சித்தர்கள் மூலிகை காயகற்பம்



                சித்தர்கள் மூலிகை காயகற்பம் 

சித்தர்கள் காயகற்பங்களை உண்டு தங்களின் உடலுக்கு நோய்கள் வராமலும், தங்களின் உடலை வலுவூட்டவும் செய்தனர். தனி மூலிகைகளைக் கொண்டே காயகற்பம் செய்தனர். அவ்வாறு சித்தர்கள் எடுத்துக்கொண்ட சித்தர்களின் மூலிகை காயகற்பங்கலாவன,

அகத்தியர் 100 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

கோரக்கர் கஞ்சா மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், கஞ்சா மூலிகை உட்பட 90 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

நந்தீசர் 100 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

ரோமரிசி 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

குகைகன்னார் 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

மச்சமுனி வல்லாரை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், வல்லாரை மூலிகை உட்பட 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

ராமதேவர் 71 மூலிகை காயகற்பங்களை உண்டவர், முக்கிய மூலிகையாக கருநீலி கற்பம் உண்டார்.

திருமூலர் 66 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

போகர் கொல்லங்கோவை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், கொல்லங்கோவை மூலிகை உட்பட 44 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

சட்டமுனி 21 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

கொங்கணர் பொற்றிலைக்கையான் மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர், பொற்றிலைக்கையான் மூலிகை உட்பட 16 மூலிகை காயகற்பங்களை உண்டவர்.

காளங்கிநாதர் சிவகரந்தை மூலிகையை கற்பம் செய்து உண்டவர்.

சிவயோகி கரிசாலை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர்.

கஞ்சமலை கருநீலி மூலிகையை கற்பம் செய்து உண்டவர்.

பதஞ்சலி செருப்படை மூலிகையை முக்கிய காயகற்பமாக உண்டவர்.

பத்தர் செங்கற்றாழையை கற்பம் செய்து உண்டவர்.

Comments

Popular posts from this blog

சங்க காலம் வரலாறு

தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு

சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை