தமிழ் மன்னன் இராவணனின் வரலாறு 2



மகா சோழ சாம்ராஜ்யம் பர்மாவில் (மியன்மார் )
கிபி 1024 இல் இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனின் பேரன் சொக்கடே பெரும்படையுடன் (கப்பற்படை) தென் பர்மாவை (மியன்மாரை) வந்தடைந்தான்
இன்றைய இரங்கூன் நகரை அழித்தொழித்து தென்பர்மாவைக் கைப்பற்றினான்.
அவனுக்குப்பின்னர் அவனது இளைய சகோதரன் அனுருத்த அல்லது அனவர்த்த எனப்படுபவனால் 1079 வரை பர்மா ஆளுகைக்கு உட்படதாகப் பதிவுகள் காணப்படுகின்றன .
ஆக அந்தக்கலப்பகுதிகளில் பர்மாவில் சைவ பௌத்த ஆலயங்கள் நிறுவப்பட்டன.
அதன்பின்னரும் தமிழர்கள் அல்லாத மன்னர்களாலும் பௌத்த ஆலயங்கள் நிறுவப்பட்டன.

1870 களில் ஆங்கிலேயர்களால் தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் புகையிரதப் பாதைகள் , சுரங்கங்கள் அமைத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் என்று சொல்லப்பட்டாலும் , உண்மையில் திட்டமிட்டு பஞ்சம் ஏற்படுத்தப்பட்டு , முகவர்குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களைப்பயன்படுத்தி ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.
அடிமைகள்போல் நடத்தப்பட்டு கடுமையான வேலை வாங்கப்பட்டு , ஒருவேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு இலட்சக்கணக்கில் தமிழர்கள் மரணிக்க நேர்ந்தது.
எஞ்சியோர் பர்மாவில் குடியேறினார்கள்.
மேலும் சில தமிழர்கள் வியாபாரம் செய்யவெனவும் , வேலை செய்யவெனவும் பர்மாவில் வந்து குடியேறினார்கள்.
ஆங்கிலேயர்களின் ஆட்சியில் பர்மா இருந்தவரை தமிழர்களின் நிலை அபரீதமாக உயர்வடைந்து வந்தது. பர்மாவின் பொருளாதாரம் தமிழர்களின் கையில் வந்தது.
இந்த நிலை 1942 இல் ஜப்பான் உள்நுழையும் வரை நீடித்தது.
1942 இல் பிரித்தானியா பர்மாவை விட்டு பின்வாங்கியது

ஜப்பான் படைகளின் பின்புலத்துடன் பர்மியர்களால் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஒருநாளைக்கு 500-800 தமிழர்கள் கொல்லப்பட்டதாகப் பதிவுகள் காணப்படுகின்றன. தமிழர்கள் அகதிகள் ஆகினர் . இந்தியாவுக்கு சுமார் மூன்று இலட்சம் அகதிகள் தப்பி வந்தார்கள். சுமார் மூன்று நான்குமாத நடைப்பயணத்தில் காட்டு வழிகளில், மலைகளில் , ஆறுகளில் இறந்து போனவர்கள் இதைவிட அதிகம்.

மீண்டும் ஒருசில ஆண்டுகளில் பர்மிய இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. நாட்டு மக்களின் சொத்துக்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கியது. இதனால் உண்மையிலேயே இழந்தவர்கள் தமிழர்கள் . அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் ஒரே இரவில் நாட்டுடமை ஆனது.


இன்று தமிழர்கள் சாதாரண விவசாயிகள் அல்லது கூலித் தொழிளார்கள்.
சுமார் பத்து இலட்சம் ஏழைத் தமிழர்கள் பர்மாவில் வாழ்கிறார்கள். இவர்கள் கோயில்களில் தமிழ் வகுப்புக்களை நடத்தி தமிழ் வளர்க்க பாடுபடுகிறார்கள்.
1870 தொடக்கம் கட்டப்பட்ட கோயில்கள் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன.
வறுமை நிலையிலும் தமிழ் வளர்க்கப் படாதபாடு படுகிறார்கள் . அதுவே இவர்களின் சிறப்பு!

இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா என்று கூறப்படுகிறது.இராவணனின் மறைவுக்குப் பின்னர் விபிஷணன் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்டதாகவும் , அவன் தனது ஆட்சிமையத்தை களனிக்கு மாற்றியதாகவும் , களனியில் அமைந்துள்ள ஒரு பௌத்த விகாரையில் விபிசனனுக்கு சிலையொன்று வைக்கப்பட்டுள்ளதாகவும் நண்பர் யாழறிவன் அவர்களின் கட்டுரையில் படித்தேன் .

இராவணன் கோட்டை , இராவணன் குன்று , சிகிரியா குன்று என்று பலபெயர்களில் அழைக்கப்படும் 660 அடிகள் உயரமான இந்தக்குன்று இராவணின் கோட்டையாக இருந்ததாகவும் , இந்தக்குன்றின் மேற் தளத்தில்தான் இராவணனின் புஸ்பகவிமானம் தரையிறக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.இப்பாறையின் மேற்பரப்பில் நீர்த் தடாகம் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் குகையின் அல்லது கோட்டையின் உட்புறத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்த ஓவியங்களிலுள்ள பெண்கள் மேகத்தில் மிதப்பதுபோல வரையப்பட்டிருப்பதால், இவர்கள் தேவதைகளாகவோ ,அல்லது இறைவனின் பெண்களாகவோ இருக்கலாமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

உலகின் ஈர்ப்பு மையம் முழுவதும் ஒன்று குவியும் ஒரு அற்புதமான மைய இடத்தில் இந்தக் கோட்டை அமைக்கப்பட்டிருப்பதாகவும் , இதன்மூலம் இங்கு வாழ்ந்தவர்கள் இறை சக்தியோடு தொடர்பு கொள்ளத்தக்க வகையில் இந்தக்கோட்டையை திட்டமிட்டு அமைத்திருக்க வேண்டுமென்றும் மேலை நாட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆக மொத்தத்தில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட அல்லது இறைவனின் உதவியோடுதான் இவ்வாறான கோட்டை அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கருதுகிறார்கள் .

5 ஆம் நூறாண்டில் தமிழ் மன்னனாகிய காசியப்பனால் மேலும் மெருகூட்டப்பட்டு பாதுக்காகப்பட்டது சிகிரிய குகை குன்று . அந்த குகைகளினுள் வரையப்பட்ட ஓவியங்கள் அந்த பகுதிகளில் வாழ்ந்த ஆதி தமிழ் குடிகளின் கலாச்சாரத்தை, பண்பாட்டை பிரதி பலிக்கின்றது. அந்த பகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடி தமிழர்களால் வரையப்பட்டவை.



இந்த ஓவியங்களையும், அந்த பகுதியை ஆண்ட மன்னன் வரலாறுகளையும் அழித்து மறைத்தது சிங்களம். ஏன் எனில் இந்த பகுதிகள் தமிழருக்கு சொந்தமான பகுதிகள் என்னும் உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே.
தமிழ் மன்னன் காசியப்பன் என்னும் பெயரை, காசியப்ப என்று திரித்து , ஒரு புளுகு கதையையும் எழுதி வைத்தது சிங்களம்.
சிகிரிய ஓவியங்களில் இருத்த அனைத்து தமிழர் மரபுக்கு உரிய " நெற்றிப் பொட்டுகளை ", சுரண்டி அழித்தது

இந்தக்கோட்டையை பிற்காலத்தில் கிபி 477-495 வரை காசியப்பன் என்ற அரசன் பாதுகாப்பாக ஒளிந்து கொள்வதற்க்காகப் பாவித்தான்.எனினும் எதிரிகள் கண்டுகொண்டதால் தனது தலையை தானே வெட்டிக்கொண்டு தற்க்கொலை செய்துகொண்டதாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது

அதனால் இக்கோட்டை அவனால் அமைக்கப்பட்டதாக சில இடங்களில் பதியப்பட்டிருக்கின்றது.இந்தக்கோட்டையைப் பற்றி நிறைய எழுதலாம்
இன்று தங்கத்தால் உடல் முழுவதும் பூசி அடக்கம் செய்த இலங்கை ராவணனின் அதிசயக் கல்லறை கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாம் இதனால் பல தகவல்கள் புராதன அடையாளங்கள் கிடைத்துள்ளதாம்.

