. ஒரு மொழியின் வரலாற்றைப் படைக்க, சான்றுகளே முக்கியப் பங்கேற்கிறது. சான்றுகளின்றிப் படைக்கப்படும் வரலாறுகள் வரலாறுகள் அல்ல, அவைகள் கதைகளாகக் கருதப்படும்.

தமிழ் மொழி வரலாற்றுச் சான்றுகள்மொழிகள் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மொழிகள் தோன்றிய காலம் எதுவென்று சரிவரக் கூறமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது மனிதன் என்று தோன்றினான்? உயிரின வளர்ச்சிகள், மொழிகளின் இயற்கைத் தோற்றம், அவற்றின் வளர்ச்சிகள், போன்ற பலதலைப்புகளில் சிந்தனையைச் செலுத்தவும், ஆய்வினைக் கொள்ளவும், முதல் முதலில் தோன்றியது “டார்வினின் பரிணாமக் கொள்கையே” ஆகும். தமிழ் மொழியின் ஆய்வினைக் கொண்ட பேரறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள், பிறமொழிக் கல்வெட்டுக்கள், அயல்நாட்டினர் குறிப்புகள், நடுகற்கள், அரசுச் சாசனச் செப்பேடுகள், தொல் பொருட்களின் மீது எழுதப்பட்ட வரி வடிவங்கள் போன்ற பல மொழி வரலாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தி மொழி வரலாற்றைப் படைக்கின்றனர்.

ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள்ஒரு வரலாற்றைப் படைக்க, ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஒரு மொழியை அறிந்துகொள்ள அடிப்படையாக அமைவது ஆற்றுச் சமவெளி நாகரிகங்களே! இத்தோடு ஒத்துழைப்புத் தருபவைகள் மொழி இலக்கணங்களும், இலக்கியங்களும், அனைத்து விதமான ஆதாரங்களைக் கொண்டு உலக வரலாற்றைக் கண்டறிந்த ஆய்வு நிபுணர்கள், மொழி வரலாற்றையும் கண்டறிந்துள்ளனர். தமிழ்மொழியின் தொன்மையையும், தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் பின்வரும் பகுதிகளில் நன்கு அறிவோம்.

சார்லஸ் டார்வின்இங்கிலாந்து நாட்டின் வரலாற்று மேதை திரு. சார்லஸ் டார்வின் எழுதிய “உயிரினத்தோற்றம்” வாயிலாக கடல் வாழ் உயிரினங்கள், மற்றும் குரங்கையொத்த உருவைக் கொண்ட “மாந்தன் (Lemuria)” போன்ற உயிரினத் தோற்றங்களை அறிகின்றோம். மேலும் “மனிதனின் பாரம்பரிய வளர்ச்சி” என்னும் நூலின் வாயிலாக குமரிமாந்தனையும், மனித இன பரிணாம வளர்ச்சியையும் உணரமுடிகிறது.

தமிழ் வளர்த்த மூன்று சங்கங்கள்.
பழங்கால மரபிலக்கியப் படி, பாண்டிய மன்னர்கள் சங்கங்கள் தோற்றுவித்து தமிழ் மொழியை வளர்த்தார்கள். கூடவே, தமிழ் மொழி புலமையையும், தமிழ் மக்களின் வாழ்க்கை நெறிகளையும் போற்றினார்கள். பண்டைய தமிழர்களின் அக புற ஒழுக்கங்கள், அரசியல், வீரம், வழிபாடு, விழாக்கள், ஆடல், பாடல், ஓவியம், சிற்பம் போன்ற கலைகள் ஆகியவற்றிற்கு சான்றாக விளங்குவதே சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களே!
அச் சங்கங்களை மூன்று வகையாக தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என பிரித்தனர்.
அவற்றை பற்றிய அரிய தகவல்கள்:
சங்கத்தின் பெயர்: தலைச் சங்கம்
நிறுவுனர்: அகத்திய முனிவர்
தலைவர்: விரிசடைக் கடவுள்
அமைவிடம்: தென் மதுரை
தென் மதுரை பற்றிய ஒரு சிறு குறிப்பு: கடலுக்குள் மூழ்கி போன குமரி கண்டத்தில் அமையப் பெற்ற இந்த மாநகரம் தென் மதுரையானது, பாண்டிய அரசர்களின் முதல் தலை நகரம் ஆகும்.
தொடக்கம்: கி.மு. 9000 (நக்கீரரனாரால் கணிக்கப் பெற்றது)
ஆயுள் காலம்: 4400 ஆண்டுகள்
புலவர்களின் எண்ணிக்கை: 4449
பின்பற்றப்பட்ட இலக்கண நூல்: அகத்தியம்
படைக்கக்பெற்ற நூல்கள்: பரிபாடல், முதுநாரை’, முதுகுருகு, களரியாவிரை
ஆண்ட அரசர்கள்: 89 பேர்; ‘காய்சின வழுதி’ முதல் ‘கடுங்கோன்’ வரை
ஆறு: பஃறுளி ஆறு
மலைத் தொடர்: பன்மலை அடுக்கு
ஆதாரங்கள்:
தலைச்சங்கம் பற்றிய ஆதாரங்கள் அனைத்தும் கி.மு. 2387 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட கடற்கோளாறினால் அழிந்திருக்கும் என்பதே வருந்தத்தக்க செய்தியாகும். 

சங்கத்தின் பெயர்: இடைச் சங்கம்
அமைவிடம்: கபாடபுரம்
கபாடபுரம் பற்றிய ஒரு சிறு குறிப்பு : கபாடபுரம் பாண்டிய மன்னர்களின் இரண்டாவது தலை நகரம் ஆகும். இந்த நகரமும் கடலுக்குள் மூழ்கி போன குமரி கண்டத்திலே தான் அமைந்து இருந்தது.
தொடக்கம்: கி.மு. 4600 ( நக்கீரரனாரால் கணிக்கப் பெற்றது )
ஆயுள் காலம்: 3700 ஆண்டுகள்
புலவர்களின் எண்ணிக்கை: 3700
பின்பற்றப்பட்ட இலக்கண நூல்கள்: அகத்தியம், பூதப்புராணம், இசை நுணுக்கம், மாபுராணம், தொல்காப்பியம்
படைக்கக்பெற்ற நூல்கள்: கலி, குருகு, வெண்டளை, வியாளமலை அகவல்.
ஆண்ட அரசர்கள்: 59 பேர் ; ‘வெண்தேர் செழியன்’ முதல் ‘முட்டதுத் திருமாறன்’ வரை
ஆதாரங்கள்:
இந்த சங்கம் இருந்தமைக்கு ஆதாரங்கள், வால்மீகி ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அர்த்தசாத்திரம் நூலில் கௌடில்ய மகரிஷியும் இதை பற்றி எழுதி உள்ளார். இச் சங்கம் மூன்றாம் கடற்கோளால் அழிந்தது. தொல்க்காப்பியத்தை தவிர ஏனைய நூல்கள் அனைத்தும் அழிந்தன.

சங்கத்தின் பெயர்: கடைச் சங்கம்
நிறுவனர்: பாண்டியன் முட்டதுத் திருமாறன்
அமைவிடம்: மதுரை ( வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தற்போதைய மதுரை மாநகர் )
தொடக்கம்: கி.மு. 900 ( நக்கீரரனாரால் கணிக்கப் பெற்றது )
ஆயுள் காலம்: 1850 ஆண்டுகள்
புலவர்களின் எண்ணிக்கை: 449
பின்பற்றப்பட்ட இலக்கண நூல்கள்: அகத்தியம், தொல்காப்பியம்
படைக்கக்பெற்ற நூல்கள்: குறுந்தொகை, நெடுந்தொகை, குறுந்தொகை நானூறு, நற்றினை நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலி பரிபாடல், குத்து, வரி, சிற்றிசை, பேரிசை, திருக்குறள்
ஆண்ட அரசர்கள்: 49 பேர்; ‘முட்டதுத் திருமாறன்’ முதல் ‘உக்கிர பெருவழுதி’ வரை. முட்டதுத் திருமாறன், கபாடபுரம் விட்டு வெளியேறி மதுரையில் ஆட்சி அமைத்தான்.
ஆதாரங்கள்:
கடைச் சங்கத்தைப் பற்றி பத்தாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்ட சின்னமனூர் கல்வெட்டு தான், தொல்லியல் துறைக்கு கிடைத்த முதல் ஆதாரம் ஆகும்.


முதல் தமிழ் சங்கம்.
(தலைச்சங்கம் அல்லது முதல் சங்கம்) கி.மு. 5000 – கி.மு. 3000 வரை.
பழம்பாண்டியமன்னனான “காய் சினவழதி” என்பவனால் முதல் சங்கம் நிறுவப்பட்டது. பழம் பாண்டி நாட்டின் தலைநகராக குமரியாற்றங்கரையில் வீற்றிருந்த தென் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை ஆய்ந்தனர். மன்னன் காய்சினவழுதி முதல் முதலாம் கடுங்கோன் வரை, 89 பாண்டிய மன்னர்கள் அச்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து தமிழை ஆய்தனர். அவர்களின் அகத்தியர் தலைசிறந்த புலவராய்த் திகழ்ந்தார் தென்மதுரையை தலைநகராகக் கொண்டு முதல் சங்கம் கி.மு. 5000 முதல் கி.மு. 3000 வரை ஏறக்குறைய 2000 ஆண்டுகள் சிறப்புடன் வளர்ச்சி பெற்று வந்துதது.

அக்காலத்தில் ஈழம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பக்றுளியாற்றிற்கும் குமரிக்கோட்டிற்கும் இடையே இருந்த பெரும் நிலப்பகுதியே பழம் பாண்டிய நாடு. இதன் தலைநகர் தென்மதுரை. ஏழுபனை நாடு, ஏழு தெங்கு நாடு, ஏழு முன்பாலைநாடு, ஏழு பின் பாலைநாடு, ஏழு மதுரை நாடு, ஈழநாடு, நாக நாடு, பெருவள நாடு, ஒளிநாடு போன்ற 49 நாடுகள், மலைகள், ஆறுகள், காடுகள் கொண்ட நாடு பாண்டிய நாடு என அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.

திடீரன நிகழ்ந்த கடற்கோளால் பக்றுளியாறும் பன்மலையடுக்கும், குமரியாறும், உரிக்கோடும், தென் மதுரையும் முதல் தமிழ்ச்சங்கமும் முழுமையாய் அழிந்து கடலுக்குணவாயின. தரைப்பகுதிகளாக இருந்த பாண்டிய நாடு அழிந்து இந்து மகா சமுத்திரமாக மாறியது. தலைச் சங்கமும் தலைச்சங்க நூல்களும் அழிந்தன. பாண்டி நாட்டுடன் பழமை வாய்ந்த லெமூரியாக் கண்டமும் அழிவுற்றது எனப் பேராசிரியர் ஹெக்கல் கூறுகிறார்.


இரண்டாம் சங்கம்.
இடைச்சங்கம் அல்லது இரண்டாம் சங்கம். கி.மு. 3000 முதல் 1500 வரை
முதல் சங்கமிருந்த தென்மதுரை அழிந்து போகவே மீண்டும் சங்கத்தை உருவாக்க எண்ணிய “பாண்டிய மன்னம் கடுங்கோன்” என்பவன் கபாடபுரத்தை அமைத்து அதில் இடைச்சங்கத்தை நிறுவி தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தான். இச்ச்கம் சுமார் கி.மு. 3000 முதல் கி.மு 1500 வரை ஏறக்குறைய 1500 ஆண்டுகள் நிலை பெற்றிருந்தது. இச்சங்கத்தில் அவைப் புலவர்களாக தொல்காப்பியர், கீரந்தையர் போன்ற பெரும் புலவர்களும் வீற்றிருந்தனர். இவர்களுக்கு அகத்தியம், மாதிரி நூலாகத் துணைபுரிந்தது. வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் போன்றவைகளின் வாயிலாக கபாடபுரத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. மேலும் கபாடபுரம் பாண்டியனின் தலைநகரமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த துறைமுகமாகவும் திழ்ந்தது.
“இவ்வகை யரசிற் கவியரங்கேறினார்
ஐவகையரசர் ஆயிடைச் சங்கம்
விண்ணகம் பரவும் மேதகுகீர்த்திக்
கண்ணகல் பரப்பிற் கபாட புரமென்”
என்ற பழைய அகவற்பாவும் கபாடபுரத்தில் இடைச்சங்கம் இருந்த செய்தியை சுட்டிக் காட்டுகிறது.
இடைச்சங்க காலத்தில் பல இலக்கியங்களும், இலக்கண நூல்களும் வெளிவந்தன. அவைகள் பெருங்கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, இசை நுனுக்கம், தொல்காப்பியம் போன்றவைகளாம். இதில் தொல்காப்பியம் தலைசிறந்த நூலாகப் போற்றப்பட்டது. கி.மு. 1500 அளவில் ஏற்பட்ட கடற்கோளானது கபாடபுரம் இருந்த பகுதி முழுவதையும் அழிந்து விட்டது. கடற்கோளால் பாண்டிய நாட்டையும், இரண்டாம் தமிழ்ச் சங்கத்தையும் இழந்ததோடு இடைச்சங்கம் இலக்கியங்களையும் இழக்க நேரிட்டது.


மூன்றாம் சங்கம்.
கடைச்சங்கம் அல்லது மூன்றாம் தமிழ்ச்சங்கம். கி.மு. 1500 முதல் கி.பி. 250 வரை
கபாடபுரம் அழிவுற்ற அதேவேளை இடைச்சங்மும் சேர்ந்தே அழிவுற்றது. அழிவுற்ற பாண்டி நாட்டையும் தமிழ் சங்கத்தையும் மறுபடியும் உருவாக்க எண்ணிய “முடத்திருமாறன்” என்னும் பாண்டிய மன்னன் தன்னாட்டிற்குள் கூடல் என்னும் மதுரை மாநகரை உண்டு பண்ணி மூன்றாம் தமிழ்ச் சங்கமான கடைச்சங்கத்தை உருவாக்கினான். கடைச்சங்க காலம் கி.மு. 1500 முதல் கி.பி. 250 வரை. இப்பொழுது உள்ள மதுரையில் கடைச்சங்கம் நிலைப்பெற்றிருந்தது என இறையனார் அகப்பொருளுரை கூறுகிறது. இச்சங்கத்தைப்பற்றி செய்திகள் நமக்கு நிறையக் கிடைத்துள்ளன. கடைச்சங்கத்தில் 49 அவைப் புலவர்கள் தமிழாய்ந்துள்ளனர். அவர்கள் நக்கீரன், நல்லந்துவனார், சீத்தலைச்சாத்தனார் போன்றவர்கள் தலைசிறந்தவர்கள் ஆவார். கபிலர், பரணம் போன்ற பெரும்புலவர்களும் கடைச்சங்ககாலத்தவர்களே.இச்சங்கத்தில் தான் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளும் இச்சங்கத்தின் இறுதிக் காலத்தில் வாழ்ந்தவரே. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கடைச்சங்கத்தில் இயற்றப்பட்டவைகளே.
கடைச் சங்கத்தின் சிறப்புகள்
பழைய திருவிளையாற் புராணத்தின் வாயிலாக சங்கப் பலகை என்று ஒன்று இருந்த செய்திகளை அறியமுடிகிறது. “மொழியறி சங்கப் பலகை” என்றும் “பாவறி சங்கப்பலகை என்றும்” இருவகை சங்கப்பலகைகள் இருந்ததாக நமக்குத் தெரிவிக்கின்றது. பாடிக்கொண்டிருக்கும் பாடலை சங்க பலகை ஏற்றால்தான் புலவர் பெருமக்கள் அப்பாக்களைப் போற்றுவார்களாம். பாண்டிய மன்னன் ஒருவன் கடைச்சங்கத்திலிருந்த நாற்பத்தொன்பது புலவர்களின் உருவங்களை சிலைகளாகச் செய்து நிறுவினானாம். ஒரு சமயம் பொய்யாமொழிப் புலவர் அச்சிலைகள் முன் நின்று பாடினாராம். அவர் பாட்டைக் கேட்டு ரசித்த அப்பதுமைகள் தலையசைத்ததாகப் பழஞ்செய்தி கூறுகின்றது.
கடைச்சங்கத்தின் அழிவு
சிறந்து விளங்கிய கடைச் சங்கமாது பாண்டிய மன்னன் உக்கிர பெருவழுதியின் காலத்திற்குப்பின் நில்லாது மறைந்தொழிந்தது. அவனுப்பின் வந்த பாண்டியர்கள் சங்கம் நிறுவாது, தமிழை வளர்க்காது போயினர். காரணம், அரசியல் குழப்பங்கள் பல நிகழ்ந்தன. களப்பியர்களின் படையெடுப்புகள், பல்லவர்களின் படையெடுப்புக்கள், பாண்டிய நாட்டில் பன்னீராண்டு கடும் பஞ்சம் காரணமாக சங்கப் புலவர்களைப் பாதுகாக்க முடியாமற்போகவே அவர்கள் சேர, சோழ நாடு நோக்கிச் சென்று விட்டனர். இச் சூழ்நிலையில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சங்கம் அழிவுற்றது என இறையனார் அகப்பொருளுரை தெரிவிக்கிறது.
நான்காம் சங்கம்.
நான்காம் தமிழ்ச்சங்கம் கி.பி. 1901 முதல்
பிலவ ஆண்டு ஆவணித் திங்கள் 13-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை சித்திரை மீன் கூடிய நன்னாளில் 14. 09.1901 பகல் 1.30 மணிக்கு மேல் 2.45 மணிக்குள் மதுரை சேதுபதி உயர்பள்ளி மண்டபத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர் அவர்களால் நிறுவப்பட்டது. அதே நன்னாளில் 1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை, 2. பாண்டியன் புத்தகசாலை 3. நூலாராய்ச்சி சாலை என்பனவும் தொடங்கப்பெற்றன.
சங்கம் தோன்றக் காரணங்கள்
முதல், இடை, கடையென்னும் முச்சங்கங்களும் அழவுற்று சிதைந்தன. கடைச்சங்க பாண்டி மன்னன் உக்கிர பெருவழுதிக்குப் பின் கி.பி. 250ல் கடைச்சங்கம் முழுமையாய்ச் செயல்இழந்து விட்டது. பண்டைய நாளில் தமிழ் மொழிகும், தமிழ்ச் சங்கத்திற்கும் இருந்து வந்த ஏற்றத்தையும், பின்நாளில் தமிழுக்கு ஏற்பட்ட தாழ்வையும் எண்ணி வருந்திய பாண்டியத்துரைத் தேவர், மீண்டும் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் நிலை ஏற்றம் பெற்று, பண்டைய நிலைக்கு உயர வேண்டும் என்னும் பேரார்வப்பெருக்கால் சுமார் 1651 ஆண்டுகளுக்குப்பின் 1901 ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தனர்.
சங்க நோக்கங்கள்
1. நான்காம் தமிழ்ச்சங்கம் பொழுது போக்குக்காகவோ, பொருள் 

