நாவலன் தீவு வரலாறு
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன்,என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5நிமிடங்களை ஒதுக்குங்கள்,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,
ஆம் இது தான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட" குமரிக்கண்டம்".
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும்,தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும்,நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம்,கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டு களுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்
கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்" குமரிக்கண்டம்". ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது!! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது.!! குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!.
அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ்,தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும்,தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும்,தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன
குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்
1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும். தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன், சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது. இதில் அனைத்துமே அழிந்து விட்டது.
இரண்டாம் தமிழ்ச் சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700 இல் 3700 புலவர்கள்களுடன்" அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது. இதில் "தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய" மதுரையில் "கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்" அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.
இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்.!!!!..
இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம்,
இனிமேல் நாம் 2000வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம், நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.
Super!! fantastic!! it really helped me to know about that majestic land kumarikandam.thank you so much.
ReplyDeleteஇது வரலாறாய் இருக்கும் பட்சத்தில் ஏன் நம் பாட புத்தகங்களில் இல்லை.
ReplyDeleteஇந்த பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர் உண்டா
தொல்பொருள் ஆய்வுக்கழகம் போல் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் எடுத்துக்கொண்ட முயற்சியால்தானே இத்தரவுகள் நமக்குக்கிடைக்கப்பெற்றுள்ளோம்....
ReplyDeleteதமிழக அரசின் சார்பாக இதற்கென ஒரு துறையை அமைத்து திறமையான ..
கடல்சார்ந்த. அறிவாற்றல் பெற்றோரைக்கொண்டு ...மேலும்...மேலும்...இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டால்...இன்னும் பல்வேறு தகவல்கள் கிடைக்கக்கூடுமே...