இராவணன் சீதையைக் கடத்தினாலும் ஒழுக்கம் உடையவன் எனும் கருத்து இன்று வரை உள்ளது குறிப்பிடத் தக்கது.

இப்படியான நிலையில் பலதரப்பட்ட கருத்துக்கள் விமர்சனங்கள் இராவணன் மீது இருந்தாலும் நாட்டில் நல்லாட்சி இடம் பெற்றதாக கூறப்படுகிறது…..

பரராசசேகரன் உலா
வையாபாடல் - 15ஆம் நூற்றாண்டு - வையாபுரி
கைலாயமாலை - 16ஆம் நூற்றாண்டு - முத்துராசக்கவிராசர்
வைபவமாலை - 18ஆம் நூற்றாண்டு -
மாதகல் மயில்வாகனப்புலவர்
பிரித்தானியர் கால நூல்கள்
History of Jaffna - 1884 - S.Kasishetty
Jaffna Today and Yesterday - 1907 - Duraiyappa Pillai
History of Jaffna - 1912 - Muththuthampy Pillai
யாழ்ப்பாண வைபவ கௌமுதி - 1918 - வேலுப்பிள்ளை
Ancient Jaffna - 1926 - Rajanagam
Critiques of Jaffna - 1928 - Njanappiragasar
Tha Jaffna Kingdom
The Ancient People of Sri Lanka are Tamils
யாழ்ப்பாண பூர்வீக வைபவம்
யாழ்ப்பாண குடியேற்றம்
புதிய நூல்கள்
இலங்கைவாழ் தமிழரின் வரலாறு - கே.கணபதிப்பிள்ளை
Tamils and Ceylon - நவரட்ணம்
Kingdom of Jaffna - 1978 - Pathmanathan
Early Settlements in Jaffna - Ragupathy
யாழ்ப்பாண இராட்சியம் - சிற்றம்பலம்
பூனகரி தொல்பொருள் - புஸ்பரத்தினம்
இவ்வளவு நூல்களையும் ஆராய்ந்து யாழறிவன் அவர்கள் இராவணனின் பூர்வீகம் பற்றிய கட்டுரையை எழுதியிருந்தார் . நான் அதைப்படித்து அதற்கு மேலும் தேடிப்படித்து எழுதியுள்ளேன் . சும்மா யாரோ சொன்னார்கள் என்பதற்க்காக எழுதவில்லை. இராவணன் பற்றிய எனது பதிவுகளை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படிப்பவர்களுக்கு இது நிச்சயம் புரியும். நடுவிலிருந்து தொடங்கியவர்களுக்கு புரியாமலிருக்கலாம் .
அவரவர் கருத்துக்களைத் தெரிவிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஒரு விசயத்தை நான் முன்வைக்கும்போது இயன்ற அளவுக்கு அதற்கான ஆதாரங்களை முன்வைக்க முயற்சி செய்கிறேன் . அதேபோல மறுப்பவர்கள் அததற்கான ஆதாரங்களை முன்வைத்தால் திருத்திக்கொள்ள இலகுவாக இருக்கும் . யாரோ சொன்னார்கள் என்பதுபோல சொல்லி ஒரு விஷயத்தை மறுத்து எழுதுவது ,கஷ்டப்பட்டு எழுதும் எங்கள் போன்றோரைக் காயப்படுத்துகிறது.மன்னன் இராவணனிடம் புட்பக விமானம் இருந்ததா ?
ஆம் என்றோ இல்லை என்றோ அவசரப்பட்டு முடிவெடுக்காமல் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாமென்று நினைக்கின்றேன் .
இராவணனிடம் புட்பக விமானம் இருந்ததாகக் கூறுபவர்கள் யார் ?
அவனது ஆதரவாளர்களா ? என்று பார்த்தால் இல்லை அவனது எதிரிகளே
அப்படிக்கூறு கிரார்கள்.
உண்மையில் கதாநாயகனிடம்தானே விமானம் இருந்திருக்க வேண்டும் ? ஆனால் இங்கு வில்லனாக சித்தரிக்கப்படும் இராவணனிடம் விமானம் இருந்ததாக அவனது எதிரிகளே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்களே ?
எங்கேயோ இடிக்கிறது அல்லவா ?
சரி பதிவுகளைத் தேடிப்பார்த்தால் கிடைத்தவை ....
"இராவணன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் என்பதோடு அவனது காலத்தில் "ஈழம்" மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது.
சிங்களத்தில் பதிவு செய்யப்ட்டுள்ள கட்டுரைகள் மற்றும் ஆவணங்கள் குறித்து சில நண்பர்களுடன் உரையாடிய அடிப்படையில் நான் அறிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இன்று இருக்கும் "சிகிரியா" இராவணனின் காலத்தில் ராவணனின் "புஷ்பக விமானம்" இறங்கும் தளமாக பாவிக்கப்ட்ட இடமாக இருக்கலாம் என்று சில சிங்கள ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள் என்று நண்பர்கள் மூலம் அறிந்திருக்கிறேன்.
இராவணன் பாவித்த புஷ்பக விமானத்தின் சில எச்சங்களும் இராவணன் காலத்து சில எச்சங்களும் சிகிரியா குன்றின் நடுவில் இருக்கிறது என்று நம்பப்படும் சுரங்கத்திற்குள் இருந்ததாகவும் மேற்கத்தேய ஆட்சியாளர்களின் காலத்தில்தான் அவை திருடப்பட்டிருக்கலாம் எனவும் அந்த சிங்கள ஆய்வாளர்கள் நம்புவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
சிகிரியா குன்றின் உச்சியில் இருந்து தரைக்கு குன்றின் நடுவில் சுரங்கம் இருக்கிறது என்று நம்புகிறார்கள். விமானம் வைத்திருந்த ராவணனால் சுரங்கம் அமைத்திருக்கமுடியும் என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான்.
தவிர எகிப்தில் இருக்க கூடிய பிரமிட்டுக்களின் கட்டுமானத்திற்கும் "பபிலோனா பூந்தோட்டம்" அமைப்பதற்கான கட்டுமானத்திற்கும் இராவணனின் காலத்தில் விமானம் மூலமாக ஆட்கள் அனுப்பபட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
இது எகிப்து பிரமிட்டுகளில் காணப்படுவதாகவும் இதில் "லங்காபுர" என்று எழுதியிப்பதாகவும் சொல்கிறார்கள். ஆக எகிப்து பிரமிட்டு கட்டுமானங்களில் "ஈழத்தில்" இருந்து ஆட்கள் கொண்டு செல்லப்பட்டது அதுவும் விமானம் மூலம் கொண்டு செல்லபட்டார்கள் என்பது ஆய்வு.இதை ஒத்த விமானம் பிரித்தானியாவில் லண்டன் கொலண்டல் பகுதியில் உள்ள பழைய விமான காட்ச்சியகத்தில் காண முடியும்.Royal Air Force Museum London