    ஈட்டுவதற்காகவோ, அரசியல் செல்வாக்குப் பெறுதற்காகவோ அமைக்கப்பட்ட 
    அமைப்பு அல்ல.
2. அரசின் பொருட்கொடையையோ, பல்கலைக் கழகங்களின் நல்குதலையோ  

    எதிர்பார்த்து தொடங்கப்பட்டதும் அல்ல.
3. தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், முச்சங்கம் கண்டு முன்பு தமிழ் மொழி 

   பெற்றிருந்த உச்ச நிலைக்கு மீண்டும் உயர்த்த வேண்டும் என்ற 
    நன்னோக்கோடும் உருவாக்கப்பட்ட சங்கமே நான்காம் தமிழ்ச்சங்கம்
தொடக்க நாளிலே உருவாக்கப்பட்ட சங்கத் தீர்மானங்கள்
நான்காம் தமிழ்ச்சங்கத் தொடங்க விழாவிற்கு மன்னர் பாசுகர சேதுபதியவர்கள் தம் பரிவாரங்கள் புடைசூழ வந்திருந்தார். சேதுநாட்டு அவைப்புலவர்களும் பாண்டித்துரை தேவர் தம் அவைப் புலவர்களும் குழுமினர். பெரும்புலவர்களாகிய உ.வே. சாமிநாதைய், சடகோப ராமாநுசாச்சாரியார், ராகவ ஐயங்கார், பரிதிமாற் கலைஞர், சண்முகம்பிள்ளை விழாவிற்கு வந்திருந்தனர். மதுரை மாநகரமே விழாக்கோலம் கண்டது. சங்கத் தொடக்க நாளிலேயே கீழ்க்காணும் “9 தீர்மானங்கள்” நிறைவேற்றப்பட்டன.
1. தமிழ்க் கல்லூரி உண்டாக்குதல்.
2. தமிழ் ஏடுகளை அச்சிட்டு பயன்படுமாறு தொகுப்பது.
3. வெளிவராத அரியநூல்களை அச்சிட்டுப் பரப்புதல்.
4. வடமொழி ஆங்கில நூலைகளை தமிழில் மொழி பெயர்த்தல்
5. தமிழ்க் கல்வி பற்றிய செந்தமிழ் இதழ் வெளியிடுதல்.
6. தமிழில் தேர்வு நடத்தி பட்டமும் பரிசும் வழங்குதல்.
7. தமிழ் அறிஞர்களைக் கொண்டு பேருரையாற்றச் செய்தல்.
8. தமிழில் திறமிக்க பெருமக்களை ஒன்று கூட்டி தமிழாராய்தல்.
9. வேண்டத்தக்க புது நூல்களும் புத்துரைகளும் படைத்து அவற்றை 

    அரங்கேற்றுதல்

இந்த ஒன்பது நோக்கங்களை நிறைவேற்றத்தக்க ஏழு அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கின.

1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை.
2. பாண்டியன் புத்தக சாலை.
3. நூலாராய்ச்சி சாலை.
4. கல்விக் கழகம்.
5. தமிழ்ச் சங்க முத்திராசாலை (அச்சகம்)
6. செந்தமிழ் என்னும் திங்களிதழ்
7. தமிழ்த் தேர்வு என்பவைகளாம்.

சேது சகோதரர்களின் கொடைகள்
ஒன்றுவிட்ட உடன் பிறப்புக்களான மன்னர் பாண்டித்துரையாரும் மன்னர் பாசுகர சேதுபதியவர்களும் இளம்வயிதலேயே தந்தையர்களை இழந்தபோதிலும் மனம் தளராமல் தமிழ்த் தொண்டாற்றத் துணிந்தனர். இன்று நான் காணும் சேதுபதி மேல்நிலைப்பள்ளி, செந்தமிழ்க் கல்லூரி, நான்காம் தமிழ்ச் சங்கம் போன்ற அனைத்துமே அவர்கள் தந்தருளிய கொடைகளே. வேந்தர் பாசுகரசேதுபதி சங்கத் தொடக்க நாளிலே 10000 வெண்பொன் வழங்கி வாழ்த்தினர். பாண்டித்துரைத் தேவர் தாம் குடியிருந்த மாளிகையையே சங்கத்திற்குத் தியாகம் செய்த்ததோடு மட்டுமல்லாமல் சங்கம் என்ற குழந்தை எந்தவிதக் குறையின்றி வளரத் தேவைபடும் அனைத்து வசதிகளையும் தம் சொந்தச் செலவிலேயே பராமரித்தார். சங்கம் என்றுமே சுயமாக தங்குதடையின்றி நடைபெறுவதற்கு தக்க வகையில் சில நிலையான அறக்கட்டளை பாண்டிய மன்னர் பாசுகர் சேதுபதியவர்கள், கடைச் சங்க பாண்டிய மன்னம் உக்கிரப் பெருவழுதி காலத்தில் கி.பி. 250ல் மறைந்த தமிழ்ச் சங்கம், 1901இல் பொன்பாண்டித்துரைத் தேவரால் மீண்டும் நான்காம் தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் உயிர்பெற்று எழுந்தது. நான்காம் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி, உயிர்கொடுத்து, உடல் வளர்த்து, கல்லூரி கண்டு, செந்தமிழ் என்னும் திங்களிதழ் பெற்று, தமிழ்மனம் வீச வீரநடை போடுகிறதென்றால் அது சேது சகோரதர்கள் வழங்கிய கொடைகளே.

இன்றும் நான்காம் தமிழ்ச் சங்கம்
அன்று, அதாவது 1910 இல், எவ்வளவு சிறப்பாக இந்த நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டதோ அதே சிறப்புடன் அதே நோக்கங்களை நிறைவேற்றி, வளர்ச்சிப் பாதை நோக்கி முன்னேறிச் செல்கிறது. இன்று சங்கம் தொடங்கப்பட்ட அன்றே நிறைவேற்றப்பட்ட முதல் அய்ந்தாம் தீர்மானங்கள் உடனே நிறைவேற்றப்பட்டு, செந்தமிழ்க் கல்லூரியாகவும், செந்தமிழ் திங்களிதழாகவும் மலர்ந்து தமிழ்த் தொண்டாற்றி வருகின்றன. பல தமிழ் அறிஞர்களையும், தமிழ் முனைவர்களையும், தமிழ் இலக்கிய மேதைகளையும் உருவாக்கி மகிழ்கிறது நான்காம் தமிழ்ச் சங்கம்.

தமிழ்ச் சங்க நிர்வாகங்களை, தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு கண்காணித்து வருகிறது. ஆட்சிக் குழுவின் தலைவராக – முகவை மன்னர் மாட்சிமை தாங்கிய திரு, இராசா நா .குமரன் சேதுபதியவர்களும், துணைத் தலைவராக திருமதி. இராணி இலட்சுமி நாச்சியார் அவர்களும் மாண்புமிகு அய்யா திரு. இரா. அழகுமலை அவர்கள் செயலாளராகவும் மற்றும் ஒன்பது ஆட்சிக்குழு உறுப்பினர்களும் ஆட்சிக் குழுவில் பங்கேற்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

செந்தமிழ்க் கல்லூரியின் நிர்வாகங்களை கல்லூரிக் குழு கண்காணிக்கிறது. கல்லூரிக் குழுவின் தலைவராக மாண்புமிகு டாக்டர் ந. சேதுராமன் அவர்களும், செயலாளராக மாண்புமிகு அய்யா திரு. இரா. குருசாமி அவர்களும் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்டு சிறப்புடன் செயல்பட்டுவருகிறது. செந்தமிழ் திங்கள் இதழ் சிறப்பாகத் தமிழ்த் தொண்டாற்றி வருகிறது.

பாண்டித்துரைத் தேவர்கள் உருவச்சிலை
கொடைவள்ளல், சங்கம் கண்ட தமிழ்ச் செம்மல், மாண்புமிகு மன்னர் பாண்டித்துரைத் தேவரின் திரு உருவச் சிலை மீண்டும் அதே இடத்தில் 2007இல் சங்கம் நிறுவியது. சங்கத் தலைவர், துணைத்தலைவர், சங்கச் செயலர், சங்க ஆட்சிக்குழு, பொதுக்குழு, கல்லூரிக் குழு, கல்லூரிப் பேராசிரியப் பெருமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களின் ஆர்வத்தாலும் அயராத உழைப்பாலும் சிலை நிறுவப்பட்டதோடு மட்டுமல்லாமல், மாணவ மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதைகளோடு பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் குழு
நான்காம் தமிழ்ச் சங்கவெளியீடாகிய செந்தமிழ் என்னும் திங்கள் இதழ், 1902 முதல் இன்று வரை மிகச்சிறப்பாக தமிழ்த் தொண்டாற்றி வருகிறது. இவ்விதழை சிறப்புடன் வெளியட ஆசிரியர் குழு ஒன்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. இக்குழுவில் தமிழறிஞர்களும், பெரும்புலவர்களும், பேராசிரியப் பெருமகளும், முனைவர் பெருமக்களும், மொழி ஆய்வாளர்களும், தமிழார்வளர்களும் பங்கேற்று தொண்டாற்றுகிறார்கள். தமிழ் அறிஞர் முனைவர் திரு. தமிழண்ணல், பெரும்புலவர் திரு. இரா இளங்குமரன், நா. பாலுசாமி, ம. ரா. போ. குருமசாமி, அ.அ. மணவாளன், கதிர் மகாதேவன் மற்றும் தமிழார்வளர்கள் ஆலோசகர்களாகவும் அவைப் புலவர்களாகவும் வீற்றிருக்கின்றனர்.


நான்காம் தமிழ்ச்சங்கம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவர்களால் 1901 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கம் நூறு ஆண்டைக் கடந்து எட்டாம் ஆண்டில் நடைபயின்று கொண்டுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பே நடைபெறவேண்டிய நூற்றாண்டு விழா இவ்வாண்டு 2008ல் நடைபெறத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் சங்க ஆட்சிக்கு குழு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு விழா வெற்றிவாகை சூடட்டும். கொடை வள்ளல் பாண்டித்துரைத் தேவரின் புகழ் ஓங்கட்டும். நான்காம் தமிழ்ச் சங்கம் செழித்தோங்கி வளரட்டும். நாற்சங்கம் கண்ட செம்மொழி தமிழே நீ வாழ்க!
சங்கங்கள்.
நான்கு தமிழ்ச் சங்கங்கள்.
பாண்டிய மன்னர்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட அன்பின் மிகுதியாலும், ஆழ்ந்த பற்றுதலாலும் தங்கள் தலைநகரங்களில் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தார்கள் என்று பல இலக்கியச் சான்றுகளின் வாயிலாகவும், செப்பேடுகளின் வாயிலாகவும், மன்னர்களின் கல்வெட்டுகள் வாயிலாகவும் நாம் அறிகின்றோம். முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகிய முப்பெரும் தமிழ்ச்சங்கங்கள் அழிந்து போன போதிலும் நான்காம் தமிழ்ச் சங்கம் இன்றும் இயங்கி கொண்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்றே. தமிழ்ச் சங்கங்களைப் பற்றியும், சங்க வரலாற்றுச் செய்திகளைப் பற்றியும் அறிய பல இலக்கியச் சான்றுகள் உதவுகின்றன.

சங்கச் சான்றுகள்
1. கடைச்சங்கப் புலவராகிய சீத்தலைச்சாத்தனார்
“புலம்புரிச் சங்கம் பொருளொடு முழுங்க” என மணிமேகலையில் கையாண்டுள்ளார். மற்றுமோரிடத்தில்,
“பன்னீராண்டு பாண்டி நன்னாடு மன்னுயிர் மனிய மழை வளமிழந்தது புலவரை எல்லாம் வம்மின் யான் உங்களைப் புரந்தரகில் லேன்”
என்கிறார். இதன் மூலம் பாண்டியர்கள் சங்கம் வளர்த்தனர் எனத் தெளிவாகிறது.
2. முச்சங்கச் செய்திகளையும் வரலாறுகளையும் தனியொரு அகவற்பாவாலும், சிலப்பதிகாரத்தாலும், இறையனார் களவியல் உரைகளாலும் அறிய முடிகிறது. பிற்கால திருவிளையாடலிலும் சில சங்கச் செய்திகள் உள்ளன.
3. “மதுராபுரிச் சங்கம் வைத்தும் மகா பாரதம் தமிழ்ப் படுத்தும்” எனச் செப்புகிறது சின்னமனூர் செப்பேடு – பாண்டியன் மெய்க்கீர்த்தி.
4. “தலைச் சங்கப் புலவனார் தம்முள்” – பெரிய புராணம்.
5. “சங்கத் தமிழ் மூன்றும் தா” – ஔவையார்.
6. “புகலி ஞானசம்பந்தன் உரை செய் சங்கமலி செந்தமிழ்கள்” 

திருஞானசம்பந்தர். திருவாதவூர்.
7. “இமிழ்குரல் முரசன் மூன்றுடன் நாளும் தமிழ்கெழு கூடல் தண் கோல்வேந்தே” காரிக் கண்ணனார் புறம் 56.
8. “தொல்லாணை நல்லாசிரியர் புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு  திருவின் நெடியோன்” . மதுரைக்காஞ்சி 761 – 763.
9. “தமிழ் நிலைபெற்ற தாங்கருமரபின் மகிழ்நனை மறுகின் மதுரை”.

சிறு பாணாற்றுப்படை 66-67
10. “நிலனாவிற்றிரிதருஉம் நீண்மாடக்கூடலார் புலனாவிற் பிறந்த சொற் புதிதுண்ணும் பொழுதன்றோ”. கலித்தொகை 35
11. “சங்க முத்தமிழ்” – ஆண்டாள் பெரிய திருமொழி
12. “பாடு தமிழ் வளர்த்த கூடலின் வடாது” புறந்திரட்டு – புகழ்மாலை
மேல்காணும் பல்வேறு இலக்கியச் சான்றுகளின் வாயிலாக முச்சங்கங்கள் இருந்த உண்மைகளை தெளிவாக உணரமுடிகிறது. மேலும் நக்கீரனாரின் இறையனார் அகப்பொருளைரையும் கடைச் சங்கம் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கின்றது. இன்னும் பல ஆதாரங்கள் உண்டு.


நற்குடி வேளாளர் வரலாறு. 
நற்குடி வேளாளர் வரலாறு என்பது பாண்டியர் வரலாற்றைக் கூறும் நூலாகும். இதன்படி பாண்டியரின் ஐந்து பிரிவில் இருங்கோவேள் பிரிவினர் வழி வந்தவர்கள் தொடர்ந்து பட்டம் கட்டிக் கொள்வதைக் கைவிடவில்லை. இதன் வண்ணம் கி.பி. 1944 இல் இயற்கை எய்திய போற்றியடியா இருங்கோவேள் 201 ஆவது பாண்டிய மன்னர் மரபின் பட்டம் கொண்டிருந்தார் என அந்நூல் கூறுகிறது. மொத்தத்தில் இது 201 பேரை பாண்டியர் மன்னர்களாக குறிப்பிடுகிறது.
  1. கி.மு. 2082 - முடத்திருமாறன் - 6ஆவது பாண்டியன்
  2. கி.மு. 1932 - மாறன் வழுதி - 10 ஆவது பாண்டியன்
  3. கி.மு. 1002 - 960 - திருவழுதி - 45 ஆவது பாண்டியன்
  4. கி.மு. 910 - 854 - வீர பாண்டியன் - 49 ஆவது பாண்டியன்
  5. கி.மு. 884 -832 - பாண்டீசன் (நிலந் தருதிருவின்பாண்டியன்) - 50 ஆவது பாண்டியன்
  6. கி.மு. 500 - 450 - பல்சாலை முதுகுடுமி பெரு வழுதி - 66 ஆவது பாண்டியன்
  7. கி.மு. 450 - 400 - கருங்கை யொளைவாட் பெரும் பெயர் வழுதி - 67 ஆவது பாண்டியன்
  8. கி.மு. 400 - 380 - போர்வல் வழுதி - 68 ஆவது பாண்டியன்
  9. கி.மு. 380 - 340 - கொற்கை வழுதி நற்றேர் வழுதி - 69 ஆவது பாண்டியன்
  10. கி.மு. 340 - 302 - தேவ பாண்டியன் - 70 ஆவது பாண்டியன்
  11. கி.மு. 302 - 270 - செய புஞ்சன் - 71 ஆவது பாண்டியன்
  12. கி.மு. 270 - 245 - பசும் பூண் பாண்டியன் - 72 ஆவது பாண்டியன்
  13. கி.மு. 245 - 220 - ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் - 73 ஆவது பாண்டியன்
  14. கி.மு. 220 - 200 - பாண்டியன் நன்மாறன் - 74 ஆவது பாண்டியன்
  15. கி.மு. 200 - 180 - கடலன் வழுதி - நெடுஞ்செழியன் - 75 ஆவது பாண்டியன்
  16. கி.மு. 180 - 160 - மருங்கை வழுதி - 76 ஆவது பாண்டியன்
  17. கி.மு. 160 - 150 - பாண்டியன் இத்தமன் புலிமான் வழுதி - 77ஆவது பாண்டியன்
  18. கி.மு. 150 - 140 - பாண்டியன் கீரன் சாத்தன் - 78 ஆவது பாண்டியன்
  19. கி.மு. 120 - 100 - பாண்டியன் ஏனாதி (நெடுங் கண்ணன்) - 80 ஆவது பாண்டியன்
  20. கி.மு. 100 - 87 - கொற்கை வழுதி(பசும்பூண்பாண்டியன் II) - 81ஆவது பாண்டியன்
  21. கி.மு. 87 - 62 - தேவபூடணன்(இலவந்திகைதூஞ்சியநன்மாறன் - 82ஆவது பாண்டியன்
  22. கி.மு. 62 - 42 - தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் - 83ஆவது பாண்டியன்
  23. கி.மு. 42 - 1 - கானப்பேரெயில் கட உக்கி பெருவழுதி - 84 ஆவது பாண்டியன்
  24. கி.மு. 1 - 30 - பாண்டியன் அறிவுடைநம்பி - 85ஆவது பாண்டியன்
  25. கி.பி. 30 - 60 - வெள்ளிநம்பலத்து துஞ்சிய பெருவழுதி - 86 ஆவது
  26. கி.பி. 142 - ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் - 87 ஆவது பாண்டியன்
  27. கி.பி. 150 - வெற்றிவேற் செழியன் - 88 ஆவது பாண்டியன்
  28. கி.பி. 172 - நெடுஞ்செழியன் II - 89 ஆவது பாண்டியன்
  29. கி.பி. 198 - உக்கிர மாறன் - 90 ஆவது பாண்டியன்
  30. கி.பி. 220 - 250 பன்னாடு தந்த மாறன் வழுதி - 91 ஆவது பாண்டியன்
  31. கி.பி.250 - 270 கூடாகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி - 92 ஆவது பாண்டியன்
  32. கி.பி. 270 - 297 தென்னவன் கோ - 93 ஆவது பாண்டியன்
  33. கி.பி. 298 - 310 பராக்கிரம பாகு (மானாபரணன்) - 94 ஆவது பாண்டியன்
  34. நல்வழுதி கலியன் கூத்தன் - 95 ஆவது பாண்டியன்
  35. கடலன் வழுதி (கழுகு மலை கல்வெட்டு - 96 ஆவது பாண்டியன்
  36. பொற்கைப் பாண்டியன் - 97 ஆவது பாண்டியன்
  37. பாண்டியன் மதிவாணன் - 98 ஆவது பாண்டியன்
  38. கி.பி. 475 -490 கடுங்கோன் - 103 ஆவது பாண்டியன்
  39. கி.பி. 498 - உக்கிரபாண்டியன் - 104 ஆவது பாண்டியன்
  40. கி.பி. 498 - 540 - சோம சுந்தர பாண்டியன் - 105 ஆவது பாண்டியன்

தமிழின் வளர்ச்சி.
தமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும். இத்தமிழ் மொழிக்கு வரிவடிவம் அதாவது எழுத்து உருவம் என்று உருவானது? என்ற வினாவிற்குச் சரியான விடை கிடைக்கவில்லை. தற்சமயம் நமக்குக் கிட்டியுள்ள ஆதாரங்களைக் கொண்டு சில மொழிவழி உண்மையை உணர்கிறோம். இன்று நாம் பேசும் தமிழ்மொழி பல கால கட்டங்களில் பல மொழிகளோடு இணைந்து பல உருக்கள் மாறி இறுதி நிலையில் காண்கிறோம். ஆனால் தொல்கால இந்திய எழுத்து முறையை ஆராய்ச்சியாளர்கள் தமிழெழுத்து முறை மற்ற இந்திய எழுத்து முறைகளைக்குத் தாய் பெருங்குரல் கொடுக்கிறார்கள் அறிஞர்கள் பூலரும், ஐராவதம் மகாதேவன் அவர்களும்.

