நரகத் தீவு


பேய் பங்களா, 13-ம் நம்பர் வீடு என்பது போன்ற மர்ம மாளிகைகளின் கதைகள் மக்களிடம் நிறைய உலவும். பல்வேறு திரைபடங்களும் அந்த பீதியை மையமாக வைத்து வெளிவந்து திகிலை அதிகரிக்கும்.
நிஜமாகவே உலகம் முழுவதும் மிக அதிகமான மக்களை பீதி அடையச் செய்த சில இடங்கள் இருக்கின்றன. அங்கே நடக்கும் மர்ம உயிரிழப்புகள், உண்மை விளங்கா சம்பவங்கள் அருகில் வசிப்பவர்களை பயத்தில் பதற வைத்து வயிற்றைக் கலக்கும். கேட்டாலும், பார்த்தாலும் குலைநடுங்க வைக்கும் உலகின் அதிபயங்கர இடங்களைத் தெரிந்துகொள்ளலாம்…
பலி கொடுக்காததால் பலிவாங்குகிறது…
`மாக் சிலாட்’! சாத்தானின் பங்களா இது. அயர்லாந்து நாட்டில் இருக்கிறது. ஆரம்பத்தில் வழிபாட்டுத் தலமாகத்தான் இருந்தது. ஒருநாள் `எனக்கு ரத்தபலி வேண்டும்’ என்று மர்ம குரல் கேட்டதாம். மக்கள் அதிர்ந்துபோய் அன்றோடு வழிபாடு செய்வதை நிறுத்தினர்.
அதன்பிறகு `சாத்தானின்’ சேட்டைகள் ஆரம்பிக்க. அந்த பகுதியே ரணகளமானது. அடிக்கடி மர்ம மரணங்கள் நடந்தது. அங்குள்ள தரை பகுதியில் முத்தக்குறிகள் காணப்படும். மணலை நுகர்ந்து பார்த்தால் ரத்தவாடையும், பிணவாடையும் வீசும். இதனால் பீதி அடைந்த மக்கள் மறந்தும் கூட அந்தபக்கம் போவதில்லை.

கிரேபையர் கல்லறை
பழிவாங்கும் ஆவி…
ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் உள்ள `கிரேபையர் பைக் கிரேவ்’ என்ற சுடுகாடு இன்றளவும் பலரையும் திகிலூட்டி வருகிறது. பொதுவாகவே சுடுகாடு என்றால் மக்களுக்கு கொஞ்சம் அச்சம் வரும். சுடுகாடு பற்றி மக்கள் பேசும் கற்பனைக் கதைகள் யாவும் இங்கே நிஜமாக நடபதால் ஊரே மிரண்டுதான் கிடக்கிறது.
இந்த சுடுகாட்டு பகுதியில் திடீர் திடீரென்று குளிர்ந்த காற்றும், பிணம் எரியாதபோதும் திடீர் பிணவாடையும் வீசுமாம். அத்துடன் சமாதியில் இருந்து கூச்சல் சத்தமும் கேட்கிறதாம். சிலநேரங்களில் கண்ணாடி நொறுங்குவதுபோன்ற சத்தம் கேட்குமாம். நெருங்கிச் சென்றுபார்த்தால் கண்ணாடித் துண்டுகளும் காணப்படும்.
இப்படி நடப்பதால் இங்குள்ளவர்கள் இருட்டியபிறகு வெளியில் எட்டிக்கூட பார்பது கிடையாது. அதுமட்டுமில்லாமல் அடிக்கடி வீடுகள் இருக்கும் பகுதிக்குள்ளும் பேய்கள் வந்துவிடுமாம். ஜார்ஜ் மெக்கன்சி என்பவரின் கல்லறையில் ரத்தக்காட்டேறி குடியிருப்பதாக பலரும் நம்புகிறார்கள். இவர் மேலதிகாரியை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டபட்டு சித்திரவதை செய்து கொல்லபட்டார். அதற்கு பழிக்குபழி வாங்குவதற்காக ஆவியாக அலைவதாக மக்கள் கூறுகிறார்கள்.
மர்மத் தீவு
பலிவாங்கும் மர்மத் தீவு இது. அழகாக இருக்கிறதே என்று கப்பல், படகில் வருபவர்கள் அங்கே ஒதுங்கினால் பிணமாவது நிச்சயம். இன்னும் கூட மாதம்தோறும் மர்மமான முறையில் பலர் பலியாகிறார்கள். இந்தத் தீவு, பசிபிக் கடலில் சாமோயான் தீவு மற்றும் ஹவாய்யன் தீவுகளுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. `பால்மைரா’ என்பது இந்தத் தீவின் பெயராகும். ஆனால் மர்ம மரணங்கள் ஏராளமாக நடப்பதால் இது `நரகத்தீவு’ என்றே அழைக்கபடுகிறது.
இரண்டாம் உலகபோரின்போது கடல் வழியாக வந்த அமெரிக்க கப்பல்படையினர் பலர் இந்தத்தீவில் முகாமிட்டபோது மர்மமான முறையில் இறந்து போனார்கள். மயான அமைதியும், எப்போதும் இருக்கும் இருண்ட சூழலும் `நரகத் தீவு’ என்ற பெயருக்கு சரியாக பொருந்துவதோடு அனைவருக்குள்ளும் பீ(பே)தியைக் கிளப்பி வருகிறது.

