காலடி எடுத்து வைக்கவே மக்கள் அஞ்சும் மர்ம தீவு



காலடி எடுத்து வைக்கவே மக்கள் அஞ்சும் மர்ம தீவு காணம் என்ன? இந்த க்ரூய்நார்ட் தீவு எந்த வகை? எதனால் மக்கள் கடந்த 75 வருடங்களாக அங்கு செல்லாமல் இருக்கிறார்களா? போன்ற வினாவிற்கு விடை தெரிந்துக்கொள்ள தொடர்ந்தும் படியுங்கள்.
க்ரூய்நார்ட் தீவுக்கு செல்ல மக்கள் யாருக்கும் தைரியம் இல்லை என்பது தான் உண்மை. ஓவல் வடிவத்தில் அமைந்திருக்கும் ஸ்காட்டிஷ் தீவு.
வடக்கு ஸ்காட்லாந்தில் இருந்து 0.6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
இரண்டாம் உலக போரின் போது இந்த இடம் பிரிட்டிஷ் இராணுவ ஆராய்ச்சியாளர்கள் இரசாயன ஆயுதங்கள் பரிசோதனை செய்த வந்த இடமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இங்கு பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் ஆந்த்ராக்ஸ்-ஐ ஆயுதமாக பயன்படுத்தி எதிரிகள் மீது தாக்குதல் நடத்த பரிசோதனை செய்ததாகவும் சில செய்திகள் கூறுகின்றன.
1942இல் 'Vollum 14578' என்ற வீரியம் மிக்க ஆந்த்ராக்ஸ்-ஐ பரிசோதனை செய்தனர். இந்த குண்டில் அபாயமான பாக்டீரியாக்கள் நிறைந்திருந்தது. இதன் காரணத்தால் க்ரூய்நார்ட் தீவு இரசாயன போர் பரிசோதனை இடமாக மாறியது.
ஆடுகளை இங்கு கொண்டுவந்து அவர்கள் பல பரிசோதனைகள் செய்து வைத்துள்ளனர்.
இதை 16 MM காணொளிப்பதிவாக எடுத்து வைத்துள்ளனர். இவர்களது பரிசோதனைகளால் அந்த தீவே பாழாய்ப் போனது.
ஆந்த்ராக்ஸ்-ன் தாக்கம் இந்த தீவில் அதிகரித்து போகவே. இங்கு வாழ முடியாது என கூறி இதை கைவிடப்பட்ட தீவாக அறிவித்தனர்.
1945ல் உலக போர் முடிவடைந்தது. இதன் உரிமையாளர் இந்த தீவை மீண்டும் வாங்க முயற்சித்தார்.
ஆனால், அரசு அதை நிராகரித்து உத்தரவிட்டது. மீண்டும் பாதுகாப்பான பிறகு உத்தரவிடப்படும் என மட்டும் அரசு கூறியது.
பல ஆய்வுகள் மற்றும் சுத்தப்படுத்தல் முயற்சிக்கு பிறகு 1990இல் க்ரூய்நார்ட் தீவு மக்கள் வாழ தகுதியான இடம் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், டாக்டர் பிரைன் என்பவர் க்ரூய்நார்ட் தீவில் முழுவதுமாக ஆந்த்ராக்ஸ் நீக்கப்படவில்லை. அங்கு வாழ்வது அபாயமானது என கருத்து தெரிவித்தார்.
பரிசோதனைகள் முடிந்து ஏறத்தாழ 75 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், இன்றும் க்ரூய்நார்ட் தீவு ஒரு அச்சுறுத்தலான இடமாகவே திகழ்ந்து வருகிறது

Comments

Popular posts from this blog

சங்க காலம் வரலாறு

தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு

தமிழ் மொழியின் தொன்மை