தமிழ் வட்டெழுத்து.
தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களில் மிகமிகத் தொன்மை வாய்ந்தது வட்டெழுத்து முறையே! வளைந்த கோடுகள் அவ்வெழுத்து முறையில் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டதால் அம்முறைக்கு வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது. இதன் அடிப்படையில் சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் கோலெழுத்துக்கள் அல்லது “மலையாண்மா” என்ற எழுத்து முறை உருவானது. இக்கோலெழுத்துகள் செப்பேடுகளிலும் ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்டன. அக்கோலெழுத்துக்களே ஆங்காங்கே கிடைத்துள்ள கல்வெட்டுக்களிலும், நடு கற்களிலும் தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்தாக உருமாறி மலர்ந்து வளர்ந்தது என இரா. நாகசாமி அவர்கள் மார்தட்டிக் கூறுகிறார்.

வட்டெழுத்தின் தோற்றம்.
வட்டெழுத்துக்களின் ஆரம்ப நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கு, நடுகற்களே சரியான சாட்சிகள். நடுகற்கள், நடப்பட்ட கற்களைத் தான் நடுகற்கள் என்று வரலாற்று மேதைகள் கூறுகின்றனர். அதன் வாயிலாகத் தமிழ் வட்டெழுத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. தமிழ் பிராமியில் புழக்கத்திலிருந்த “தமிழ்” எழுத்துக்கள் தான் தமிழ் வட்டெழுத்தாக மாறி வளரத் தொடங்கியது என வரலாறு ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

கி.பி. 3 – ஆம் நூற்றாண்டிலிருந்து வட்டெழுத்தானது தமிழ்ப் பிராமியிலிருந்து பிரியத் தொடங்கியது. பிராமியிலிருந்து பிரியத் தொடங்கிய வட்டெழுத்துக்கள் நாளடைவில் சிறுகச் சிறுக வளர்ந்து கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் தனித்தன்மை பெற்றது எனலாம்.

அன்று செந்தமிழ் நாடு எனப் போற்றப்பட்ட பாண்டிய நாடு “தன்னார் தமிழ் அளிக்கும் தென் பாண்டி நாடு” என மாணிக்கவாசகரால் பாராட்டப்பட்டது. தமிழை வளர்த்த பாண்டியர்கள் வட்டெழுத்து முறைக்கு ஊக்கம் காட்டினர். கொடுந்தமிழை மேற்கொண்ட சேரர்களும் வட்டெழுத்தில் ஆர்வம் காட்டினர். இரு நாட்டிலும் வட்டெழுத்தில் அரசுச் சாசனங்கள் எழுதப்பட்டன என்றால் அதன் வளர்ச்சியைத் தெரிந்து கொள்ளுங்கள்.

வட்டெழுத்துப் பகுதிகள்.
தமிழ் வட்டெழுத்து தமிழகம் முழுவதிலும் பரவிச் செயல்முறையில் இருந்தது. தமிழகப் பகுதிகளாகிய மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், கோவை, சேலம், வடாற்காடு, தென் ஆற்காடு, செங்கற்பட்டு போன்ற பகுதிகளிலும் பரவியிருந்தது. கொங்கு நாட்டு மன்னர்களின் சாசனங்களிலும் தமிழ் வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.

தமிழ்க்கோலெழுத்துக்கள் – “மலையாண்மா”
பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் பல நூற்றாண்டுகள் கொடி கட்டிப்பறந்த வட்டெழுத்துக்கள் நாள்பட நாள்பட அவை ஒழுங்கு முறையில் எழுதப்படாமல் உருமாற்றங்களைப்பெற்று தமிழ் வட்டெழுத்து ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. இவ்வெழுத்து முறையைத்தான் திருவாங்கூர் போன்ற கேரளப் பகுதிகளில் “மலையாண்மா” என்றும் “கோலெழுத்து” என்றும் அழைக்கலாயினர். சோழர்களின் ஆட்சிக் காலத்தில் வட்டெழுத்து குறையத்தொடங்கியது. ஆனால் சேர நாட்டில் கி.பி. 1663 வரை நிலைத்திருந்தது என திரு. டி.ஏ. கோபிநாதராவ் கூறுகிறார்.

வட்டெழுத்து வீழ்ச்சசி.
பாண்டிய நாட்டில் மிகச் செல்வாக்குடன் ஓங்கி வளர்ந்த பாண்டிய நாட்டை வென்ற சோழர்கள் தமிழ் வட்டெழுத்துக்களை ஆதரிக்கவில்லை. முதலாம் பராந்தகச்சோழன் முதலாம் இராசராசன் காலம் வரையாண்ட சோழர்கள் வட்டெழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்து பாண்டியர் பகுதிகளில் மறைந்துவிட்டது.

தமிழ்க் கிரந்தம் உதயம்.
தென் இந்தியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் வைத்தாண்ட சோழர்கள் காலத்தில் தமிழ் வட்டெழுத்து மங்கி கிரந்தத் தமிழ் மேலோங்கியது. பல்லவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட “பிராமிலிபி”யின் வழிவந்த கிரந்தமும், அதனை ஒட்டி வளர்ந்த கிரந்தத் தமிழும் வழக்காறு பெற்றது. சோழ மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. வட்டெழுத்துக்கள் மறைந்து கிரந்தத் தமிழ் தலை தூக்கியது.

தமிழ் இலக்கியங்கள்
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்” எனப் புகழப்படும் தமிழ் உலகில் பல விலக்கியங்கள் தற்பொழுது தமிழகத்தில் தமிழ் பற்றும் புத்துணர்வும், மொழித் தூய்மையும், ஒழுங்குமுறை எழுத்து வடிவமைப்பும் அமையக் காரணங்களாக அமைகின்றது. இலக்கியங்கள் அனைத்துமே பெரும்பாலும் 1. முதற்பொருள், 2. கருப்பொருள், 3. உரிப்பொருள், என வகைப்படுதப்பட்டுள்ளன.

நம் தமிழ்மொழி இலக்கியவளம் பெற்ற மொழியாகும். இலக்கியங்களும் இலக்கணநூல்களும் பெருகி இருந்தமையால் தமிழ்மொழி திருந்திய மொழியாக, திருத்தம் செய்யப்பட்ட மொழியாக, ஒழுங்கு படுத்தப்பட்ட மொழியாகச் சிறப்புற்றது. இலக்கண மரபுகளைத் தகுத்து ஒழுங்குபடுத்தி “எழுத்து”, “சொல்”, “பொருள்” என்ற மூன்று தலைப்புக்கள் ஒலியைக்குறிக்கும் குறில், நெடில், ஆய்தம், இகரம், உகரம் போன்ற அனைத்துத் தமிழ் இலக்கண நெறிகளை நாம் அறிவோம்.

தமிழ் மொழியின் நான்கு நிலைகள்.

1. பண்டைத் தமிழ் நிலை
2. காப்பியக்காலத் தமிழ் நிலை
3. இடைக்காலத் தமிழ் நிலை
4. தற்காலத் தமிழ் நிலை
என நான்கு வகைகளாகப் பிரிக்கிறார். திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள்,
பண்டையத் தமிழை அறியத் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் உதவுகின்றன.

இடைக்காலத் தமிழை அறியத் தேவாரம், திவ்யப்பிரபந்தம், சிந்தாமணி போன்ற இலக்கியங்கள் உதவுகின்றன.

தற்காலத் தமிழ்நிலையை, நன்னூலுக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் மற்றும் பேச்சு வழக்குத் தமிழ் கொண்டும் தெரியமுடிகிறது.

ஒலியாகத் திரிந்து, சித்திரமாய் மாறி, பலமொழிகளுடன் இணைந்து உருக்கள் பலப், பல எடுத்து, காலம் பல கடந்து, கல்வெட்டுகளில் உராய்ந்து, செப்பேடுகளிலும் ஓலைச் சுவடிகளிலும் தோய்ந்து, வெள்ளைக் காகிதத்தில் வீரநடை போடும் தேன்தமிழ் மொழியே நம் தாய்த் தமிழ்.

என்றும், மழலையாய், குன்றாச் சிறப்புடன் தேன் சுவையொத்த, தமிழாம் கன்னியை முன்னோன் தன் கருவினில் சுமந்து, மகவாய் ஈன்று, மழலையாய் வளர்த்து, குமரியாய்ப் போற்றிக்காத்து நம்மிடம் விட்டுச் சென்றான். அன்னவள் விரிந்த கூந்தலை வாரிப் பின்னலிட்டு, மலர் வைத்து அன்புடன் அழகு பார்த்தல் நம் கடமையல்லவா? அழகு பார்க்க எவரும் துணியாதது ஏன்? என்பதுதான் புதிராக உள்ளது.

ஃ – அக் என்னும் ஆயுத எழுத்து.
அகரக்குறிலொலி துவக்கத்திலெழுப்ப
இக்கென மெய்யொலி இறுதியில் முடிக்க
அக்கென எழும்புமாயுத ஒலியை
மும்முற்றுப்புள்ளிகளெங்கனம் ஒலிக்கும்?
ஒலியே! இல்லா பிற ஒலி திருடும்
அவல நிலையைப் போக்கலாமெண்ணி
மும் முற்றுப் புள்ளியை நீக்கலும் சரியே!


தமிழின் வளர்ச்சி.
வரிவடிவ மாற்றங்கள்.
தமிழர் பங்கும் மொழி வளர்ச்சியும்.
தமிழ்மொழியின் சிறப்பு.
தமிழ்மொழியின் நிலை.
தமிழ்மொழியில் சீர்திருத்தம்.
பெரியாரின் சீர்திருத்தம்.

தமிழ்மொழியின் சிறப்பு.
ஒரு நாட்டைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ அல்லது ஒரு அரசாட்சியைப் பற்றியோ முழுமையாக அறிய வரலாறுகள் உதவுகின்றன. அவ்வரலாறு, உண்மை வரலாறு அமைவதற்குச் சான்றுகள், அதாவது தக்கதோர் உண்மை ஆதாரங்கள் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அப்படி உண்மையான, பொருத்தமான ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்படும் வரலாற்றை (True Written History) உண்மை வரலாறு லப்படுத்தும் ஆதாரங்களையும் பயன்படுத்தி எழுதப்படாதவற்றை (False Histroy) பொய் வரலாறு அல்லது (False strory) பொய்க் கதைகள் என்றே கூறவேண்டும்.

இப்பகுதியில் நாம் தெரிய வேண்டிய உண்மைகள் இரண்டே!. ஒன்று தமிழ் மொழிவரலாறு. இரண்டு தமிழின் வரலாறு. இவ்விரு வரலாறுகளைக் கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் அறியவேண்டும், தெரிய வேண்டும். தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வுண்மை வரலாற்றைப் படைக்கிறேன்.

நம் தாய் மொழியாகிய தமிழைப் பற்றிய தமிழரினத்தைப் பற்றியும் தெரிய பல உண்மை வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
1, பழங்குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்கள்
2. நடுகற்களில் காணப்படும் வட்டெழுத்துக்கள்
3. செப்பேடுகளில் காணப்படும் வட்டெழுத்துக்கள்
4. இலக்கியச் சான்றுகள்
5. வெளிநாட்டவர் வருகைக் குறிப்புகள்
6. பழைய நாணயங்கள்
7. அரசு சாசனங்கள்
8. அரசர்களின் ஆவணங்கள்
9. கலைகள் – (இயல், இசை, நாடகம்)
10. கோயில் ஒழுங்குகள், கட்டிடக்கலைகள் மற்றும் சிற்பங்கள்.

இது போன்ற சான்றுகள் பல பல உள்ளன. தமிழைத் தெரிய தமிழ்மொழியின் சிறப்பையும் தொன்மையையும், உண்மை வரலாற்றையும் எடுத்துரைக்கும் ஆதாரங்கள் மிதமிஞ்சி கிடக்கிறது.

தமிழ்மொழி மிக மிகத்தொன்மை வாய்ந்த மொழி. இத்தமிழ் மொழிக்குரிய எழுத்து வடிவங்கள் எந்தக் காலத்தில் தோன்றியது என்பது ஒரு கேள்விக்குறியாவே உள்ளது. இக்காலத்தில்தான் தோன்றியது என்று திட்டவட்டமாகக் கூற முடியாத நிலையில்தான் நம் தமிழறிஞர்கள் உள்ளனர். தற்போது நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டு தமிழின் உண்மை வரலாற்றை ஆய்வோம். தொன்மை காலத்தில் அதாவது பழங்காலத்தில், நாம் இன்று கையாளும் தமிழ் எழுத்தல்லாத, வேறு நான்கு வகையான தமிழ் வரி வடிவங்களில் தமிழ்மொழியை எழுதப் பயன்படுத்தி உள்ளனர் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.
அவைகள்.
1, தென்பிராமி அல்லது தமிழ்ப் பிராமி
2. வட்டெழுத்துக்கள்
3. கோலெழுதுக்கள் மற்றும்
4. மலையாண்மை,
என்பவைகளாம், இவற்றுள் தென்பிராமி அல்லது தமிழ்ப் பிராமி எழுத்து முறைதான் மிக மிகத் தொன்மையானது. அசோகமன்னர் தன் கல்வெட்டுக்களில் பயன்படுத்திய எழுத்து பாலி மற்றும் பிராமியே என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

முதல் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள்.
தமிழ் நாட்டில் முதன் முதலில், 1906 ஆம் ஆண்டில் ஒரு ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள மருகால்தலை என்ற ஊருக்குப் பக்கத்திலுள்ள குன்றில் தமிழ் பிராமி வட்டெழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கல்வெட்டுக்களில் தமிழ் மொழிச் செய்திகள் அடங்கியுள்ளன என்று 1924ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த அகில இந்திய மூன்றாவது ஓரியண்டல் மாநாட்டில் எடுத்துரைத்தவர் திரு.கே.வி. சுப்ரமணிய அய்யராவார்.

அடுத்து வந்த அறிஞர்களின் சேவைகள்.

1) திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் அனைத்தையும் நன்கு படித்து, எழுத்துக்களை வரிசைப்படுத்தி தெளிவான கருத்துக்களைக் கூறியுள்ளார்.
2) ஒரு காலத்தில் இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலும் பரவியிருந்த மொழி தமிழ்ப் பிராமி ஒன்றே என்கிறார்.
3) தமிழ்ப் பிராமி எழுத்து முறைக்கும் செமிட்டிக் எழுத்துமுறைக்கும் மிக நெருங்கிய தொடர்பும், எழுத்தொற்றுமையும் மிக அதிகமாக்க் காணப்படுவதால் செமிட்டிக் மொழியைக் கையாளும் பினீசியர்களுக்கும், தமிழ்ப் பிராமி முறையைக் கையாளும் திராவிடர்களுக்கும் 4000 ஆண்டுகளுக்கும் முன்பே வர்த்தகத்தொடர்புகள் உண்டு என பல அறிஞர்கள் கருதுகின்றனர்.
4) சிந்துச் சமவெளியில் இரு பெருநகரங்களாகி மொகஞ்சதாரோ, அரப்பா போன்ற நகர நாகரிகங்களைப் படைத்தவர்கள் திராவிடர்களே! என்றும் சிந்துச் சமவெளியில்பயன்படுத்தப்பட்ட மொழியும் எழுத்தும் திராவிடர்களின் மொழியும் எழுத்தும் ஒன்றே என்று திரு. ரெ.வ. ஹீராஸ் என்னும் வரலாற்று மேதை கூறுகிறார்.
5) இதே கருத்தை சர்.ஜான்மார்ஸல் என்ற அறிஞரும் வலியுறுத்துகிறார்.
6) மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிக் ஆதிதிராவிடப் பழங்குடியினருக்குச்சொந்தமானது என்று, இரகசிய அறிஞர்களாகிய திரு. ஜ.எம்.போங்கார்டு லெவின் மற்றும் திரு. என்.வி. குரோ போன்றோர் கருதுகின்றனர்.
7) கி.மு. 3ம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகனின் ‘கிர்னார்’ கல்வெட்டில் அன்றைய தமிழகத்து அரசுகளையும் அரசியல் செய்திகளையும் அரசர்களின் பெயர்ப் பட்டியலையும் இன்றும் கூட காணலாம்.
8) நந்தி வர்ம பல்லவ மன்னனுடைய கல்வெட்டென்று தமிழ் மன்னர்களை திராவிட மன்னர்கள் என்று கூறுகிறது.
9) தமிழக நாகரிகம் கிழக்கில் போளினோசியா, மேற்கில் மேற்காசியா, எகிப்து போன்ற நாடுகளில் எளிதில் பரவியது என்கிறார் Dr. R.R. தீட்சிதர்.
10) தமிழக நாகரிகம் கிழக்கில் போளினேசியா, மேற்கில் மேற்காசியா, எகிப்து போன்ற நாடுகளில் எளிதில் பரவியது என்கிறார் கால்டுவெல் தன் (Comparative grammer of Dravidian Languages) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில்….
11) தமிழ்ப் பிராமி எழுத்துமுறை கிறிஸ்து பிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வழக்கத்திலிருந்தது என்கிறார் திரு ஐராவதும் மகாதேவன் அவர்கள். மேலும் அவர், தமிழ்ப் பிராமியைப் பற்றிக் கூறுகையில் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளள பானை ஓடுகளிலுள்ள தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் அதன் வளர்ச்சிக்குத் தக்க சான்றாகும். என்கிறார்.
12) கி.பி. 3ஆம் நூற்றாண்டில், தமிழ்ப் பிராமியிலிருந்து, வட்டெழுத்துகளும் தமிழ் எழுத்துக்களும் காலப்போக்கில் பிரிந்து தனித்தன்மை பெற்றதாக டாக்டர், நாகசாமி கூறுகிறார்.
13) ரோம் நாட்டுப் பொற்காசுகள், வெள்ளிக்காசுகளின் துணைகொண்டு, கிறிஸ்துபிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியும் தமிழனும், யவன நாடு, சீனதேசம், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்ப்பும், வாணிகத் தொடர்பும் வைத்திருந்தனர் என்பது தெளிவாகிறது.
14) சின்னமனூர் செப்பேடுகளும், வேள்விக்குடிச் சாசனமும் சங்க கால மன்னர்களின் பெயர்களை வரிசைப்படுத்திக் காட்டுவதுடன் சங்கங்களின் வரலாற்று மரபை உறுதி செய்கின்றன. அவ்வண்ணமே! தொல்காப்பியம், பட்டினப்பாலை, மருதைக்காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற இலக்கிய ஆதாரங்கள் தக்கதோர் புறச்சான்றுகளாக உள்ளன. மேலும் பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் காலத்துக் காசுகளும் தமிழ்மொழியைக் கையாண்ட தமிழர்களின் சிறப்பைப் பறைசாற்றிய வண்ணமுள்ளது.

