உருத்திராக்கம் பற்றிய அறிவியல் தகவல்




ஒருவரின் ஆளுமையை மாற்றவும், அவருக்கு நேரான நன்நோக்கு உண்டாக்கவும் வல்ல பலவேறு ஆற்றல் மிக்க பண்புகள் உத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின் ஆற்றல் மிக்க பண்புகள் உருத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின் ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த போதும், எண்பதுகளின் பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது. குறிப்பாக, இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே உருத்திராக்கம் புகழ்பெற்றது. இவர்கள் உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து உத்திராக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். இவர்கள் உருத்திராக்கத்தின் ஆற்றலை அறிவியல் நோக்கில் நிறுவியதுடன், தாம் கண்ட முடிவுகளை மீண்டும் செய்து காட்ட இவர்களுக்கு முடிந்தது.
உருத்திராக்கத்திற்கு, சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic) காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic) அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை (Inductive) ஆகியன உள்ளன என்பதை இவர்கள் நிலை நிறுவினர். மேற்கூறிய ஆற்றல்கள் உருத்திராக்கத்தின் முகப்புகள் அல்லது முகங்கள் மேற்பரப்பிலுள்ள பகுப்புகளின் எண்ணிக்கை பொறுத்து அமையும். ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய உருத்திராக்கத்தையோ அன்றேல் ஒரு தொகுதி முகங்கள் கொண்ட உருத்திராக்க மணிகளையோ அணிவோருக்கு, ஒரு குறிப்பிட்ட வகை மின் துடிப்புகள் (Transformation in the personality) வாழ்க்கையை நோக்கும் தன்மை, தன் ஆர்வம், மனத்திட்பம் ஆகியன மாற்றம் பெறுகின்றன. மேலும் இந்த ஆய்வாளர்கள், உருத்திராக்க மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும் நிறுவினர்.
உயர்ந்த மன அழுத்தம் கூர்ந்த மனக்குவிவு ஆகியவை ஒருவருக்கு ஏற்படும் போது, மூளைக்கும் மூளையிலிருந்து இரத்த ஓட்டம் பீறிட்டும் செல்வது நோக்கத் தக்கது. இந்த மணிகளின் துணையுடன் ஒருவகைச் சாந்தம் ஒரு முகக்குவிவு, கூர்ந்த குவிவு ஆகியவற்றை எளிதில் பெறமுடிகிறது. அத்துடன் உருத்திராக்கம் அணிவோருக்கு குறிப்பிடத்தக்க அளவு மனத்திடத்தையும், உள்ளார்ந்த பலத்தையும் அளிப்பதாகக் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாட்டிற்கான உருத்திராக்க மணிகளைவிட, ஒன்றிலிருந்து இருபத்தொரு முகங்கள் வரை உள்ள அதிக ஆற்றலுள்ள உருத்திராக்க மணிகளுமுண்டு. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும், நம்மைச் சுற்றியுள்ள ஆக்கபூர்வமான சக்திகளையும் ஒரு நிலைப்படுத்தி, செழிப்பு, ஆக்கம், உள்ளுணர்வுத் திறன், எதிர்கால நிகழ்வுகள் குறித்து ஆய்தல், பாலின ஒத்திசைவு போன்ற சிறப்புப் பண்புகளை அளிக்கின்றன. உறுதியாக, உருத்திராக்கங்கள் நாம் இன்னும் திறம்படச் செயலாற்றவும், இன்னும் வெற்றி காணும் வாழ்க்கையை வாழவும் உதவுகின்ற வியத்தகு மணிகளாகும்.
உருத்திராக்க மணிகள் அணிபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்துள்ளதையும் அவர்கள் கண்டனர். இவ்வாறு மன அழுத்த நிலை குறைவது, தொடர்ச்சியாகச் சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில் உட்கொள்வதால் மட்டுமே செய்ய முடிந்துள்ளது. உருத்திராக்க மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன.
இந்த ஆய்வாளர்களால் நரம்பு மாற்றிகள் (Neuro Transmiters) டொபமைன் (Dopamine), செறொரின் (Serotinin), போன்ற செயல்பாடுகளில் உருத்திராக்க மணிகளை அணிவதால் ஏற்படும் தாக்கங்களையும் நிலைநாட்ட முடிந்தது. இத்தகைய தாக்கங்களினால் ஒருவரது ஆளுமையிலும் மனப்பாங்கிலும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்கின்றன. உருத்திராக்கத்தை அணிவோர், தமக்கு ஏற்படும் ஏனைய நன்மைகளுடன், அவர்களுடைய மன அழுத்த நிலை எதிர்பாராத அளவு குறைந்திருப்பதையும் கண்டனர். இத்தகைய மன அழுத்த நிலைகுறைவு, இதுவரை சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில் தொடர்ந்து உட்கொள்வதால் பெறப்பட்டுள்ளது மட்டுமே உருத்திராக்க மணிகள், ஆக்கபூர்வமான அதிர்வலைகளை வெளிக்கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும், மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன. உருத்திராக்க மணிகள் ஒருவரை 'அல்பா மன நிலைக்கு' (Alpha state of mind) இட்டுச் செல்கின்றன.
