தமிழ் வரலாறு : தமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்!
தமிழ் மொழியின்
தொன்மையும் தோற்றமும்
தமிழ்மொழியின் முதல் தோற்றம்
கி.மு.5,00,000 மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின்
முதல் தோற்றமாகும். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப்
பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.
தமிழ் தோன்றிய இடம்
குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும்
தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப்
போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம்.
.
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப்
பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை
உலகிற்குச் சுட்டிக் காட்டினர். குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ்
நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது.
ஆஸ்திரேலியாவையும்
தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே
குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள்
திலு.ஓல்டுகாம், திரு.
எக்கேல், திரு.
கிளேற்றர், திரு.
கட்டு எலியட், திரு.
தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
மேலும் ஹிராடடஸ் அவர்கள்
குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர் இம்மலைத்
தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில்
கொள்ள வேண்டும்.
இவற்றின் மையத்தில் அமைந்த
மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா
கண்டமாகும். இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என
பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன்.
அவன் கையாண்ட நாகரிகம்தான் தமிழ் நாகரிகம். அவனுடைய
வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது.
இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள்
தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்
உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும்
பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை.
இதற்குச் சான்றாக
பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும்
உதவுகின்றன.
குமரிக்கண்டப் பழங்குடிமக்கள்
தமிழர்களே!
குமரிக்கண்டத்தின் பெரும்
பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே!
அம்மொழியும் தமிழ் மொழியே!
கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன.
பழந்தமிழ் இலக்கியங்களில்
கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல.
நான்கு முறை ஏற்பட்ட பெரும்
கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.
நான்கு பெருங் கடல் கோள்கள்
1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது
2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது
3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது
4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.
சிறுகடல் கோள்கள் எண்ணில்
அடங்காது. தொல்காப்பியம் பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட
பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம்.
தொல்காப்பியம் தோன்றிய காலம்
கி.மு. 3-ஆம்
நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும்
இடைப்பட்ட காலமாகும்.
தொல்காப்பியர் காலத்திற்கு
வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க
தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன.
ஆனால் அவைகள் அனைத்தும்
நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.
மூன்று தமிழ் :
தமிழ் மொழி தோற்றத்தையும்
வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.
1. பழந்தமிழ்
2. இடைக்காலத்தமிழ்
3. தற்காலத்தமிழ்
1. பழந்தமிழ் (Ancient
Tamil) உட்பிரிவுகள்
மூன்று.
அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ் Early
ancient Tamil (or) Proto Ancient Tamil
ஆ. மத்திய பழந்தமிழ் –
Medieval Ancient Tamil
இ. பின்பழந்தமிழ் – Later
Ancient Tamil
2. இடைக்காலத் தமிழ் (Medieval
Tamil) உட்பிரிவுகள்
மூன்று.
அ. முன் இடைக்காலத் தமிழ் – Early
Medieval Tamil
ஆ. மத்திய இடைக்காலத் தமிழ் –
Medium Mediaval Tamil
இ. பின் இடைக்காலத் தமிழ் – Later
Medieval Tamil
3. தற்காலத் தமிழ் (Mode
Tamil) உட்பிரிவுகள்
மூன்று.
அ. முன் தற்காலத் தமிழ் – Early
Mode Tamil
ஆ. மத்திய தற்காலத் தமிழ் –
Medium Mode Tamil
இ. பின் தற்காலத் தமிழ் – Later
Mode Tamil
தொல்பழங்காலத்தில் தமிழ்
மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும்
இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள்.
பதிவுக்கு நன்றி..
ReplyDeleteஅன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ ணரனறயட