உண்மை வரலாறு.
தமிழனின் பிறப்பிடமும், தமிழ் மொழியின் பிறப்பிடமும் ஒன்றே. குமரிக்கண்டத்தில், கையாண்ட மொழி தமிழ்த் திராவிட மொழியே, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சகட்டமெட்டினர். பழம்பாண்டி நாட்டை உலகிற்கு சுட்டிக்காட்டி சிறப்புடன் வாழ்ந்த்னர். தமிழ் மொழி சீரும் சிறப்பும் பெற்றுத் தழைத்தோங்கியது.

புகழ்க்கொடி நாட்டியது.
குமரிக் கண்டத்தைத் தன் தாயகமாகக்கொண்ட திராவிடத் தமிழன் உலகின் பல பகுதிகளுக்கும் பரவலானான். தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் வாணிகத்தை மேற்கொண்டான். ஆங்காங்கே குடியிருப்புகளை உருவாக்கி உலகெங்கும் நிலைத்தான். நான்குமுறை ஏற்பட்ட கடல்கோள்களால் தமிழனின் புகழும் நாடும் மொழியும் அழிவுற்றன. தென்மதுரை,நாகநன்நாடு, கபாடபுரம், காவிரிப்பூம்பட்டினம் அனைத்துமே அழிந்து நாசமாகியது.

முக்கியக் குறிப்பு.
இதிலிருந்து நாம் தெரிவது என்னவென்றால் திராவிடக் கருவாகிய, மூலமொழியாகிய, தமிழ்மொழி குமரிக்கண்டம் முதல் இமயம் வரை பரவி வேரூன்றியிருந்தது என்பதே! அதாவது தெற்கே குமரிக்கண்டம் என்னும் பெருநகர நாகரித்தைப் படைத்த தமிழ்த் திராவிடன் வடக்கிலும் இருபெரும் துணை நகரங்களாக மொஞ்சதாரோ, அரப்பாவை அமைத்து வாழ்ந்தான் என்பதே! இதிலிருந்து தமிழன் பெருமைகளையும் தமிழ்மொழியின் பெரும் சிறப்பையும் நன்கு உணரலாம்.


தமிழ்மொழியின் நிலை.
இந்த 21 ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் நிலை எவ்வாறு உள்ளது? என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் சற்றுச் சிந்திக்க வேண்டும். பழங்காலம் முதற்கொண்டு இன்றைய காலம் வரை சகல சீரும், சிறப்பும் பெற்று, வெற்றிக் கொடி நட்டுவிட்ட வித்தனாய் வீறுநடை போடும்மொழி நம் தமிழ் மொழியே! ‘தொல்எழுத்தறிஞர் திரு பூலர் அவர்களின் கூற்றின் படி இந்திய மொழிகளிலே முன்னோடி மொழியாக்க் கருதப்படுவது நம் தமிழ் மொழி. குமரிமாந்தன் வரலாற்றை உலகிற்கே பறைசாற்றிய தொன்மை வாய்ந்த நம் தமிழ் மொழியின் இன்றைய நிலை என்ன? என்று சற்று நோக்குவோம். இன்று அதற்குள்ள சிக்கல்கள் என்ன என்று ஆய்வோம்.

தொல் பழங்காலத்தில் தாய்மொழியாகிய நம் தமிழ் மொழி ஊமையாய்த் திரிந்து, சைகையாய் மாறி, ஒலியாய் ஒலித்து, வரியாய் வடிவெடுத்து, பல இன்னல்களையும் இடையூறகளையும், பிற மொழித் தாக்குதல்களையும், சமாளித்து குணம் மாறாமல், நயம் குறையாமல், ஒளிமங்காது பேரொலி கொடுத்து, உயரிடம் தேடிய உத்தம மொழியே நம் தமிழ் மொழி! இத்தமிழ் மொழி, ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், சிங்களம், டச்சு, போர்ச்சுக்கீசியன், உருது, துருக்கி, பாரசீகம், அரபிய மொழி மலாய் (மலேசியா) எபிரேயம் (ஹீப்ரு) பிரெஞ்சு, கிரேக்கம், சீனம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற பிறமொழித் தாக்குதல்களால் சிக்கித் தவித்துக்கொண்டுள்ளது. இன்னும் ஒரு நூற்றாண்டில் மேலும் அழிவு ஏற்படும் அயாய நிலையிலுள்ளது.

தமிழ் மொழியில் பிற மொழிகளின் ஊடுருவல்கள்.
1. ஆங்கிலம்:-சினிமா, சோப்பு, பேப்பர், டிக்கெட், போலீஸ், பஸ், மோட்டார், பங்களா, பென்சில், லீவு, கோர்ட் போன்று கண்டதில் பாதி ஆங்கிலமே!
2. பிரெஞ்சு:-கும்பினிய், லாந்தர் லைட், ஆஸ்பத்திரி, பீரோ, பொத்தான் மேலுமுள்ளன.
3. டச்சுகக்கூஸ், தொப்பி, பப்ளிமாஸ் மேலுமுள்ளன.
4. போர்க்சுகீசியம்:-கடுதாசி, பேனா, வாத்து, அலமாரி, மேசை சாவி, கோப்பை, பீப்பான், வராந்தா, கிராதி, கொரடா, ஏலம், சன்னல், மேஸ்திரி, மேலும் பலப்பல உள்ளன.
5. உருது:-அக்கப்போர், அகங்ரகாரம், அண்டா, ஆசாமி, அசல், ராட்டினம், ராஜினாமா, அலாக்காக, அலாதி, இனாம், கச்சேரி, அஸ்திவாரம், உசார், கெடுபிடி, கத்தகை, சந்தா, சராசரி, கம்மி, கப்ஸா, கஞ்சா, சோப்பு, கிராப்பு, கிராக்கி, சரிகை, சாட்டை, சர்பத், சப்பாத்தி, பேஜார், கைமா, சலாம் போன்ற கண்டதில் பாதிக்கு மேல் உருது உள்ளது.
6. துருக்கி:-துப்பாக்கி, தோட்டா, வான்கோழி, மேலுமுள்ளன.
7. பெர்சியன் (பாரசீகம்):-டபேதார், திவான், ரஸ்தா, ஜாகீர், சர்தார், அவல்தார் போன்றவைகள்.
8. அரபிய மொழி:-வசூல், இலாக்கா, பிஸ்மில்லா, சைத்தான், தபா, மகால், ரத்து, ஜப்தி, ஜாமின், தணிக்கை, மகசூல், ஜில்லா மேலுமுள்ளன.
9. மலாய் (மலேசியா):-சவ்வரிசி, மலாய் (பாலாடை) கிடங்கு, கிட்டங்கி, மலாக்கா, மணிலாக்கொட்டை இன்னும் பல உள்ளன.
10. கிரேக்கம்:-மத்திகை, கருங்கை, கன்னல், குருஸ் போன்றவைகளை.
11. ஹீப்ரூ (எபிரோயம்):-ஏசு, யூதர், சாலமன், போன்றவைகள்
12. சீனம்:-சாம்பான், பீங்கான், காங்கு போன்றவைகள்.
13. சிங்களம்:-சீசா, போத்தல், பில்லி, அந்தோ, மருங்கை.
14. மலையாளம்:-வெள்ளம், ஆச்சி, அவியல், சக்கை, சக்கவட, காலன், தளவாடம், சாயி, பிரதமர், வஞ்சிக்கொடி போன்றைகள் மேலுமுள்ளன.
15. கன்னடம்:-அட்டிகை, சொத்து, சமாளித்தல், குட்டு, கொம்பு, குலுக்கல், பட்டாக்கத்தி, இதர,தாண்டல் போன்றவைகள் மேலுமுள்ளன.
16. தெலுங்கு:-தெலுங்கிலிருந்து 325 சொற்கள் தமிழ்மொழியில் புகுந்துள்ளன. அக்கடா, பாம்பு, பெத்த, தீவிட்டி, ஜாடி, ஜதை, தண்டா, சளிப்பு, கடப்பாரை, கட்டடம், உருண்டை, சாம்பார், சாவடி, பேட்டை, வில்லங்கம், தெம்பு, அட்டவணை, குடுமி, காயம், ரம்பம், வாணலி, தடவை, சிமிழி, சிட்டிகை, கொலுச்சு போன்ற பலப்பல உள்ளன.
17. மராத்தி:-சந்து, பொந்து, சலவை, தடவை, நீச்சல், கில்லாடி, அபாண்டம், சேமியா, கிச்சடி, கசாயம், பட்டாணி இப்படிப்பல மராத்தி மொழிச்சொற்கள் தமிழில் கலந்துள்ளன.
18. இந்தி:-அரே, நயா பைசா, சாதி, சாயா, அந்தர், ரூப்பியா போன்ற பல உள்ளன.

மொழி ஊருவல்கள்:நம் தமிழ் மொழியில் மாற்று மொழிகளின் கலப்பு இருக்கத்தான் செய்கிறது. மேலே எடுத்துக் காட்டிய பிறமொழிக் கலவையை உற்று நோக்குங்கள். தவிர்க்க முடியாத ஒன்று தான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு லிட்டர் பாலில் 1 லிட்டர் தண்ணீரைக் கலந்தாலும் பால் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 900 மில்லித் தண்ணீரும் 100 மில்லி பாலுமானால் இதற்கு பெயர் என்ன? பாலா? இல்லை தண்ணீரா? பாலில் தண்ணீர் கலவையா? இல்லை தண்ணீரில் பால் கலவையா? இப்படிப் பல கேள்விகளும், பயமும் உருவாகிறது. தமிழ் மொழியில் பிறமொழிக் கலவை இருக்கலாம். ஆனால் மித மிஞ்சினால் தமிழ் மொழி மறைந்து விடுமே! நம் மொழி அழிவது சரியா?

பிறமொழி வரிவடிங்களின் கலவைகள்பிறமொழிகள் நம் தமிழ் மொழியோடு கலந்து, இணைந்து இயம்புவதை ஏற்றுக் கொள்ளலாம். “அதாவது புறம்போக்கு நிலத்தில் எவரும் பயிர் செய்வதைப் போல ஏற்றுக் கொள்ளலாம்”. ஆனால் நமக்கே உரிய பட்டா நிலமாகியதமிழ் மொழியில் மாற்று மொழிகளுக்குப் பட்டா என்னும் வரிவடிவைக் கொடுக்கலாமா? மேலும் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு இணையாக உரிமையும் தகுதிதகளையும் கொடுக்கலாமா? தமிழ் வரிவடிங்களுக்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்து அட்டவணையில் இடம் கொடுக்கப்படலாமா? நன்கு சிந்தித்து விடை காணுங்கள். செயல்படவும் முனைந்திடுங்கள்.

பிறமொழி எழுத்துக்களின் சுமைஉலக மொழிகளோடு நம் தமிழ் மொழியை ஒப்பிட்டால் நம் மொழியில் எழுத்துக்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளது நன்கு புரியும். என் சிந்தனைக்கு நம் தமிழ் மொழியெழுத்துக்களில் “ஐ” –அய் “ஔ” “ஃ” அக் போன்றவைகள் பிற மொழி வந்தவைகளே! அவைகள் நம் மொழியில் உட்புகுந்து, நம் மொழியை ஆட்கொள்கிறது. அத்தோடின்றி ஏதோ சற்றும் ஒலிக்கு ஒவ்வாத வரிவடிவம் பெற்று எழுதப்பட்டவணையில் இடமும் பெற்றிருப்பது சாத்தியமில்லை. அப்புறப்படுத்துவது நலமே!

1. “ஐ” மற்றும் “ஔ” – பல்லவரின் – பிராமிலிபி என்ற மொழிவழி வந்தவைகள். காஞ்சிப் பல்லவரின் கைப்பொம்மைகள், தமிழுக்கு இழுக்கு ஏற்பட வைக்கிறது. “கை” முதல் “னை” வரையுள்ள 18 அய்காரத்தயும் நீக்கிவிட வேண்டும்.
2. “ஃ” இது சமஸ்கிருதம் என்னும் வடமொழி வழி வந்தது. இது முழுமையான எழுத்து வரிவடிவமல்ல. மூன்று புள்ளிகளே! வரி வடிவமே இல்லாத மும் முற்றுப் புள்ளிகளை ஆயுத எழுத்து என்று எவ்வாறு ஏற்பது?

3. “ஔ” வுடன் புணர்ந்து ஔகார ஒலியெழுப்பும் உயிர்மெய் எழுத்துக்களாகிய, கௌ முதல் னௌ வரையுள்ள 18 வரிவடிவங்களையும் அடியோடு நீக்கிட வேண்டிய பிற மொழியெழுத்துக் கலவைகளே! மேற்காணும் “ஔ” “ஐ” மற்றம் “ஃ” என்ற உயிர் மற்றும் ஆய்த எழுத்துக்களின் வடிவங்களை நீக்கிவிட வேண்டும். மேற்காணும் சீர்திருத்தங்களை நாம் செய்தால் தமிழ் மொழி செப்பனிடப் பட்டுவிடும். வரிவடிவை மட்டுமே நீக்குகிறேன். ஒலிவடிவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
நுழைவாயில்.
நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் வெகு காலமாக இருந்து வந்த குழப்பங்களைப் போக்கி, தூய செம்மொழி படைத்து, தமிழ் வரலாற்றையும் தமிழன் வரலாற்றையும் எடுத்துரைப்பதே இவ்வாய்வு நூலின் முக்கிய நோக்கமாகும். ஒலியாய்ப் பிறந்து, ஓவியமாய்மாரி வட்டெழுத்தாய் வளர்ந்து வந்தது நமது தாய் மொழி.

சேர, சோழ, பாண்டியர் காலத்தில் தமிழ்ப்பிராமி வட்டெழுத்து தலை தூக்கியது. முக்கியக் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் தமிழ்ப்பிராமி வட்டெழுத்திலேயே பொறிக்கப்பட்டன. பாண்டிய நாட்டிற்கும் சேர நாட்டிற்கும் உள்ள பெரும்நட்பை இணைக்கும் பாலமாகத் தமிழ் வட்டெழுத்து அமைந்திருந்தது. சோழன், பாண்டிய நாட்டை வென்றவுடன் தமிழ் வட்டெழுத்து வீழ்ச்சியுற்றது. பிற்கால வட்டெழுத்துச் சாசனங்களில் ந, ப, ம, ய, ல, வ போன்ற எழுத்துக்கள் ஒரே சாயலை, உருவத்தைக் கொண்டதாக இருந்தன. வட்டெழுத்து கி.பி.6 ஆம் நூற்றாண்டில் தமிழ் பிராமியிலிருந்து பிரிந்து தனித்தன்மை பெற்றுச் சிறப்படைந்தது.

தமிழ் மொழியில் பன்னிரண்டு உயிர் எழுத்துக்கள் உள்ளன என்பது தொல்காப்பியரின் கூற்று. ஆனால் தமிழ் வட்டெழுத்தில் ”ஔ” நீங்கலாகப் பதினோரு உயிர் எழுத்து வடிவங்களே கிடைத்துள்ளன. சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும், தமிழ் வட்டெழுத்தில் ”ஐ” ”ஔ” என்னும் வடிவங்கள் இல்லை. 16 ஆம் நூற்றாண்டு வரை ”ஐ” ”ஔ” என்ற இரு எழுத்துக்களும் இடம் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

”பண்டையத் தமிழ் எழுத்துக்கள்” என்ற புத்தகத்தில் தமிழ் வட்டெழுத்தை அட்டவணையிட்டுக் காட்டுகிறார் திரு. தி.நா. சுப்பிரமணியன் அவர்கள், அதில் ”ஐ” ”ஔ” என்ற எழுத்துகளின் வடிவங்கள் இடம் பெறவில்லை.

தமிழ் எழுத்தானது ஒலியில் தொடங்கி, சித்திரமாக மாறி, பல காலகட்டங்களில் உருக்கள் பலவாறு மாறுபட்டு, இறுதியில் வரி வடிவமாய்த் தம்மிடம் தவழும் நடைமுறைத் தமிழ் எழுத்துக்களில் சில மாற்றம் கண்டார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அவர் தொடுத்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தப்போரில் அவர் விட்டுச் சென்ற மொழி சீர் திருத்தப் போர்ப் பணியை நான் மேற்கொள்கிறேன். நம் தாய் மொழியாகிய தமிழ் மொழியில் தந்தைக்குப் பின் தனையனைய் அவர் விரும்பிய, ஆசைப்பட்ட தமிழ் எழுத்துச் சீர் திருத்தங்களை நான் மேற்கொள்கிறேன்.