வொயிட் சேபல்
செத்த பின்னும் மிரட்டும் மன்னன்
ஹிட்லரைபோல பிறரை கொடுமை செய்வதில் இன்பம் காணும் மன்னன் டிராகுலா. ருமேனியா நாட்டைச் சேர்ந்த 6-ம் டிராகுலா மன்னன் சித்ரவதை செய்வதில் பெயர்பெற்றவன். கூர்மையான ஊசிகளால் உடலை துளைபோடுவது கைதிகளுக்கு இவன் விரும்பிக் கொடுக்கும் தண்டனையாகும். கைதியின் உடலில் ஏராளமான இடங்களில் துளைபோடுவதால் கைதி துடிதுடித்து இறப்பதை டிராகுலா மகிழ்ச்சி பொங்க ரசிப்பான். ஒரு முறை துருக்கி நாட்டிற்கு எதிரான போரில் டிராகுலா சிறைபிடிக்கபட்டான். அவனை மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றபோது குதிரையில் இருந்து தவறிவிழுந்து இறந்து விட்டான்.
அவனது சித்ரவதை பங்களா பீதியின் நினைவுச்சின்னமாக இன்றும் நிலைத்து நின்று அவனது கொடூரத்தை நினைவுபடுத்தி வருகிறது.
கொலை நடக்கும் கலையரங்கம்
கைதிகளின் மரணதடனையை நிறைவேற்றும் கொலையரங்கம் இது. அந்தக் கலையரங்கில் ஆயிரக் கணக்கானவர்கள் கூடி இருப்பார்கள். நடுவில் உள்ள மேடையில் இரு கைதிகளை மோதவிடுவார்கள். இருவரில் ஒருவர் இறக்கும் வரை சண்டை தொடரும். சில வேளைகளில் சிங்கம், புலியுடன் கைதிகளை மோதவிடுவார்கள். இத்தாலி நாட்டில் உள்ளது இந்தக் கொலையரங்கம். இத்தாலி கொலோசியம் என்றால் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். ஏராளமானவர்கள் பார்வையிட்டுச் செல்கிறார்கள்.

டிராகுலா பங்களா
சாராவின் ரகசிய மாளிகை
சாரா வின்செஸ்டர் ஒரு இளம்பெண். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்தாள். அவள் ஒரு பங்களாவைக் கட்டி வந்தாள். இவளது குழந்தைகள் சிறுவயதிலேயே நோய்வாய்பட்டு இறந்துவிட்டன. சோதனைமேல் சோதனை வந்ததால் ஒரு பாதிரியாரைச் சந்தித்தாள்.
அந்த பாதிரியார், “உனக்கு சாபக்கேடு இருக்கிறது. உன் கணவர் போர்க்கருவிகள் செய்து கொடுத்ததால் இரண்டாம் உலகபோரில் ஏராளமானவர்கள் கொல்லபட்டனர். அவர்களின் ஆத்மாக்கள் உன் குடும்பத்தை பழி வாங்குகின்றன. அதுதான் உன் குழந்தைகள் இறக்கக் காரணம். அந்த ஆத்மாக்கள்தான் உன் பங்களாவில் வசிக்கின்றன.  அந்த பங்களாவை ஆவிகளுக்கு வசதியாகக் கட்டு. கட்டுவதை இடையில் நிறுத்தினால் இறந்துபோவாய்” என்றார்.
இதை நம்பிய சாரா, தனது பங்களா முழுவதும் நுற்றுக்கணக்கான ஜன்னல்கள், நுற்றுக்கணக்கான கதவுகளும் வைத்துக் கட்டினாள். அப்போது நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவும் ஆத்மாக்களின் கோபம் என்று எண்ணிய அவள் மேலும் ஜன்னல், கதவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தாள். பங்களா கட்டி முடிக்கும் முன்பே சாரா இறந்துவிட்டாள்.
இன்றளவும் இது சுற்றுலா பயணிகளை திகைக்கவும், ஆச்சரியபடவும் வைக்கும் மாளிகையாகத் திகழ்கிறது. இந்த பங்களாவில் எத்தனை ஜன்னல்கள், கதவுகள் இருக்கின்றன என்று (சாதாரணமாக) எண்ணிச் சொல்வது முடியாத காரியமாகும்.

சாரா மாளிகை
மர்மக் கொலைகளின் தாய்வீடு
கிழக்கு லண்டனில் `வொயிட்சேபல்’ என்ற ஒரு கட்டிட வளாகம் இருக்கிறது. ஒரு வழிபாட்டுத் தலம்போல காணபடும் இந்த பகுதி, உலகில் அதிக குற்றம் நடைபெறும் ஒரு பகுதியாக இருக்கிறது. இங்கே 19-ம் நுற்றாண்டில் ஆயிரக்கணக்கான பெண்கள் மர்மமான முறையில் கற்பழிக்கபட்டு கொல்லபட்டு உள்ளனர். சிலர் கொடூரமான ஆயுதத்தால் உடல் வெட்டி பிளக்கபட்ட நிலையில் இறந்திருக்கிறார்கள். இப்பகுதியில் வினோத ஆத்மாக்கள், கொடூர ஆயுதங்களுடன் அலைவதாக நம்பபடுகிறது.
ஹிட்லரை பழிவாங்க…
போலந்து நாட்டில் ஜெர்மன் சர்வாதிகாரியான ஹிட்லரின் கைதிகள் சித்ரவதை முகாம் இருக்கிறது. `ஆஸ்விட்ச்-பிர்க்கெனா கான்சென்ட்ரேசன் கேம்’ என்ற இந்த முகாமில் லட்சக்கணக்கான யூதர்கள் கொடுமை செய்யபட்டு கொல்லபட்டனர். இங்கு இறந்தவர்களின் ஆத்மாக்களெல்லாம் பழி வாங்கும் எண்ணத்தில் திரிவதாக கூறுகிறார்கள். இதேபோல் சீனாவில் `மஞ்சூரியா’ என்ற இடத்தில் உள்ள மற்றொரு நாசி கைதிகள் முகாமிலும் 21/2 லட்சம் பேர் ஹிட்லரின் வெறிக் குணத்துக்கு பலியானார்கள்.
இங்கு நினைவுச் சின்னம்போல அடுக்கி வைக்கபட்டிருக்கும் மண்டை ஓடுகளை பார்த்தால் இன்றும் பார்பவர்கள் மனதுக்குள் கிலி ஏற்படுகிறது.

Comments

Popular posts from this blog

சங்க காலம் வரலாறு

தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு

தமிழ் மொழியின் தொன்மை