யோகிகள் வியத்தகு வகையில், மனதைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்திருக்கின்றனர். அதாவது உடலில் தன்முனைப்புடன் கூடிய செயல்கள், தன்முனைப்பற்றுச் செய்யும் செயல்கள் இரண்டையும், குறிப்பாக உருத்திராக்க மணிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்தனர். இவர்கள், உடலின் பாதுகாப்பிற்கு எந்த விதத் துணிகளும் அணியாமலேயே இமாலய மலையின் கடுங்குளிரைத் தாங்கினார்கள். இவர்கள் தமது உடலிலுள்ள வெப்பத்தை வெளிக் கொணரும் போது அதைக் கட்டுப்படுத்தி அதன் வழி குளிரைத் தாங்கினார்கள். இது சாதாரணமாக செய்யத்தக்க செயல் அல்ல.
உருத்திராக்க மணிகளுக்குச் சில விளக்க முடியாத, ஆனால் வியக்கத்தக்க மின்காந்தப் பண்புகளும், ஊசி அடுத்த முறைப் பண்புகளும் [Acupressure] உண்டு என்பதைப் ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். கழுத்தைச் சுற்றி உருத்திராக்கத்தை அணிவதால், அது இரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுவதுடன் நமக்கு உகந்ததாகவும் ஆகிறது. நமது இதயத் துடிப்புகளை கட்டுப்படுத்துவதால் சாத்தியமாகிறது.
உடலில் அல்லது மனதில் அசாதாரண நிலையோ அன்றேல் ஏதாவது நோயோ இருந்தால் அவற்றைச் சுட்டிக் காட்டும் இரத்தச் சுற்றோட்டம் விளங்குகிறது. எடுத்தக்காட்டாக ஒருவர் உயர்ந்த மன அழுத்த நிலையையோ அன்றேல் உறுப்பு உறுப்புகளில் சீர்கேட்டையோ உணரும் நேரத்தில் அவருடைய இரத்தச் சுற்றோட்ட வீதம் அதிகமாகிறது.இதற்கு மாறாக இரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுத்துவதால் அவருடைய மன அழுத்த நிலை குறைகிறது. சோமடைசேசன் (Somatisation) அதாவது சீரற்ற சுவாசமும் இரத்தச் சுற்றோட்டமும் கட்டுப்படுத்தப்பட்டவுடன் அதற்கான காரணி அதன் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது. இந்த அடிபப்டை விதிமுறையைக் கொண்டே எல்லா சைகோ பார்மகோலொஜின் (Psycho pharmacological) மருந்துகளும் செயல்படுகின்றன். இரத்தச் சுற்றோட்டம் சாதாரண நிலைக்கு வந்ததும், ஒருவருக்கு மனத்தெளிவு ஏற்படுத்துவதுடன், உடல் மனம் ஆகிய இரண்டின் செயல்பாடுகளிலும் கூர்ந்த நோக்கு உண்டாகின்றது.
உருத்திராக்கம் நமக்கு, உடலில் இலேசாக இருக்கும் உணர்வையும் சாந்தத்தை அளிக்கிறது. அத்துடன் அது நமது ஒட்டு மொத்த நலத்தையும் திறனையும் மேம்படுத்துகிறது. உருத்திராக்க மணிகளை அணிவதால் மட்டும் ஏற்படும் வியத்தகு விளைவுகளைக் கண்ட பலர், இம்மணிகள் தெய்வீகமானவை இறைவனால் அனுப்பப்பட்டவை எனக் கருதி அவற்றை வணங்கினர்.
உண்மையான உருத்திராக்க மணிகளை அணிந்த ஆயிரக்கணக்கான் மக்கள், அவை தமக்கு இரத்த அழுத்தம், மனச்சோர்வு, மற்றும் நரம்புக் கோளாறு உட்பட்ட மனத்துடன் தொடர்பான தொல்லைகள் ஆகியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரனம் கிடைத்ததாக அறிகிறார்கள். அதை அணிவோருக்குத் தன்னம்பிக்கை, உள்ளார்ந்த பலம் (Inner Strength) இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் மேலோங்கச் செய்வதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

சாதாரண பயன்பாட்டிலுள்ள உருத்திராக்க மணிகளை விட, மிகச் சக்தி வாய்ந்த ஒன்று முதல் இருபத்தொரு உருத்திராக்க மணிகளும் உண்டு. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும், நம்மைச் சுற்றியுள்ள ஆக்கப்பூர்வமான சக்திகளையும் நேர்ப்படுத்தி, அவற்றைச் செழிப்பு (Prosperity) படைக்கும் ஆற்றல் (Creativity) உள்ளுணர்வுத் திறன் (Inductivity) எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை, தீமை பற்றி ஆய்ந்து நோக்கும் திறன், பாலின ஒத்திசைவு போன்றவை செயல்படவும், மேலும் வெற்றியுள்ள வாழ்க்கையை நாம் வாழவும் உதவுகின்றன.

Comments

Popular posts from this blog

சங்க காலம் வரலாறு

தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு

தமிழ் மொழியின் தொன்மை