ஒரு மொழியை மக்களும் குழந்தைகளும் சுலபமான முறையில், எளிய நடையில் புரிந்து கொள்ளும் வகையில், கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படிக் கற்றுக் கொடுக்க வேண்டுமாயின் மொழி சீரான முறையில், சரியான நெறியில், குழப்பங்களோ அல்லது அய்யங்களோ ஏற்படாத வகையில் அமைதல் வேண்டும். அவ்வாறு நம் மொழியைச் சீர்படுத்த எண்ணற்ற வல்லுநர்களும், இலக்கிய மேதைகளும், பேராசிரியர்களும், மொழியாளும் அரசுகளும் முன்வர வேண்டும். அத்தோடல்லாமல் தமிழ் மொழியைத் தாய் மொழியாய்க் கொண்ட ஒவ்வொருவரும் முனைய வேண்டும். அவர்கள் வரிசையில் நானும் ஒருவன். பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வராக இருந்த காலத்தில் கங்கை கொண்டான் என்பதைப் போல் அல்லாமல் தன்னை சென்னை கொண்டான் என்று சொல்லி மகிழ்ந்தார். மேலும் தமிழகத்தின் தலைமகன் என்பதைக் காட்டிலும் தமிழைத் தாய் மொழியாய்க் கொண்டேன் எனப் புன்னகைத்தார்.

இந்நூலின் வாயிலாக, பழமை வாய்ந்த நம் தாய்த்தமிழின் முழு வரலாற்றை மிக எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். ஆதியில் மனிதன் ஒலி எழுப்பித் தன் கருத்தை வெளிப்படுத்தினான். அடுத்தவன் அவ்வொலிக்கு உருவம் தீட்டி மகிழ்ந்தான். மற்றவன் எழுத்தையும் எண்ணையும் கணக்கிட முனைந்தான். பிறகு படிப்படியே பிராமி, திராவிடி, கரோஸ்டி, யவனானியா போன்ற எழுத்து முறைகளைக் கையாண்டான் அன்றைய மனிதன். பகுத்தறிவுச் சிந்தனைகள் வளர, வளர வட்டெழுத்துக்களும் கோலெழுத்துக்களும் உதயமாயின. ஒலைச்சுவடிகளும், செப்பேடுகளும், கல் வெட்டுக்களும், அவன் எழுதிய எழுத்துக்களை மட்டுமன்றி அவன் வரலாற்றையும் பறைசாற்றுகின்றன.

அடுத்து, அடுத்து மனிதனுக்கு உதயமான பகுத்தறிவுச் சிந்தனையாற்றலால் தான், நாம் இன்று இத்தேன் தமிழ் பேச முடிகிறது. இன்று நாம் பேசும் மொழியின் சிறப்புக் குறையாமல், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சில எழுத்துக்களின் வரிவடிவத்தை மாற்றினார். இதனால் தமிழ் எழுத்தின் வரிவடிவம் தான் மாறியுள்ளதே தவிர, எழுத்துக்கள் தன் சிறப்பையும் ஒலியாயும் இழக்கவில்லை. இவ்வரிவடிவ மாற்றத்தால் மிகச் சுலபமாக்க் குழப்பமின்றி ஒரு சிறிதும் அய்யமின்றிக் கற்க முடுகிறது. சிரமமின்றி வெகு விரைவில் எழுதவும் படிக்கவும் முடிகிறது. அச்சு, தட்டச்சுப் பணிகளில் ஏற்படும் சிக்கல்களையும் காலதாமதங்களையும் போக்கமுடிகிறது. எழுத்துக்களின் எண்ணிக்கை தமிழில் கூடுதலாக உள்ளதால் தமிழ் மொழியின் வளர்ச்சி குன்றி விடுகிறது. இருபத்து ஆறே (26) எழுத்துக்களைக் கொண்ட ஆங்கில மொழி உலகப் பொது மொழியாக ஆதிக்கம் செலுத்துகிறது.

தமிழ் மொழியில் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்திற்குப் பின்னும் பல சீர் செய்யப்பட வேண்டிய எழுத்துக்களும், நீக்கப்பட வேண்டிய எழுத்துக்களும் உள்ளதை நான் உணர்கிறேன். உயிர் நெடில்கள் ”ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஔ” போன்ற ஆறு எழுத்துக்களிலும் தந்தை பெரியாரின் ”எழுத்துவிதி” யைக் கையாள விரும்புகிறேன். மேலும் உயிர் எழுத்துக்களிலுள்ள ”ஐகார” ”ஔகார” எழுத்துக்களாகிய ”ஐ” ”ஔ” என்ற இரண்டு எழுத்துக்களின் வரி வடிவத்தை நீக்க முயல்கிறேன். பின் பகுதியில் தெளிவான விளக்கத்தைக் காணலாம். ஆய்த எழுத்து பாண்டிய, சேர நாட்டு, வட்டெழுத்துக்களில் இல்லை. ஆய்த எழுத்தாகிய அக் என்ற எழுத்தும் ஒரு பிரச்சனைக் குரியதே! அதாவது ”ஃ” என்ற உருவத்தைக் கொண்ட மூன்று முழு நிறுத்தல் குறிகள் எவ்வாறு ”அக்” என்ற ஒலியை எழுப்ப முடியும்? இதற்குத் தீர்வு காண வேண்டாமா?

உயிரைத் தாங்கி நிற்கும் உடலாக மெய்யெழுத்துக்கள் அமைந்துள்ளன. மாற்றமின்றித் தமிழ் மொழியின் சிறப்பைக் கட்டிக் காத்து வருகின்றன. ஆனால் தேவைக்கு மேல் மிதமிஞ்சிக் கிடக்கின்றதே. அவற்றை ஏன் குறைக்கக் கூடாது? பயப்படாமல் பல எழுத்துக்கள் சுமையாய் இருந்து வருகிறதே! அவைகள் தேவைதானா?

உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியவைகள் பல உண்டு. இகர, ஈகார வர்க்க எழுத்துக்கள் ஒரு சீரான ஒழுங்குடன் அமையவில்லை. மேலும் ஔகார வர்க்கமும் தேவையற்ற ஒன்றாகவே புலப்படுகிறது. ”ஔ” என்ற வரிவடிவமோ அல்லது ஔகார வர்க்க எழுத்துக்களோ வட்டெழுத்துக்களில் காணப்படவில்லை. சேர நாட்டு வட்டெழுத்துக்களிலும் கூட இடம் பெறவில்லை. ”ஔ” என்ற வரிவடிவம் இல்லாமலேயே மற்ற எழுத்துக்களின் துணைக் கொண்டு ”அவ்” என்ற ஒலியை எழுப்ப முடியும். இதைப்பற்றி பின்பகுதிகளில் நல்ல விளக்கமும் சான்றுகளும் காணலாம். நானும் ஒரு தமிழன். என்னையும் தமிழ்த்தாய் ஒரு மகனாகப் படைத்துள்ளாள். தன் தாயைப் பேணிக்காப்பதும், தாயை அழகுபடுத்துவதும், சீர்காண்பதும் ஒரு மகனின் அவசியப் பணியல்லவா? அப்பணியை நான் மேற்கொள்கிறேன்.

மாற்று மொழிக் கலவைகளை அறவே நீக்க வேண்டும். கலவைகள் நீக்கப்பட்ட அசல் தமிழை ஆய்வு செய்து, சீர்கண்டு ஒழுங்கு படுத்த வேண்டும். திருத்தங்கள் செய்யப்பட்டு வருங்காலத்தமிழ் அச்சுமுறை, கையச்சுமுறை, சுருக்கெழுத்து முறை, கணிப்பொறி முறைகளுக்குப் பேருதவியாக மலரும். தமிழ்மொழி கற்போருக்கும், தமிழினக் குழந்தைகளுக்கும் முன்பிருந்ததை விட திருத்தப்பட்ட தமிழ் சுலபமான முறையாகப் பயன்படும் என நம்புகிறேன்.

உற்றுக் கவனித்தால் தமிழ் மொழியின் உயிரெழுத்துக்களில் ”ஐ” ”ஔ” என்ற இரு எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களா? இல்லை. தமிழ் எழுத்துக்களுள் புகுத்தப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட எழுத்துக்களே! ”ஃ” அக் என்ற ஒலியை எழுப்பும் இவ்வெழுத்து வடமொழியாகிய சமஸ்கிருதம் என்ற வடமொழியில் பயன்படுத்தப்பட்டது. ”ஐ” ”ஔ” இரண்டுமே பல்லவர்களின் ”பிராமலிபி” என்ற மொழியைச் சார்ந்தது. சோழர்களிடம் புகுத்தப்பட்டு, சோழன் மூலம் தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட எழுத்துக்கள். தமிழ் மொழிக் கலவையைப் போக்க வேண்டுமானால் இம்மூன்று எழுத்துக்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும். பின்வரும் பகுதியிலுள்ள நல்ல விளக்கங்களும், கால எழுத்து அட்டவணைகளும் இதை நன்கு புலப்படுத்தும்.

இந்நூலின் வாயிலாக, சில எழுத்துக்களைக் குறைத்தும், சுலபமான முறையில், எளிய நடையில் தமிழைக் கையாளலாம், பேசலாம், பயிலலாம் என்ற நற்கருத்தை வெளியிடுகிறேன். தேவையற்ற, பயன்படாத, மிதமிஞ்சி இருகின்ற எழுத்துக்களை நீக்கியுள்ளேன். அப்பன் கொட்டிய குப்பையை அப்புறப்படுத்த அல்லது துப்புறவுப்படுத்தவில்லையெனில் உறுதியாக துருநாற்றமும், நோய்க் கிருமிகளும் உருவாகும் என்பதில் ஒரு சிறிதும் அய்யமில்லை. அதைப் போலவே தமிழ் மொழியின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையல் தேவையற்ற எழுத்துச் சுமைகள் உள்ளன. அவற்றைக் குறைத்து அல்லது நீக்கி எளிமையாக்கி, சுலப முறையைக் கையாளுவதில் தவறென்ன இருக்க முடியும்?

பிற மொழிகளாகிய ஆங்கிலமும், இந்தியும் வளர்ச்சியடைந்து, பாரெங்கும் பரந்து ஆக்கம் பெற்றுக் காணப்படுகிறது. ஆனால் தமிழ்மொழி வளர்ச்சியடையாமல் மந்த நிலையில் உள்ளதே, இதற்குக் காரணம் என்ன? என்று ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும். மிகக் குறைவான எண்ணிக்கையில் எழுத்துக்களை கொண்ட காரணத்தால் ஆங்கிலமும் இந்தியும் எளிதில் வளர முடிகிறது. அதிக எழுத்துக்களை, அதாவது 247 எழுத்துக்களைக் கொண்ட தமிழ் மொழி எளிதில் வளர இயலாமல் போகிறது. மேலும் தமிழ் பயில கடினமாக, பெரும் சுமையாக, மொழி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து வருகிறது. ஆகவே தந்தை பெரியாரின் ஆணையை ஏற்றுத் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களையும் எழுத்துக் குறைப்பையும் கையாளுகிறேன்.

எந்த ஒரு மொழிக்கும் அடித்தளமாக அமைவது அம்மொழியின் எழுத்துக்களே. எழுத்துக்கள் செம்மையாக அமையப்பட வில்லையென்றால் மொழி சிறக்காது. மொழியென்னும் மாளிகைக்குள் நுழைய முதல்படியாக உதவுவது எழுத்துக்களே. நமது தமிழ்மொழியில் உயிராகக் காட்சியளிப்பது உயிர் எழுத்துக்கள். அவ் உயிரெழுத்துக்களில், குறில் மற்றும் குறில் சார்ந்த நெடில்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ என அழகாக ஒலிக்கின்றன. மிக மிகச் சரியே. ஐ = அய்; ஔ = அவ் என்ற இரு நெடில்கள் மட்டும் எங்கிருந்து வந்தது? ஏன்வந்தது? எப்படி வந்தது? அப்படியானால் இதன் குறில் வரிவடிவம் என்ன? அவைகள் ஏன் எழுத்துப்பட்டியலில் இடம் பெறவில்லை? இவைகள் நெடில்களாக ஒலிக்கின்றதா? குறில் இல்லாது நெடில் என்று எவ்வாறு ஊர்சீதம் செய்யமுடியும்? இப்படி பல அய்யங்களும் குழப்பங்களும் வினாக்களும் உருவாகின்றன. ஆகவே ”ஐ” என்னும் அய்காரமும் ”ஔ” என்னும் அவ்காரமும் நீக்கப்படுகின்றன.

இதைக் போலவே உயிர் மெய்யெழுத்துக்களில் பல பயனற்ற எழுத்துக்கள் பெரும் சுமையாக இருந்து வருகின்றன. தமிழ் மொழி வழக்கில், எழுதப் படிக்கப் பயன்படாமலும், உபயோகிப்படுத்தப் படாமலும் இருந்து வரும் உயிர்மெய்களை நீக்கி எழுத்துக் குறைப்பைக் கையாளுகிறேன்.

”ங்”, ”ஞ்” என்னும் இரு மெய்களும், ஏதோ ஒரு சில இடங்களில் பயன்பட்டாலும் இதனுடன் புணரும் பல உயிர்மெய்கள் உபயோகமற்று, கையாளப் பயன்படாது வெட்டிச் சுமையாக உள்ளன. இவ்வுண்மையைத் தமிழ் கற்ற அனைவரும் அறிவோம். ஆனால் அவற்றை நீக்குவோம் என்ற துணிவு எவருக்கும் வரவில்லை. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள், 1935ம் ஆண்டிலேயே தட்டிக் கேட்டார்.

”ஓ தமிழே! உனக்கேன் 247 எழுத்துக்கள்?” என்று உணர்ச்சி பொங்கக் கூவி, வினாக் கணை தொடுத்தார். அவர் கேட்ட வினாவிற்கு இதுவரை எந்தத் தமிழனும், தமிழறிஞரும் பதில் கூறவில்லை. விடைகூற எவருக்கும் துணிவு வலவில்லை. காரணம் அறியாமையா? இல்லை இயலாமையா? எவரும் எப்படியும் போகட்டும். ஆனால் நான் தமிழன், நான் விடையளிக்கிறேன். அவரெண்ணத்தை, நோக்கத்தை, குறிக்கோளை நான் நிறைவேற்றுகிறேன்.

பயிர் வளர்க்கப்பட வேண்டுமானால், களைகள் நீக்கப்பட வேண்டும். தமிழ்மொழி வளர்க்கப்பட வேண்டுமேயானால் கண்டிப்பாக, களைகளைப் போலிருக்கும் தேவையற்ற, பயன்படாத, உபயோகமற்ற எழுத்துக்களை நீக்கியே ஆக வேண்டும். மேலும் சற்று உற்று நோக்குங்கள். தமிழ்மொழியில் மிதமிஞ்சிய எழுத்துக் குவியல்கள் உள்ளன. லகரத்தை எடுத்துக் கொண்டால் மூன்று உள்ளன. 3 X 12 = 36 லகர உயிர் மெய் வரிவடிவங்கள் உள்ளன. அத்தோடு மூன்று மெய்களாகிய ல், ள், ழ் இம் மூன்றையும் சேர்த்தால் மொத்தம் முப்பத்தி ஒன்பது லகர ஒலி மற்றும் வரி வடிவங்கள் தேவைதானா? ஆங்கிலத்தில் L என்ற ஒரு வரிவடிவமே அனைத்துத் தேவைகளையும் ஈடுசெய்கிறது. வடமொழியாகிய இந்தியை எடுத்துக் கொண்டால் ஒரு லகர ஒலி மற்றும் ஒரு லகர வரிவடிவை வைத்தே அனைத்து தேவைகளையும் மேவுகின்றனர். ஆனால் தமிழ்மொழியில் இத்தனை அதிக எண்ணிக்கையுடைய லகரம் தேவைதானா? என்று நீங்கள் அனைவரும் சற்று சிந்தித்துப் பாருங்கள். வல்லினம், இடையினம், மெல்லினம் இப்படி எழுத்தினம் எதுவாக இருந்தால் என்ன? எழுத்துக்களின் இனம் எதுவாக இருந்தாலும் இருக்கட்டுமே. எவ்வினம் எளிதாக உள்ளதோ அதை பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது? எளிதாக புரியக்கூடிய, எளிதாக கையாளக்கூடிய, சுலபமாக எழுதப்படிக்கக் கூடிய, வகையில் அமையும் எவ்வின வெழுத்தையும் கையாளுவது நன்மை பயக்கும் என்பதே என் கருத்து. மித மிஞ்சி ஒலிக்கும் லகரங்களையும், லகர வரிவடிவங்களையும் நீக்குவதா? இல்லை ஊக்குவதா? (லகரம், ளகரம், ழகரம்) மூன்று லகரங்கள் தேவைக்கு மிஞ்சியவைகளே! இப்படி ஒரு சிந்தனை ஏன் எழக்கூடாது?

நகரவின எழுத்துக்களை உற்றுப்பாருங்கள். மூன்று (ந,ன.ண) நகர ஒலி வகைகளைக் காண்கிறோம், கேட்கிறோம். அவற்றை வரிவடிவில் நோக்கினால் 3 X 12 = 36 முப்பத்தி ஆறு வரிவடிவங்கள் உள்ளன. அத்தோடு நகர மெய்களாகிய ந், ன், ண் இம்மூன்றையும் சேர்த்தால் முப்பத்தி ஒன்பது (39) ஆக எண்ணிக்கை உயர்கிறது. மூன்று வித நகர வொலியோ அல்லது வரி வடிவோ தேவைதானா? என்பது தான் என் கேள்வி. இதில் ஒரு பன்னிரண்டு நகர ஒலியெழுத்துக்களை நீக்கினால் என்ன? சற்று எழுத்துச் சுமை குறையுமல்லவா!

ரகர ஒலியெழுத்துக்களிலும் இரு வகையான (ரகர றகர) ரகர ஒலி மற்றும் வரிவடிவங்கள் உள்ளன. 2 X 12 = 24 இருபத்தி நான்கோடு, ரகர மெய்களாகிய ர், ற் இவ்விரண்டையும் சேர்த்தால் இருபத்தி ஆறாகக் கூடுகிறது. ஏன்? ஒரு ரகர வகை போதாதா? ஒரு பதிமூன்று ரகர வரிவடிவங்களே போதும் என்பதே என் கருத்தும் ஆய்வும். ஆகவே ”ர” என்னும் ரகரத்தை பயன்படுத்திக் கொண்டு, ”ற” என்னும் றகரத்தை நீக்குகிறேன். முதல் எழுத்தாகப் பயன்படாத ”ற” றகரம் தேவை தானா?
எழுத்துகள் உதயம்.
உலக நாடுகளில் தோன்யுள்ள மொழிகளும், எழுத்துக்களும், வரலாற்றுச் சிறப்புக்களும், ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள் என்ற தாயீன்ற குழந்தைகளே! ஆற்றுச் சமவெளி அல்லது ந்திச் சமவெளி நாகரிகங்களின் வாயிலாக, மனிதனை, அவன் யார்? எத்தொழில் செய்தான்? எம்மொழியாற்றினான்? பண்பாடு என்ன? கலாச்சாரம் யாது? எவ்வுணவுண்டான்? ஒரு மொழியாற்றினான் என்றால் அம்மொழி எவ்வாறு உருவானது? இப்படிப் பல வினாக்களுக்கு விடையைக் காண்கிறோம். திரு.ஜி. வெல்ஸ் என்ற அறிஞரின் கூற்றினின்படி “நாகரிகத்தின் தொட்டில்கள்” என்ற பெரும்பேர் பெற்றுப் போற்றப்படுகிறது.
அவைகள்:-
அ. நைல் நதி நாகரிகம் அல்லது எகிப்திய நாகரிகம்.
ஆ. சுமேரியன் – மெசபடோமிய நாகரிகம்
இ. சிந்துச்சமவெளி நாகரிகம். – மொகஞ்சதாரோ, அரப்பா – திராவிட நாகரிகம்.
ஈ. மஞ்சளாற்றுச் சமவெளி நாகரிகம் அல்லது சீன நாகரிகம்.
இது போன்ற நாகரிகங்கள், அனைத்து வரலாறுகளையும் படைக்கப் பேருதவியாகிறது. உலகெங்கும் நாகரிகம், ஆற்றுச் சமவெளிகளில் மனிதனை ஓரிடத்திலிருந்து உழவுத் தொழிலை மேற்கொண்டு, நிலையாக வாழ வழிவகுத்துத் தந்தது. உழவின் விளைவே நாகரிகம். இந்த நாகரிகங்களை, மொழிகள் தோன்ற வித்திட்ட தந்தை என்றே கூறலாம்.

1. நைல்நதி நாகரிகம் அல்லது எகிப்திய நாகரிகம்.
நைல் நதி நாகரிகத்தின் கூற்றின் படி எகிப்தியர் முதன் முதலில் நிலைத்து வாழ ஆரம்பித்த இடம் எகிப்து. அதாவது நைல் நதிச் சமவெளி. எகிப்தியர்கள் தங்களை வாழவைத்த தெய்வமாக நைல் நதியைக் கருதுகின்றனர். இங்கு கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்னமே ஒரு சிறந்த நாகரிகம் இருந்தது.

பரோக்கள் என்று அழைக்கப்படும் ஆட்சியும் நடந்தது. “சாவுக்குப் பின் என்ன”? என்ற பெரும் தத்துவத்தை உலகில் முதன் முதலில் எழுப்பியவர்கள் எகிப்தியர்கள். கல்விமுறை, வானநூல், கணிதம், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் முதன் முதலில் புகுந்தவர்கள் இவர்களே!

எகிப்தியவர் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும் தங்கள் சிந்தனைகளையும், அனுபவங்களையும் அழியாமல் பாதுகாக்கவும் முதன் முதலில் எழுத்துக்களைக் கண்டறிந்தனர். இவர்களின் எழுத்து சித்திர வடிவங்களைக் கொண்டது. இவ்வெழுத்துக்களை “ஹிரோகிளிபிக்ஸ்” என்றும் கூறுவர். எகிப்தியவர் முதன் முதலில் பேபரஸ் என்ற நாணல் தண்டிலிருந்து காகிதம் செய்து அவற்றில் எழுதியும் படித்தும் வந்தனர். காகிதத்தில் எழுதும் பழக்கத்தை உருவாக்கினர்.

2. சுமேரியர் நாகரிகம் அல்லது மெசபடோமிய நாகரீகம்.
சுமேரியர் நாகரிகத்தைக் கண்டவர்கள் கிரேக்கர்கள். யூப்ரடிஸ், டைகரிஸ் என்னும் இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியே மெசபடோமியா எனப்படும். முதன் முதலில் கருத்து வடிவான எழுத்து முறையை உலகுக்கு அளித்த பெருமை சுமேரியர்களையே சாரும். ஈரமான களிமண் பலகைகளின் மீது கூரிய கருவியின் உதவியால் “ஆப்பு” வடிவமான எழுத்துக்களை அமைத்தனர். இவ்வெழுத்து முறைக்கு “கியூனிபார்ம்” என்று பெயர். சுழலும் சக்கரத்தைக் கண்டறிந்து, வணிகப் பத்திரங்களை அமைத்தனர். மேலும், செம்மைப் படுத்தப்பட்ட எழுத்து முறையையும், நூல் நிலையங்களையும் உருவாக்கினர். காலத்தை 60 நொடிகளாகப் பிரித்தது, போன்றவைகளை கண்டறிந்தவர்கள் சுமேரியர்களே!

3. சிந்துச் சமவெளி நாகரிகம் அல்லது திராவிட நாகரிகம்.
ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்துநதிச் சமவெளியில் ஒரு சிறந்த நாகரிகம் “மொகஞ்சதாரோ,” “அரப்பா” என்ற இரு இடங்களில் தோன்றியது. இந்நாகரிகத்தின் கதாபாத்திரங்கள் திராவிடர்களே! திரு. வெ. ஹீராஸ் அவர்களின் கூற்றின்படி சிந்து நதிச்சமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழியும் எழுத்தும் திராவிடர்களின் படைப்பே! அதே கருத்தை அறிஞர்கள் திரு.சர். ஜான் மார்சல், திரு.ஜி.எம். போங்கார்டுலெவின் மற்றும் திரு.என்.வி.குரோ ஆகியோர், மொகஞ்சதாரோ மற்றும் அரப்பா நாகரிகம் ஆதிதிராவிடப் பழங்குடியினருக்குச் சொந்தமானது என வலியுறுத்துகிறார்கள்.
தொன்மையில் வாழ்ந்த ஆதிதிராவிட மக்கள் “தென்பிராமி அல்லது தமிழ்ப்பிராமி” என்ற மொழியையும் எழுத்தையும் கையாண்டனர். பிராமி எழுத்துக்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருந்த எழுத்து முறையாகும். இந்தத் தமிழ்ப்பிராமி அல்லது தென்பிராமி எழுத்து முறைதான் இந்திய மொழிகளின் எழுத்து முறைக்கு வித்திட்ட முதற்பெரும் வித்தகனாய்க் கருதுகிறார் தொல் எழுத்தறிஞர் திரு பூலர் அவர்கள். அவற்றை விரிவாகப் பின் நோக்குவோம்.

4. மஞ்சளாற்றுச் சமவெளி நாகரிகம் அல்லது சீனநாகரிகம்.
சீன நாட்டையும் மக்களையும் உலகிற்கு, அடையாளம் காட்டுவது மஞ்சளாற்றுச் சமவெளி நாகரீகமே! மஞ்சள் நிறமுள்ள வண்டல் மண்ணை அடித்து வந்து பரப்பியதால் மஞ்சளாறு என்று பெயர் பெற்றது. அந்த ஆற்றின் உண்மைப் பெயர் “ஹொவாங்கோ” என்பதாகும். இந்த ஆற்றங்கரையில் தான் சீன நாகரிகம் மலர்ந்தது.

சீனர்களின் எழுத்துமுறை, ஓவியங்களை ஒத்து இருந்தது. ஓவிய எழுத்துக்கள் எழுதுவதற்கு தூரிகைகளே பயன்பட்டன. சீன எழுத்துமுறை, மொழி, இலக்கியங்கள், அரசாணைகள் அனைத்துமே அரசரால் ஒழங்குபடுத்தப்பட்ட 3300 சித்திர எழுத்துக்களில் அடங்கும். ஐப்பான், கொரியா, வியட்நாம் போன்ற நாட்டு மொழிகள் சீன மொழியின் அடிப்படையில் அமையப் பெற்றவைகளே!

பண்டைக் காலத்தில் சீனர்கள் எழுதுவதற்கு எலும்பைப் பயன்படுத்தினர். பிறகு ஒட்டக முடியினால் ஆன தூரிகைகளைப் பயன்படுத்தினர். இவர்கள் மரப்பட்டைகள், மூங்கில்கள், கந்தல்துணிகள் போன்றவைகளால் காகிதம் செய்யக் கற்றிருந்தனர். மற்றும் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தனர்.

உயிரெழுத்து.
1. ஓருயிரென்றுமே மோருடல் சாரும்
ஓருடலென்றுமே மோருயிரேற்கும்;
இருவரு கொண்டிட்ட வோருயிரில்லை
இருப்பினுமவையோர் உயிரெனக் கொள்ளா!
இருவரி கொள்ளா ஓருயிர் வரியை
உயிரென மொழிதல் தமிழ் மொழி வழக்கு.

2. உயிரினில் குறிலொலி பிறப்பது முதலே
நெடிலொலி குறிலொலி தழுவலுமுறையே
குறிலொலித் தோன்றலின் வரிவடிச் சாயலை
நெடிலொலி வரிவடியேற்பது சிறப்பு
குறிலொத்த குணத்தினை நெடிலென்றுமேற்று
இயம்புதல் என்றும் தமிழ் மொழி மரபு.


தமிழர் பங்கும் மொழி வளர்ச்சியும்.
ஹிராட்டஸின் ஆதாரங்கள் – ஒரு ஆய்வு ஹிராட்டஸின் வாழ்க்கைக் குறிப்பு
ஹிராட்டஸ், உலக வரலாற்றின் ஆதி தந்தையாவார். உரைநடை என்ற ஒரு நடையை உலகிற்குக் காட்டிய முதல் மனிதன் இவரே! இவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த மேதையாவார். இவர் வாழ்ந்த காலம் கி.மு. 484-408. ஹிராட்டஸ என்ற அம்மேதை இயற்றிய “வரலாறுகள்” என்ற வரலாற்று நூலின் வாயிலாக பாரசீகர், லிபியர் ஆகியோரின் அன்றைய, பழமைப் பழக்கவழக்கங்களையும், உண்மை நிலைமைகளையும் வெகு தெளிவாக அறிய முடிகிறது. அவருடைய படைப்புகள் அனைத்துமே அன்றைய வரலாற்றை உறுதிப்படுத்துகின்றன. திரு.வி.எஸ்.வி. இராகவன் இயற்றிய “ஹராட்டஸ்” என்ற வரலாற்று நூல் இன்னும் தெளிவுபடுத்தியது.

உலகின் வரலாற்றை எழுதத் தொடங்கியவர்களில் ஹிராட்டஸே முதன்மையானவர் மட்டுமல்லாமல், கி.மு. 107 -43ல் சிசரோ – III என்னும் கிரேக்கப் பெருமகனால் “வரலாற்றின் உரைநடை என்ற ஒரு வடிவமைத்து வரலாறு படைத்தவர் இவரே! இங்கிலாந்து நாட்டு வரலாற்று மேதை சார்லஸ் டார்வினுக்குச் சமமானவர்.

இவர் ஹலிகார்னைஸ் என்னும் ஊரில் கி.மு. 484ல் பிறந்தார். இவர் கிரேக்க அரசால் நாடு கடத்தப்பட்ட ஒரு தளபதியாவார். இவர் கதை சொல்லுவதும் வரலாறு படைப்பதுமே முக்கியத் தொழிலாய்க் கொண்டார். கி.மு. 408ல் ஆதன்ஸ் நகரில் தனது எழுபத்தி ஆறாம் வயதில் காலமானார். வரலாற்று என்ற ஒன்று உருவாகக் காரணக்கர்த்தாவே ஹிராட்டஸ்தான். அவரே வரலாற்றுக்கு வித்திட்ட வித்தகனாவார். அவர் எழுதிய “வரலாறுகள்” என்ற நூல், வரலாற்றின் அவசியத்தையும், தேவையையும் சுட்டிக்காட்டி, வரலாறு எழுதப்பட வேண்டும் என அறிவுரைக்கிறது. வரலாற்று உலகின் முதல்படியே அவர் எழுதிய “வரலாறுகள்” என்னும் நூல்தான். இந்நூலின் வாயிலாக தமிழனின் உண்மை வரலாற்றை அறிய முடிகிறது. ஹிராட்டஸின் கூற்றின்படி தமிழரின் வரலாற்றை இனிக் காண்போம்.

தமிழனின் வரலாறு.
தமிழர்க்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ்மொழிக்கும் வரலாறு உண்டா? என்றால் உண்டு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே உண்டு என்கிறார் ஹிராடடஸ் அவர்கள். தொல் பழங்காலத்தில், குமரிக் கண்டமாகவும், பழந்தமிழ் நாடாகவும் சிறப்புற்று விளங்கிய பகுதியிலிருந்து சுமார் 4000 ஆண்டுகளக்கு முன்பே வரலாறு படைத்தவன் தமிழன் என உறுதியாக் கூறுகிறார். பழந் தமிழ்நாட்டில் தென்னை, பனை போன்ற மரமேறி வாழ்ந்த தமிழர்கள் உலிகின் பல பகுதிகளுக்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து வாழத் தொடங்கினார்கள் எனவும், அம்மரமேறித் தமிழர்களே பாமேசியர் என்றும் அப்பாமேசியர்களே பினீசியர்கள் எனப் பேரேற்று வாழ்ந்து வந்தனர் எனப் பறை சாட்டுகிறார் ஹிராடடஸ் அவர்கள், தாமியற்றிய வரலாற்று நூலில்,

தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ்மொழிக்கும் கிடைக்க முடியாத உண்மை வரலாற்றைப்படைத்துப் பெருமை கொள்ளச் செய்துள்ளார். வரலாறு காணா இருண்ட வாழ்க்கை படைத்து முதல் ஒளி ஏற்றிச் சிறப்பிக்கிறார். இந்தியாவைப் பற்றி, குறிப்பாகத் தமிழரைப் பற்றி, மேலை நாட்டவர் எழுதிய முதல் காவியம், முதல் ஓவியம், முதல் வரலாற்று நூல் ஹிராட்டஸ் எழுதிய “வரலாறுகள்” என்ற நூலே!

உலக நாகரிகத்தின் முன்னோடி.
உலக நாடுகளில் உருவான நாகரிகங்களில் முன்னணி வகுப்பது தமிழர் நாகரிகமே! வரலாறு படைத்துக் கொண்ட மனித வர்க்கத்திற்கே ஆதியும் அந்தமுமாய் இருந்தவன் தமிழனே! இருந்த மொழி தமிழ்மொழியே! இருந்த நாகரிகம் தமிழ் நாகரிகமே என மார்தட்டிக் கூறுகிறார் ஹிராடடஸ் அவர்கள்.

தமிழ்மொழிச் சிறப்பு.
பண்டை உலக மொழிகள் அய்ந்தே, உலகில் முதன்முதலில் உருவான ஒலிமொழிகள், கிரேக்கம், எபிரேயம், தமிழ், சீனம், சமஸ்கிருதம் ஆகிய இவ்வைந்துமே! சமஸ்கிருத்த்தைத் தவிர மற்ற மொழிகள் வரிவடிவம் பெற்று எழுதப்பட்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவற்றில் தமிழும், கிரேக்கமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து கலந்திருந்தன. இருவர் பண்பாடும் கலந்திருந்தன. இக்கலப்புக்கள் முற்காலத்தில் நடைபெற்ற வாணிகப் பரிமாற்றங்களின் காரணங்களால் ஏற்ட்டதே என்று கூறலாம். இக்கலப்பால், அன்றைய கிரேக்கர், தமிழர் வணிகத் தொடர்புகளையும், மொழித் தொடர்புகளையும், கலவைகளையும் இனிக்காண்க.

கிரேக்கம்தமிழ்கிரேக்கம்தமிழ்ஆரம்(பொன்)ஆரம்தேபாதெப்பம்ஹேராஒரைநாரிநாரி(பெண்)ஆக்ஸிஸ்அச்சுநோஸ்நோய்அனிமாஆன்மாபெர்ல்பரல்செஞ்சிம்இஞ்சிபலி(ஸ்)பள்ளிஏனம் (பாத்திரம்)ஏனம்பாண்டஸ்பாண்டில்(வளைந்த)கேனாகனவுபில்லாபிள்ளை(பெண்)சண்டலம்சந்தனம்பெலிபுலிகனல்அனல்ஹீரோவீராகேடாகேடுஹீரோ (கிரேக்கதுர்க்கை) - வீரி (காளி)மற்றும் பிற மொழிக்கலவைகளும் நிறைய உண்டு.

இம்மொழிகளின் கலவைகளால், நம்தமிழ் மொழியின் தொன்மையையும், பெருமைகளையும், சிறப்பையும் காணமுடிகிறது. அத்தோடு மட்டுமின்றி, நான்கு, அய்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகளாவப்பரவி, வீறு நடை போட்ட மொழி நம் தமிழ் மொழி என எண்ணி மகிழ வைக்கிறது. இப்பெரும் வரலாற்றை நமக்குத் தந்த வரலாற்று ஆதித்தந்தை ஹிராட்டஸ் அவர்களுக்கு ஒவ்வொரு தமிழனும் நன்றி கூறியே ஆக வேண்டும்.

தமிழன்தான், உண்மையிலேயே, உலகிற்கு நாகரிகங்களைக் கற்றுத் தந்த தந்தை, தமிழ்நாடுதான் உலக நாகரிகங்களை உருவாக்கித் தந்த கருவூலம். உலகிலேயே முதன்முதலாக வரலாறு படைத்த மாவீரன் தமிழனே! தமிழர் நாகரிகமே உலக நாகரிகத்தின் முன்னோடி என்று பல வராற்று மேதைகள் மெச்சுகின்றனர். வரலாறு படைத்துக் கொண்ட மனித வர்க்கத்திற்கே முதல்வன்தான் நம் தமிழன், இப் பெரும் பேரைப் பெற்றான். என அறிந்து நெஞ்சம் பூரிப்படைகின்றது. நினைத்து, நினைத்துப் பெருமிதம் அடைகிறது.

ஆரியர்களின் வருகையால் உண்மைத் தமிழனின் வரலாறு மறைக்கப்பட்டு விட்டது. தமிழனின் உண்மையான வரலாறு நிலைக்கப்பட வேண்டுமானால், வரலாறுகள் எழுதப்பட வேண்டும். அவை உண்மை வரலாறாக இருத்தல் அவசியம். அப்பொழுதுதான், எதையும் எவரையும் எதிர்பாராமல், தமிழ் மரபுக் காத்து, தமிழ்ப் பரம்பரைக்கு விட்டுச் செல்ல முடியும்.

