உலகிலேயே மிகத் தொன்மையான மதம் இந்து மதம்.






இந்தியாவின் ரிக் வேதம் தான் மனித இனத்தின் மிகப்பழமையான இலக்கியம் என்று அகில உலக நிறுவனமான யுனெஸ்கோ தானும் ஒத்துக்கொண்டு உலகமெங்கும் பிரகடனப்படுத்தியும் இருக்கிறது.

கஜினி முகம்மது 17 முறை கொள்ளையடித்துக்கூட வற்றாத செல்வம் சோம்நாத்பூர் என்ற ஒரு ஊரில்மட்டும் இருந்திருக்கிறது.உலக நாடுகள் செம்பு,வெள்ளி,தோல் ஆகியவற்றை நாணயங்களாகப் பயன்படுத்திய காலத்தில் கூட இந்தியா அசல் தங்கத்தையே நாணயமாகப் பயன்படுத்தியிருக்கிறது. பாரத தேசத்து மன்னர்கள் தம் உடம்பில் அணிந்திருந்த தங்க ஆபரணங்களின் அளவு இன்று எந்த உலக கோடீஸ்வரனும் அணிவதில்லை.

தெய்வங்களின் திருமேனிகளிலும்,கோயில்களின் அஸ்திவாரங்களிலும்,நவரத்தினங்களும் தங்கமும் கொட்டிக்கிடந்தன. இந்திய மண்ணுக்கும் இந்து கலாச்சாரத்துக்கும் ஒவ்வாத மேலைநாட்டு மதங்களுக்கும் தெய்வங்களுக்கும் நாம் கொடுத்த இடம் தான்.நம் வைதீகத்தின் ஆணி வேரை அசைத்துப்பார்த்து,பாரதத்தின் ஆன்மீகத்தை பலவீனப்படுத்தி அதன் செழிப்பையும் குறைத்தது.அந்நியப் படையெடுப்பினால் அடுத்த நாட்டு மதங்கள் இங்கே உள்ளே நுழைந்ததை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் அந்நிய ஆதிக்கம் நீங்கிய பிறகும் அந்த மதங்களுக்கு நாம் இங்கே இடம் கொடுக்க வேண்டுமா?

அப்படி அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு இந்து மதத்தை விடச் சிறந்த கோட்பாடுகள் அவற்றில் ஏதாவது இருக்கின்றனவா? கீழ்க்கண்ட புள்ளி விவரங்களில் ஓர் ஒப்பு நோக்கல் செய்தால் அது உங்களுக்கே புரியும். உலகில் இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இறைவனைப் பற்றியோ ஆத்மாவைப் பற்றியோ தெளிவான விவரங்கள் இல்லை.ஆனால் நம் நாட்டு உபநிஷதங்களில் இறைவனுடைய வடிவம்,குணம்,மஹிமை முதலியவற்றைப்பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.அந்த முடிவுகள் சரியானவை என்று காலங்காலமாக யோகத்யானத்தில் அமர்ந்துள்ள முனிவர்களும் சித்தர்களும் வழி மொழிந்திருக்கிறார்கள்.

மனிதனுடைய ஆத்மா உடலில் எங்கே இருக்கிறது என்று கேட்டால் பிறர் தெரியாது என்பர்.ஆனால் இதயக்கமலத்தில் உள்ள ஜீவாத்மாவைப்பற்றியும்,மூலாதாரத்தில் உள்ள குண்டலினிப்பற்றியும் அதன் சக்தியை ஆறு ஆதாரங்கள் வழியாக எழுப்பும் வழியைப்பற்றியும் கூறும் நூல்கள் நம்நாட்டில் நூற்றுக்கணக்காக இருக்கின்றன. கஷ்ப்படுகிறவர்கள் தங்கள் முன்னோர்கள் செய்த பாவத்துக்காக தண்டனை அனுபவிக்கிறார்கள் என்று அந்த மதங்கள் கூறுகின்றன. தாத்தா செய்த கொலைக்காக பேரனை எந்த அரசாங்கமாவது சிறையிலிடுமா?தகப்பன் செய்த திருட்டுக்காக மகன் கையை வெட்டும்படி எந்த சட்டமாவது சொல்லுமா?இந்து மதத்தின் மறுபிறப்புக் கொள்கை இந்த கேள்விகளுக்கு அழகாக பதில் சொல்லுகிறது.


நம்முடைய உலக வாழ்வு ஒரு நீண்ட பயணத்தின் ஒரு பகுதி தான் என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.முன்வினை பின்வினை முதலிய விளக்கங்கள் இந்து மதத்தில் இருப்பது போல் அறிவு பூர்வமாக வேறெங்கும் இல்லை. கலாச்சார ரீதியாக இந்து மதம் உயர்ந்த கோட்பாடுகளைச் சொல்லுகிறது.ஒரு தமையனை தகப்பனுக்குச் சமமாகவும்,தமயனின் மனைவியை தாய்க்குச் சமமாகவும் கூறி குடும்பத்தை கோயிலாக்கியது இந்து மதம்.

Comments

Popular posts from this blog

சங்க காலம் வரலாறு

தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு

தமிழ் மொழியின் தொன்மை