அமேசான் காட்டில் கண்டு பிடிக்கபட்ட இந்திய பழங்குடிகள்

ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிறைந்த அமேசான் காடுகள்
அமேசான் காட்டில் கண்டு பிடிக்கபட்ட இந்திய பழங்குடிகள்



இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் பின்னிப் பிணைந்த அமேசான் காட்டில், சூரிய வெளிச்சமே பார்க்காத தரை. வருடமெல்லாம் கொட்டும் மழை. இதனை ‘மழைக் காடுகள்’ என்றும் அழைப்பர்.
இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத இந்திய வம்சாவழியை சேர்ந்த பழங்குடியினரும் அங்கு உள்ளனர்.
உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில் தான் வசிக்கின்றன. எண்ணற்ற செடி-கொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசானில் உள்ளன. அமேசானில் 3000 வகை பழங்கள் கிடைக்கின்றன. இதில்  200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வருகிறது ஆனால் அங்கே வாழும் மக்கள் இந்த அரிய பழ வகைகள் அனைத்தையும் உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர். இன்றளவும் இயற்கைக்கு மிக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். விலங்குகளை வேட்டையாடி பச்சையாகவே உண்டு வருகின்றனர். இவர்களுக்கு சமைப்பது என்றால் என்ன? என்றே தெரியாது. இவர்கள் இந்திய வம்சா வழியை சேர்ந்த மூதாதைய  குடிமக்கள் என்று தெரிய வருகிறது.
காட்டில் கொடிய நோய்கள் பரவினாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ள இந்த மக்கள், நம்மைப் போன்ற நாகரீகமான மனிதர்களால் இவர்களுக்குப் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசியமான தகவல். ஜலதோஷம் ஏற்பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மை.ஆய்வாளர்கள் சிலர் இங்குள்ள சில பழங்குடியின மக்களைப் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யத் தீர்மானித்தனர். ஆனால் வாகனங்களின் மூலம் இவர்களை நெருங்கிச் செல்வது ஆபத்தானது என்பதால் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று படம் எடுக்க முனைந்தனர். அவர்களின் இருப்பிடங்களுக்கு மேலே தாழ்வாகப் பறந்து இவர்கள் படமெடுத்தபோது, ஏதோ பயங்கரமான பறவைத் தங்களைத் தாக்க வருவதாக அவர்கள் நினைத்துவிட்டனர்.
உலகின் மிகப் பெரிய பாம்பினமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக்கரைகளில் வெகு சாதாரணமாய் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவை நீரிலேயே வாழ்கின்றன. இதன் மூக்குப் பகுதியை மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.
அமேசான் நதியில் டால்பின் வகைகள் உட்பட சுமார் 3 ஆயிரம் மீன் வகைகள் உள்ளன. இந்தப் பகுதியில் காணப்படும் “ஈல்” வகை மீனைப் பற்றி இங்கே கூறியே ஆக வேண்டும். காரணம் இது ஏராளமான மின்சாரத்தைப் பாய்ச்சும் திறனுடையது. இது பாய்ச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனைக் கொன்றுவிட முடியும்.தம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக்கின்ற “பிரானா மீன்கள்” (றிவீக்ஷீணீஸீலீணீ) ஏராளமாக உள்ளன. அதேபோல், ரத்தக் காட்டேரி வகை வௌவால்கள் இங்கு ஏராளம். “ராபீஸ்” என்னும் கொடிய நோயைப் பரப்பும் வல்லமை இதற்குண்டு. அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970–ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இது “வாலியா ஹம்சா” என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது. அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது. சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, ‘ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறது.
நாற்பது வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டு 2011-ஆம் ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்தார். எனினும் எதிர்காலத்தில் தான் ஆய்வு பூர்த்தியாகும் என சொல்லப்படுகிறது.இன்றும், அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன என்றே கூற வேண்டும்.
பெரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அடர்ந்த அமேசான் காடுகளில் இந்திய பழங்குடியினர் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசான், ஆப்ரிக்கா மற்றும் பெரு நாட்டு பழங்குடி மக்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் அமைப்பு ஒன்று கடந்த ஓராண்டாக தீவிர முயற்சிக்கு பின் இந்த இந்திய பழங்குடியினரை அமேசான் காட்டுக்குள் கண்டுபிடித்துள்ளனர். மேலாடை அணியும் வழக்கமில்லாதவர்களாக, எந்த மொழியையும் அறிந்திராதவர்களாக, தங்களுக்கென்று பெயர்கள் கூட இல்லாதவர்களாக அவர்கள் உள்ளனர். உணவுக்காக வேட்டையாடுவதும், மூங்கில் மற்றும் பனையோலை வேய்ந்த குடில்களில் வசிப்பதும் இவர்களது வாழ்க்கை முறை. உணவை தேடி நாடோடிகளாக வாழ்கிறார்கள். இவர்களை பாதுகாக்க அந்நாடு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது
பிரேசில் அரசு கொஞ்ச காலத்திற்கு முன்பு ஒரு தகவலை வெளியிட்டது, அது எல்லோருக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை உண்டாக்கியது. இருக்காத பின்னே! வெளி உலகத்தின் தொடர்பே முற்றிலும் அற்று,  ஒரு கூட்டம் தனியே அமேசான் காடு பகுதியில், பேரு நாட்டின் எல்லை ஓரத்தில் வசித்து வருவதை கண்டறிந்து அதிகார பூர்வமாய் செய்தி வெளியிட்டு உள்ளனர்.
இவர்கள் தங்கள் குடிலை தாங்களே அமைத்துக்கொண்டு வாழும் அளவுக்கு மட்டும் நாகரீகம் அடைந்துள்ளனர். விமானத்தை பார்த்து ஏதோ தங்களை தாக்க வருவதாக எண்ணிக்கொண்டு வில்-அம்பை கொண்டு எரிவதை படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

சங்க காலம் வரலாறு

தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு

தமிழ் மொழியின் தொன்மை