உலகெங்கும் தமிழன் உலா.
பண்டைத் தமிழ் நூல்களான அகநானூறு, புறநானூறு, சிறுபாணாற்றுப் படை, மதுரைக்காஞ்சி, நற்றிணை, சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, கலித்தொகை வாயிலாகவும், கிரேக்க நூல்களான, பிளினி, பெரிப்ளுஸ், தாலமி ஸ்டிராபோ, லெபனான், மெகஸ்தனிஸ் மற்றும் அரியன் இண்டிகா வாயிலாகவும் தமிழனின் வணிகத் தொடர்புள்ள நன்கு தெரிகின்றோம். தமிழ்நாட்டிற்கும், கிரேக்கம், ரோம், சீனா, எகிப்து போன்ற பிற உலக நாடுகளுக்கும் உள்ள நல்லுறவும், வணிக நட்பும் தொன்று தொட்டு பழங்காலம் முதல் இருந்து வந்த வரலாற்றை உணர்கிறோம். தமிழன் கடல் மார்க்கமாக கப்பல்களிலும், வாசனைப் பண்டங்கள், முத்து, பொன், மயிற்பீலி, மிளகு, சடாமாஞ்சி போன்ற பொருள்களை, அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றிச் சென்றான் என்றால், பெருமையே! பெருமை! வளரட்டும், தொடரட்டும் தமிழனின் சுற்றுலா.

குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ்நாடு.
தென்னாப்பிரிக்காவையும், இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த நாடே பழந்தமிழ் நாடு அல்லது குமரிக்கண்டம் எனப் பேரறிஞர்கள், ஓல்டுகாம், எல்கேல், கிளேற்றர், காட்டு எலியட், தேவ நேயப்பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் எண்ணத்தையொத்தே ஹிராடடஸ் தம் கருத்தைக் கூறுகிறார். அதாவது தொலைமேற்கில் கிரேக்க நாடு, மேற்கில் எகிப்து, தொலை கிழக்கில் சீனா நாடு, இவற்றிற்கு மையத்தில் அமைந்திருந்த நாடே பழந்தமிழ் நாடு என்கிறார். அந்நாட்டில் வாழ்ந்தவன்தான் தமிழன். அவனுடைய வரலாறும், நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழியான, தமிழ்தான் உலகெங்கும் கொடிகட்டிப் பறந்தது. பரவியது. தமிழர்கள், பழந்தமிழ் நாட்டிலிருந்து கடல்வழியாகவும், தரை வழியாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர். இதனை இலமுரியா கண்டம், குமரிக்கண்டம், நாகநன்னாடு, எழுதெங்கு நாடு, எழுபனை நாடு என அழைப்பர்.

தமிழர்களின் உலகப் பயணம்.
எவ்வாறு பிற நாட்டவர் இந்தியாவில் ஊடுருவல் செய்தார்களோ, அதே போல் தமிழ் நாட்டவரும் உலகிலுள்ள பிறநாடுகளில் ஊடுருவல்களை மேற்கொண்டனர். வாணிகம் என்ற பெயரில், வியாபார நோக்கங்கொண்டு, விலை மதிக்க முடியாத பெரும் பொருட்களுடன் தன் நீண்ட பயணத்தை மேற்கொண்டனர். இவர்கள் இரு மார்க்கங்களைக் கையாண்டனர். ஒன்று தரைமார்க்கம், மற்றொன்று கடல்மார்க்கம்.

தமிழர்களின் முதல் கடல் வழி மற்றும் தரை வழிப்பயணம்.
பீனிசியர்களின் கடற்பயணம் (கி.மு.25000)

தமிழர்களின் அமெரிக்கப் பிரவேசம்.
தரைவழிப் பயணம் (கி.மு. 25000)
தரைவழி மார்க்கத்தில் தன் பயணத்தைத் தொடங்கிய தமிழன், தன் தாய்நாடாகிய தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டான். புறப்பட்ட தமிழன், தன் தாய்மொழியையும், தமிழ்0 கையாண்டு, பயணத்தில் வெற்றி பல பெற்ற, உலகெங்கும் உலாவந்து, பாரெங்கும் குடியேற்றங்களை அமைத்துக் குடியேறினான். 4000 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர்க்கும், தமிழ்மொழிக்கும், தமிழ்நாட்டிற்கும் வரலாறு உண்டா? இல்லையா? என்று எண்ணப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழர்கள் (பனையேறிகள்), தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டு, தரைமார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் உலகின் பல பகுதிகளுக்குச் சென்று குடியேற்றங்களை அமைத்து வாழ்ந்து வரலாறு படைத்தனர்.

ஏழை பனைநாடு மற்றும் ஏழு தெங்குநாடு.
குமரிக்கண்டத்தை பழந்தமிழ்நாடு எனப் பல வரலாறுகள் செப்புகின்றன. அத்தமிழ்நாடு, ஏழு தெங்கு (தென்னை) நாடுகள் என இருபெரும் பிரிவுகளாக பிரித்திருந்தனர். இயற்கையைப் பயன்படுத்தி வாழ்ந்த காலம், சிலர் கடல் நீரில் வாழும் மீன்களையும், சிலர் மரங்களின் காய், கனி போன்றவைகளையும் உண்டு வாழ்ந்தனர். இன்னும் சிலர் விலங்குகளையும், பறவைகளையும், வேட்டையாடி இறைச்சியை உண்டு வாழ்ந்தனர். தென்னை, பனை, போன்ற நெடுமரங்களை அதிகம் கொண்டமையால் நெடும்பனை நாடு என்ற மற்றொன்றும் உண்டு. அந்த நெடும்பனை, தென்னை மரங்களில் ஏறி, அம்மரத்தைத் தன்வயமாக்கி அதிலிருந்து தேங்காய், நொங்கு, கள்(மாதுபானம்) பதநீர், பனைவெல்லம் போன்றவற்றைத் தயாரித்த தமிழனுக்குப் பெயர் மரமேறிகள். இவர்கள் வாழ்ந்த நாடு பனைநாடாகவும், அங்கு வாழ்ந்தவர்கள் பனையேறிகளாகவும் பெயர் பெற்று நிலைத்தனர்.

பனையேறிகளே பினீசியர்கள்!
பழந்தமிழ் நாட்டிலுள்ள பல பிரிவினர்களில், ஏழு பனை நாடு, ஏழ தெங்கு (தென்னை) நாடு, நெடும் பனைநாடு, குறும்பனை நாடு போன்ற பகுதிகளில் வாழ்ந்தவர்கள் மரங்களின் உதவியுடன் கடல் பயணம் மேற்கொண்டனர், இந்தப் பனையேறிகள், பாமேசியர் என்றும், அம்பாமேசியர்களே பினீசியர்கள் எனப் பேரேற்று வாழ்ந்தனர். மரமேறிகள், பினிசியர்களாக மாறி ஒருங்கிணைந்து, உறவுப்பாலம் அமைத்து கொண்டனர். தமிழர்களின் பண்பாடும், நாகரீகமும் பினீசியர் என்ற பெயரில் பாரெங்கும் பரவத் தொடங்கின. வீரத்தமிழன் பினீசியர் என்ற மாற்றுப் பெயர் ஏற்றுச் சாதனை பல புரிகிறான். இச்செய்திகள் அஸ்ஸீரியான் கல்வெட்டுக்களிலிருந்து தெரிய வருகிறது.பினீசியர்களின் நாணயமும் உதவுகிறது.

பெயர்க்காரணம்.
இந்தியப் பெருங்கடலின் தென்கோடியிலிருந்து, தமிழ்நாடு, மலையாளக் கரையோரங்களில் தென்னை மற்றும் பனை மிக வளர்ச்சி பெற்றிருந்தது. அப்பகுதி மக்கள், தென்னை, பனைகளை வளர்த்தும், ஏறியும் வாழ்ந்தனர். இவர்கள் வாழ்ந்த பகுதி ஏழுபனை நாடு, ஏழு (தென்னை) நாடு எனப்படும். இங்கு வாழ்ந்த தமிழர்கள், அதாவது மரமேறிகள், தென்னை, பனை மரக்கட்டைகளைக் கடலில் நீந்தப் பயன்படுத்தினர். அவ்வாறே கடல் மார்க்கமாக உலகில் பல பகுதிகளைச் சென்றடைந்தனர். தாம் சென்றடைந்த புதிய நாட்டில் தென்னை பனை மரங்களைப் பயிரிட்டான் தமிழன். பனை நட்ட காரணத்தால் பனேசியர் என்று மரமேறிகள் அழைக்கப்பட்டனர். அப்பனேசியர்கள் என்ற சொல்லே, நாளடைவில் பனேசியர், பாமேசியர், பனீசியர் என்று திரிபுற்று இறுதியில் பினீசியர் என உருப்பெற்று விளங்கலாயிற்று. பினிசீய மக்கள் தமிழ்நாட்டிலிருந்து, பிற நாடுகள் சென்று குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொண்ட தமிழர்களே! பினீசியர்கள் கி.மு. 3000 ஆண்டு அளவிலேயே தமிழ்நாட்டிலிருந்து சென்று பிறநாடுகளில் குடியேறியவர்கள் தான் என முனைவர், S. Radhakrishna, (Our Heritage (Page-22) 44-லில்) தெளிவாக்க் கூறுகிறார்.

கி.மு. 3000 இல் தமிழர்களின் முதல் கடற்பயணம்.
1. தமிழனின் முதற்கடற்பயணம் கி.மு. 3000இல் தொடங்கியது. அப்பயணம், தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டு, செங்கடல் வழியாகச் சென்று கீதோன், தீரே ஆகிய துறைமுகங்களை அடைந்தது. (ஒரு பிரிவு)
2. கி.மு. 25000இல், பாரிகாஸாவிலிருந்து தொடங்கி கடற்கரை ஓரமாகவே சென்று செங்கடல் வழியாகத் தீரே, கீதோன் ஆகிய துறைமுகங்களை அடைந்தது. (மற்றொரு பிரிவு)

பினீசியர்கள் கடற்பயணம்.
1. கி.மு. 800இல், கீதோன், தீரே துறைமுகங்களிலிருந்து தொடங்கி இங்கிலாந்தைச் சுற்றி, அய்ஸ்லாந்தை அடைந்து, அங்கிருந்து வடஅமெரிக்காவின் வடசேலம் என்னும் துறைமுகத்தை அடைந்தனர்.
2. கி.மு. 500இல் கீதோன், தீரே துறைமுகங்களிலிருந்து புறப்பட்டு நேர்வழியில் அமெரிக்காவிலுள்ள, வடசேலம் துறைமுகம் அடைந்தனர்.
3. கி.மு. 300ல் கீதோன், தீரே துறைமுகங்களிலிருந்து புறப்பட்டு நேர்வழியில் மெகானிக்ஸ் பார்க்கை அடைந்தனர்.
4. கி.மு. 150இல் கீதோன், தீரே துறைமுகங்களிலிருந்து புறப்பட்டு அமேஸான் ந்திக் கழிமுகத்தை அடைந்தனர்.
5. கி.மு. 1800இல் தீரே, கீதோனிலிருந்து புறப்பட்டு, ஆப்பிரிக்காவைச் சுற்றிக் கொண்டு, செங்கடல் வரை வந்து, அங்கிருந்து நேராகத் தமிழ்நாட்டை அடைந்தனர்.

பினீசியர்கள் கல்வெட்டு (கி.மு.1600)
பினீசியர்கள் வடஅமெரிக்க மேற்குக் கரையோரமாகச் சென்று, வடஅமெரிக்காவின் கீழைகடற் கரையிலும் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டனர். இப்பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள பினீசியர்கள் கல்வெட்டு, கி.மு. 1600அய்ச் சார்ந்தது.

இது அமெரிக்காவிலுள்ள “ரோட்ஸ் தீவில்” கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டில் சிவலிங்கமும், ஓர் என்ற சொல்லையும் காணலாம். இதிலிருந்து நாம் என்ன உணருகிறோம்? அதாவது கடந்த 4000 ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்காவிலும், அதனருகிலுள்ளள ரோட்ஸ் தீவிலும் தமிழன் வாழ்ந்தான் என்பது தெளிவாகிறது. ஆதிதமிழன் சிவனை வழிப்பட்டான். சிவலிங்கங்களை உருவாக்கிப் பூசித்து வந்தான். ஓம் என்ற வார்த்தை, தெய்வ வழிபாட்டில் உச்சரிக்கும் தமிழ்ச் சொல், தமிழ் மொழி 4000 ஆண்டுகளுக்கு முன்றே அமெரிக்காவில் உச்சரிக்கப்பட்டது என்ற வரலாற்றை உணர்கிறோம். கல்வெட்டுகளில் செதுக்கப்படுகிறது என்றால், தமிழனின் நிலைமையும், தமிழ் மொழியின் வளர்ச்சியையும், தொன்மையும் நன்கு தெளிவாக உணர முடிகிறது.

அப்பொலோ தெய்வம்
அப்பல்லோ தெய்வம்
அர்மிடஸ்தேவதை
அப்பொலோ என்பது கிரேக்க புராணங்களில் தோன்றும் தெய்வங்களில் தலைமைத் தெய்வமாகும். எந்தக் கிரேக்க தெய்வமும் பெறாத பெரும்பேரைப் பெற்ற தெய்வம். இத்தெய்வம் இந்தியக் கடவுள்களாகிய இராமர், கிருஷ்ணர் இந்திரன், சூரியன் போன்றோர்களின் குணங்களையும், செயல்களையும் கொண்ட கடவுளாகச் சித்தரிக்கப்படுகிறது. அதாவது இந்தியத் தமிழர்களின் கலாச்சாரங்களை முழுமையாகப் புகுத்தி, தமிழர் கலாச்சாரத்தையும் பண்புகளையும் வலியுறுத்துகிறது. இதிலிருந்து கிரேக்கம், ரோம் போன்ற பகுதிகளில் தமிழர்களின் கலாச்சாரங்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்றே பரவியிருந்தது என்பதைத் தெரியலாம்.

பினீசியர்களின் கல்வெட்டு கி.மு. 1600
1. சிவலிங்கம்.
 2. “ஓம்” காணப்படுகிறது.

அர்டமிஸ் தேவதை.
அர்டமிஸ் என்பது, ரோமானியர்கள் வழிபடும் ஒரு பெண் தெய்வம். இதனை அர்டமிஸ் தேவதை அல்லது டயானா தேவதை என அழைப்பதுண்டு. அப்பொலோ, தெய்வத்தின் சகோதரி ஆவாள். அர்டமிஸ் திருவிழாவில் பெண்களே அதிகம் பங்கு பெறுவார்கள். இது தமிழ் நாட்டில் வழங்கி வரும் அல்லது நிகழ்ந்து வரும் திருப்பாவை, திருவெம்பாவை, வரலட்சுமி விரதம், நவராத்திரிக்கொழு போன்ற பாவை நோண்பாகும். இது பெண்களால் போற்றி நடத்தப்படும், பெண்களின் வழிபாடாகும். இத்தேவதை இந்தியத் தெய்வங்களாகிய இலட்சுமி, சரசுவதி, பார்வதி போன்றோர்களின் குணங்களையும், செயல்களையும் கொண்ட தேவதையாகச் சித்தரிக்கப்படுகிறது. சுருங்கக் கூறின் இந்தியத்தமிழ்ப் பெண்களின் கலாச்சாரங்கள் முழுமையாகத் திணிக்கப்பட்டு, மாற்றுரு பெற்ற தமிழ்த்தேவதையாக இயங்குகிறது. இதிலிருந்து தமிழர்களின் கலாச்சாரங்களும், பண்பாடுகளும் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பாரெங்கும் பரப்பிய தமிழ் முழக்கத்தில் பெருமிதம் கொள்கிறேன்.

பினீசியர்களின் நாணயங்கள்.
ஆதியில் தமிழ்நாட்டுக் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த தமிழன் மீன் பிடிக்கும் தொழிலையும், மரமேறும் தொழிலையும் கையாண்டு வந்தான். அவன், கடலனில் செல்ல, பனை மற்றும் தென்னை மரங்களை ஒன்றுடன் ஒன்றை இணைத்துப் படகுகள் அமைத்து நீரில் மிதக்கும் கற்றிருந்தான். மரமேறிகளாகிய தமிழன் பினீசியர்கள் எனப்பேரேற்று பாரெங்கும் பரவினான். அவன் கடலைக் கடக்கப் படகுகளை (பரிசில்கள்) பயன்படுத்தினான். ஆண்டுகள் பல கடக்க, ஆற்றலும் பல பெற்றான், வளர வளர பாய்மரக்கப்பல்களைப் பயன்படுத்த முனைந்தான். மொத்தத்தில் கடல் கடந்து வழித்தடம் அதாவது கடல்மார்க்கத்தை நன்கு தெரிந்து கொண்டான். வணிகத்தைப் பிற நாடுகளுடன் பெருக்கினான். கடல்வழித் தடத்தைக் கண்டறிந்த பினீசியர் (தமிழன்) படகு பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட்டான்.

பினீசியர்களின் நாணயங்கள் கி.மு. 6 – ம் நூற்றாண்டு.
1. குதிரை வண்டி பொறிக்கப்பட்ட நாணயம்
2. படகு சின்னம் பொறிக்கப்பட்ட நாணயம்

படத்தில் கொடுக்கப்பட்டுள்ள பினீசியர்களின் நாணயத்தைச் சற்று உற்றுப்பாருங்கள். ஒன்றில் படகு இருப்பதையும், அதை ஒரு தமிழன் தலைப்பாகையுடன் உட்கார்ந்துகொண்டு மரத்துடுப்பால் தள்ளுவதையும் நன்கு அறிவீர்கள். அப்படகானது தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளில் கட்டப்படும் படகுகளையும், கட்டுமரங்களையும், ஒத்திருப்பது நன்கு புரியும். அப்படகில் சூலம் போன்ற ஒரு மீன்பிடி ஆயுதம் இருப்பதையும் காணுங்கள்.

ஒரு தமிழன், ஒரு படகில் தலைப்பாகையுடன் உட்கார்ந்து கொண்டு, துடுப்பால் படகைத் தள்ளிச் செல்வது, 4000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் கடல்வழி உலகெங்கும் சென்று, தன் தாய்மொழித் தமிழையும், தன் கலாச்சாரப் பண்பாடுகளையும் பாரெங்கும் பரப்பி வரலாறு படைத்தான் என்ற உண்மை தெளிவாகும்.

மற்றொரு நாணயத்தில், தரைவழித் தடம் கண்டு உலகெங்கும் என்று பரவினான் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் ஒரு தமிழன் (பினீசியர்) சரக்கேற்றப்பட்ட குதிரை வண்டியில், தலைப்பாகையுடன் குதிரைகளை ஓட்டும் காட்சியையும், அவ்வண்டியில் பின்புறமாக பொருட்களை காவல் காத்துக் கொண்டு, ஆயுதபாணியாய் ஓர் தமிழன் நிற்பதையும் காணுங்கள். தரைவழியிலும் தமிழன் உலகாண்டான் என்ற உண்மையை இந்நாணயம் வெளிக்காட்டுகின்றது.

