பிளாஸ்டிக் அரிசியை தொடர்ந்து - பிளாஸ்டிக் சர்க்கரை கண்டுபிடிப்பு

பிளாஸ்டிக் அரிசியை தொடர்ந்து - பிளாஸ்டிக் சர்க்கரை கண்டுபிடிப்பு: பொதுமக்கள் பீதி..! 


சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் வெளியாகியது. சீனாவில் தான் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுகிறது எனவும் செய்திகள் பரவியது. உத்தரகாண்ட் மாநிலம் ஹால்ட்வானி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் அரசி விற்பனைக்கு வந்து உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி போன்றவற்றை தொடர்ந்து பெங்களூர் சந்தைகளில் பிளாஸ்டிக் சர்க்கரை புழகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காக்டாக் மற்றும் தும்கூரில் பிளாஸ்டிக் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
  
கர்நாடகாவின் ஹசன் பகுதியில் ஒரு பொது கடை உரிமையாளர் மீது பெங்களூரை சேர்ந்த சிவக்குமார் என்பவர் புகார் செய்தார். விரைந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சர்க்கரைகளை மாதிரி சோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து கர்நாடக உணவு மற்றும் சிவில் விவகாரங்கள் அமைச்சர் யு.டி.காதர் கூறியிருப்பதாவது - இது ஒரு பெரும் மோசடி போல் தோன்றுகிறது. விற்பனையாளர்களிடம் இருந்தும், வணிகர்களிடம் இருந்து பிளாஸ்டிக் சர்க்கரை கலந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

சங்க காலம் வரலாறு

தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு

தமிழ் மொழியின் தொன்மை