இந்த நாணயங்களே, தமிழர், தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரைவழியாகவும், கடல் கடந்து, நாடு கடந்து உலகெங்கும் வரலாறு கண்டான் என்ற உண்மையை படம் பிடித்துக் காட்டுகிறது. மற்றும் அஸ்ஸியரின் கல்வெட்டுக்கள் தமிழனின் வரலாற்றிற்கு நற்சான்றாய் உள்ள செய்தி பல செப்புகின்றன.
தமிழின் வளர்ச்சி
வரிவடிவ மாற்றங்கள்
தமிழர் பங்கும் மொழி வளர்ச்சியும்
தமிழ்மொழியின் சிறப்பு
தமிழ்மொழியின் நிலை
தமிழ்மொழியில் சீர்திருத்தம்
பெரியாரின் சீர்திருத்தம்
நன்றி.
பெரியார் மீடியா யுனிட் கைல்புறோன் ஜெர்மனி & பெ. சிவராமன் 


சங்கப் புலவர்கள் அகரவரிசையில் 
1) அகம்பன் மாலாதனார்
2) அஞ்சியத்தை மகள் நாகையார்
3) அஞ்சில் அஞ்சியார்
4) அஞ்சில் ஆந்தையார்
5) அடைநெடுங்கல்வியார்
6) அணிலாடு முன்றிலார்
7) அண்டர் மகன் குறுவழுதியார்
8) அதியன் விண்ணத்தனார்
9) அதி இளங்கீரனார்
10) அம்மூவனார்
11) அம்மெய்நாகனார்
12) அரிசில் கிழார்
13) அல்லங்கீரனார்
14) அழிசி நச்சாத்தனார்
15) அள்ளூர் நன்முல்லையார்
16) அறிவுடைநம்பி
17) ஆரியன் பெருங்கண்ணன்
18) ஆடுதுறை மாசாத்தனார்
19) ஆதிமந்தி
20) ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன்
21) ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
22) ஆலங்குடி வங்கனார்
23) ஆலத்தூர் கிழார்
24) ஆலம்பேரி சாத்தனார்
25) ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
26) ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
27) ஆவூர்கிழார்
28) ஆலியார்
29) ஆவூர் மூலங்கீரனார்
30) இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
31) இடைக்காடனார்
32) இடைக்குன்றூர்கிழார்
33) இடையன் சேந்தன் கொற்றனார்
34) இடையன் நெடுங்கீரனார்
35) இம்மென்கீரனார்
36) இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
37) இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
38) இருந்தையூர்க் கொற்றன் புலவன்
39) இரும்பிடர்தலையார்
40) இளங்கீரந்தையார்
41) இளங்கீரனார்
42) இளநாகனார்
43) இளந்திரையன்
44) இளந்தேவனார்
45) இளம்புல்லூர்க் காவிதி
46) இளம்பூதனார்
47) இளம்பெருவழுதி
48) இளம்போதியார்
49) இளவெயினனார்
50) இறங்குடிக் குன்றநாடன்
51) இறையனார்
52) இனிசந்த நாகனார்
53) ஈழத்துப் பூதந்தேவனார்
54) உகாய்க் குடிகிழார்
55) உக்கிரப் பெருவழுதி
56) உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
57) உம்பற்காட்டு இளங்கண்ணனார்
58) உருத்திரனார்
59) உலோச்சனார்
60) உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
61) உழுந்தினைம் புலவர்
62) உறையனார்
63) உறையூர் இளம்பொன் வாணிகனார்
64) உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
65) உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
66) உறையூர்ச் சல்லியங் குமரனார்
67) உறையூர்ச் சிறுகந்தனார்
68) உறையூர்ப் பல்காயனார்
69) உறையூர் மருத்துவன் தாமோதரனார்
70) உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
71) ஊட்டியார்
72) ஊண்பித்தை
73) ஊண்பொதி பசுங்குடையார்
74) எயிற்றியனார்
75) எயினந்தையார்
76) எருமை வெளியனார்
77) எருமை வெளியனார் மகனார் கடலனார்
78) எழூப்பன்றி நாகன் குமரனார்
79) ஐயாதி சிறு வெண்ரையார்
80) ஐயூர் முடவனார்
81) ஐயூர் மூலங்கீரனார்
82) ஒக்கூர் மாசாத்தனார்
83) ஒக்கூர் மாசாத்தியார்
84) ஒருசிறைப் பெரியனார்
85) ஒரூத்தனார்
86) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
87) ஓதஞானி
88) ஓதலாந்தையார்
89) ஓரம்போகியார்
90) ஓரிற்பிச்சையார்
91) ஓரேர் உழவர்
92) ஔவையார்
93) கங்குல் வெள்ளத்தார்
94) கச்சிப்பேடு இளந்தச்சன்
95) கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
96) கச்சிப்பேடு பெருந்தச்சனார்
97) கடம்பனூர்ச் சாண்டில்யன்
98) கடலூர்ப் பல்கண்ணனார்
99) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
100) கடுந்தொடைக் காவினார்
101) கடுந்தொடைக் கரவீரன்
102) கடுவன் இளமள்ளனார்
103) கடுவன் இளவெயினனார்
104) கடுவன் மள்ளனார்
105) கணக்காயன் தத்தனார்
106) கணியன் பூங்குன்றனார்
107) கண்ணகனார்
108) கண்ணகாரன் கொற்றனார்
109) கண்ணங்கொற்றனார்
110) கண்ணம் புல்லனார்
111) கண்ணனார்
112) கதக்கண்ணனார்
113) கதப்பிள்ளையார்
114) கந்தரத்தனார்
115) கபிலர்
116) கயத்தூர்கிழார்
117) கயமனார்
118) கருங்குழலாதனார்
119) கரும்பிள்ளைப் பூதனார்
120) கருவூர்க்கிழார்
121) கருவூர் கண்ணம்பாளனார்
122) கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
123) கருவூர் கலிங்கத்தார்
124) கருவூர் கோசனார்
125) கருவூர் சேரமான் சாத்தன்
126) கருவூர் நன்மார்பனார்
127) கருவூர் பவுத்திரனார்
128) கருவூர் பூதஞ்சாத்தனார்
129) கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
130) கல்பொருசிறுநுரையார்
131) கல்லாடனார்
132) கவைமகன்
133) கழாத்தலையார்
134) கழார்க் கீரனெயிற்றியனார்
135) கழார்க் கீரனெயிற்றியார்
136) கழைதின் யானையார்
137) கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
138) கள்ளில் ஆத்திரையனார்
139) காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
140) காசிபன் கீரன்
141) காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
142) காப்பியஞ்சேந்தனார்
143) காப்பியாற்றுக் காப்பியனார்
144) காமஞ்சேர் குளத்தார்
145) காரிக்கிழார்
146) காலெறி கடிகையார்
147) காவட்டனார்
148) காவற்பெண்டு
149) காவன்முல்லையார்
150) காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
151) காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
152) காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
153) காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
154) காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
155) கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
156) கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
157) கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
158) கிள்ளிமங்கலங்கிழார்
159) கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
160) கீரங்கீரனார்
161) கீரந்தையார்
162) குடபுலவியனார்
163) குடவாயிற் கீரத்தனார்
164) குட்டுவன் கண்ணனார்
165) குட்டுவன் கீரனார்
166) குண்டுகட் பாலியாதனார்
167) குதிரைத் தறியனார்
168) குப்பைக் கோழியார்
169) குமட்டூர் கண்ணனார்
170) குமுழிஞாழலார் நப்பசலையார்
171) குழற்றத்தனார்
172) குளம்பனார்
173) குளம்பாதாயனார்
174) குறமகள் இளவெயினி
175) குறமகள் குறியெயினி
176) குறியிறையார்
177) குறுங்கீரனார்
178) குறுங்குடி மருதனார்
179) குறுங்கோழியூர் கிழார்
180) குன்றம் பூதனார்
181) குன்றியனார்
182) குன்றூர்க் கிழார் மகனார்
183) கூகைக் கோழியார்
184) கூடலூர்க் கிழார்
185) கூடலூர்ப பல்கண்ணனார்
186) கூவன்மைந்தன்
187) கூற்றங்குமரனார்
188) கேசவனார்
189) கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
190) கொட்டம்பலவனார்
191) கொல்லன் அழிசி
192) கொல்லிக் கண்ணன்
193) கொள்ளம்பக்கனார்
194) கொற்றங்கொற்றனார்
195) கோக்குளமுற்றனார்
196) கோடைபாடிய பெரும்பூதன்
197) கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
198) கோட்டியூர் நல்லந்தையார்
199) கோண்மா நெடுங்கோட்டனார்
200) கோப்பெருஞ்சோழன்
201) கோவர்த்தனர்
202) கோவூர்க் கிழார்
203) கோவேங்கைப் பெருங்கதவனார்
204) கோழிக் கொற்றனார்
205) கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
206) கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
207) சங்கவருணர் என்னும் நாகரியர்
208) சத்திநாதனார்
209) சல்லியங்குமரனார்
210) சாகலாசனார்
211) சாத்தந்தந்தையார்
212) சாத்தனார்
213) சிறுமோலிகனார்
214) சிறுவெண்டேரையார்
215) சிறைக்குடி ஆந்தையார்
216) சீத்தலைச் சாத்தனார்
217) செங்கண்ணனார்
218) செம்பியனார்
219) செம்புலப்பெயல்நீரார்
220) செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
221) செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
222) செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
223) செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
224) சேந்தங்கண்ணனார்
225) சேந்தம்பூதனார்
226) சேந்தங்கீரனார்
227) சேரமானெந்தை
228) சேரமான் இளங்குட்டுவன்
229) சேரமான் கணைக்கால் இரும்பொறை
230) சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
231) சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
232) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
233) சோழன் நலங்கிள்ளி
234) சோழன் நல்லுருத்திரன்
235) தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
236) தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
237) தனிமகனார்
238) தாமாப்பல் கண்ணனார்
239) தாமோதரனார்
240) தாயங்கண்ணனார்
241) தாயங்கண்ணியார்
242) திப்புத்தோளார்
243) திருத்தாமனார்
244) தீன்மதிநாகனார்
245) தும்பிசேர்கீரனார்
246) துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
247) துறையூர்ஓடைக்கிழார்
248) தூங்கலோரியார்
249) தேய்புரி பழங்கயிற்றினார்
250) தேரதரன்
251) தேவகுலத்தார்
252) தேவனார்
253) தொடித்தலை விழுத்தண்டினர்
254) தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
255) தொல்கபிலர்
256) நக்கண்ணையார்
257) நக்கீரர்
258) நப்பசலையார்
259) நப்பண்ணனார்
260) நப்பாலத்தனார்
261) நம்பிகுட்டுவன்
262) நரிவெரூத்தலையார்
263) நரைமுடி நெட்டையார்
264) நல்லச்சுதனார்
265) நல்லந்துவனார்
266) நல்லழிசியார்
267) நல்லாவூர்க் கிழார்
268) நல்லிறையனார்
269) நல்லுருத்திரனார்
270) நல்லூர்ச் சிறுமேதாவியார்
271) நல்லெழுநியார்
272) நல்வழுதியார்
273) நல்விளக்கனார்
274) நல்வெள்ளியார்
275) நல்வேட்டனார்
276) நற்சேந்தனார்
277) நற்றங்கொற்றனார்
278) நற்றமனார்
279) நன்பலூர்ச் சிறுமேதாவியார்
280) நன்னாகனார்
281) நன்னாகையார்
282) நாகம்போத்தன்
283) நாமலார் மகன் இளங்கண்ணன்
284) நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
285) நெடுங்கழுத்துப் பரணர்
286) நெடும்பல்லியத்தனார்
287) நெடும்பல்லியத்தை
288) நெடுவெண்ணிலவினார்
289) நெட்டிமையார்
290) நெய்தற் கார்க்கியார்
291) நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
292) நெய்தற்றத்தனார்
293) நொச்சி நியமங்கிழார்
294) நோய்பாடியார்
295) பக்குடுக்கை நன்கணியார்
296) படுமரத்து மோசிகீரனார்
297) படுமரத்து மோசிக்கொற்றனார்
298) பதடிவைகலார்
299) பதுமனார்
300) பரணர்
301) பராயனார்
302) பரூஉமோவாய்ப் பதுமனார்
303) பறநாட்டுப் பெருங்கொற்றனார்
304) பனம்பாரனார்
305) பாண்டரங்கண்ணனார்
306) பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
307) பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
308) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன்
309) பாண்டியன் பன்னாடு தந்தான்
310) பாண்டியன் மாறன் வழுதி
311) பாரதம் பாடிய பெருந்தேவனார்
312) பாரிமகளிர்
313) பார்காப்பான்
314) பாலைக் கௌதமனார்
315) பாலை பாடிய பெருங்கடுங்கோ
316) பாவைக் கொட்டிலார்
317) பிசிராந்தையார்
318) பிரமசாரி
319) பிரமனார்
320) பிரான் சாத்தனார்
321) புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
322) புல்லாற்றூர் எயிற்றியனார்
323) பூங்கணுத் திரையார்
324) பூங்கண்ணன்
325) பூதங்கண்ணனார்
326) பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
327) பூதம்புல்லனார்
328) பூதனார்
329) பூதந்தேவனார்
330) பெருங்கண்ணனார்
331) பெருங்குன்றூர்க் கிழார்
332) பெருங்கௌசிகனார்
333) பெருஞ்சாத்தனார்
334) பெருஞ்சித்திரனார்
335) பெருந்தலைச்சாத்தனார்
336) பெருந்தேவனார்
337) பெருந்தோட் குறுஞ்சாத்தன்
338) பெரும் பதுமனார்
339) பெரும்பாக்கன்
340) பெருவழுதி
341) பேயனார்
342) பேய்மகள் இளவெயினி
343) பேராலவாயர்
344) பேரிசாத்தனார்
345) பேரெயின்முறுவலார்
346) பொதுக்கயத்துக் கீரந்தை
347) பொதும்பில் கிழார்
348) பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
349) பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
350) பொத்தியார்
351) பொய்கையார்
352) பொருந்தில் இளங்கீரனார்
353) பொன்மணியார்
354) பொன்முடியார்
355) பொன்னாகன்
356) போதனார்
357) போந்தைப் பசலையார்
358) மடல் பாடிய மாதங்கீரனார்
359) மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
360) மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
361) மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
362) மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
363) மதுரை இனங்கௌசிகனார்
364) மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
365) மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
366) மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
367) மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
368) மதுரைக் கணக்காயனார்
369) மதுரைக் கண்டராதித்தனார்
370) மதுரைக் கண்ணத்தனார்
371) மதுரைக் கவுணியன் பூதத்தனார்
372) மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
373) மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
374) மதுரைக் காருலவியங் கூத்தனார்
375) மதுரைக் கூத்தனார்
376) மதுரைக் கொல்லன் புல்லன்
377) மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
378) மதுரைச் சுள்ளம் போதனார்
379) மதுரைத் தத்தங்கண்ணனார்
380) மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
381) மதுரைத் தமிழக் கூத்தனார்
382) மதுரைப் படைமங்க மன்னியார்
383) மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
384) மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
385) மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
386) மதுரைப் புல்லங்கண்ணனார்
387) மதுரைப் பூதனிள நாகனார்
388) மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
389) மதுரைப் பெருங்கொல்லன்
390) மதுரைப் பெருமருதனார்
391) மதுரைப் பெருமருதிளநாகனார்
392) மதுரைப் போத்தனார்
393) மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
394) மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
395) மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
396) மதுரை வேளாசன்
397) மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
398) மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
399) மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்
400) மருதம் பாடிய இளங்கடுங்கோ
401) மருதனிளநாகனார்
402) மலையனார்
403) மள்ளனார்
404) மாங்குடிமருதனார்
405) மாடலூர் கிழார்
406) மாதீர்த்தன்
407) மாமிலாடன்
408) மாமூலனார்
409) மாயேண்டன்
410) மார்க்கண்டேயனார்
411) மாலைமாறன்
412) மாவளத்தன்
413) மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
414) மாறோக்கத்து நப்பசலையார்
415) மாற்பித்தியார்
416) மிளைக் கந்தன்
417) மிளைப் பெருங்கந்தன்
418) மிளைவேள் பித்தன்
419) மீனெறி தூண்டிலார்
420) முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
421) முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
422) முடத்தாமக்கண்ணியார்
423) முடத்திருமாறன்
424) முதுகூத்தனார்
425) முதுவெங்கண்ணனார்
426) முப்பேர் நாகனார்
427) முரஞ்சியயூர் முடிநாகராயர்
428) முள்ளியூர்ப் பூதியார்
429) முலங்கீரனார்
430) மையோடக் கோவனார்
431) மோசிக்கண்ணத்தனார்
432) மோசிக்கீரனார்
433) மோசிக்கொற்றன்
434) மோசிக்கரையனார்
435) மோசிசாத்தனார்
436) மோசிதாசனார்
437) வடநெடுந்தத்தனார்
438) வடவண்ணக்கன் தாமோதரன்
439) வடமோதங்கிழார்
440) வருமுலையாரித்தி
441) வன்பரணர்
442) வண்ணக்கன் சோருமருங்குமரனார்
443) வண்ணப்புறக் கந்தரத்தனார்
444) வாடாப்பிராந்தன்
445) வாயிலான் தேவன்
446) வாயிலிலங்கண்ணன்
447) வான்மீகியார்
448) விட்டகுதிரையார்
449) விரிச்சியூர் நன்னாகனார்
450) விரியூர் நன்னாகனார்
451) வில்லக விரலினார்
452) விழிகட்பேதை பெருங்கண்ணனார்
453) விற்றூற்று மூதெயினனார்
454) விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
455) வினைத் தொழில் சோகீரனார்
456) வீரை வெளியனார்
457) வீரை வெளியன் தித்தனார்
458) வெண்கண்ணனார்
459) வெண்கொற்றன்
460) வெண்ணிக் குயத்தியார்
461) வெண்பூதன்
462) வெண்பூதியார்
463) வெண்மணிப்பூதி
464) வெள்ளாடியனார்
465) வெள்ளியந்தின்னனார்
466) வெள்ளிவீதியார்
467) வெள்வெருக்கிலையார்
468) வெள்ளைக்குடி நாகனார்
469) வெள்ளைமாளர்
470) வெறிபாடிய காமக்கண்ணியார்
471) வேட்டகண்ணன்
472) வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
473) வேம்பற்றுக் குமரன்

Comments

  1. வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி வாழிய வாளியவே..........

    ReplyDelete
  2. அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    ÷÷

    ReplyDelete
  3. பயனுள்ள பதிப்பு
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
    வாழ்க தமிழ்

    ReplyDelete
  4. எனக்கு உங்கள் அலை பேசி எண் கிடைக்குமா??
    என்னுடைய அலை பேசி எண்:
    அஷோக் ஐயர்
    9962777733
    சென்னை,தமிழ்நாடு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சங்க காலம் வரலாறு

நாவலன் தீவு வரலாறு