முழு ஈழத்தையும் இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை பாதிப்புகள் இருக்கின்றன. இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடையங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன
இலக்கியங்களுடன் தொடர்புபடுத்தி இராவண் பற்றி சில தமிழ் ஆய்வுகள் இருப்பதனால் இன்று பல ஆதாரங்கள் தொலைக்கப்பட்டுள்ள நிலையில் நான் புதிதாக ஒன்றையும் எழுத முற்படவில்லை.
இருப்பதில் இருந்து ஆராய்வது அல்லது இருப்பதை வைத்துக் கொண்டு எமது அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கடத்துவது மிக முக்கியமானது என்று கருதுகிறேன்.
மேலும் தேடியபோது சில ஆச்ரயமான தகவல்கள் கிடைத்தன . அத்தகவல்களின்படி இராவணன் வாழ்ந்த அதே காலப்பகுதியில் தென் அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டத்தினர் விமானங்களைப் பயன்படுத்தியதற்க்கான அல்லது கண்டு அறிந்து வைதிருந்தமைக்கான சான்றுகளாக அவர்கள் வரைந்து வைத்திருந்த ஓவியங்கள் , உருவாக்கியிருந்த சிலைகள் , கல்வெட்டுக்கள் , விமான மாதிரிகள் , விண்வெளி ஓடங்களின் ஓவியங்கள் , கல்வெட்டுக்கள் , விமான ஓடுபாதைகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவர்களே விமானத்தைப் பாவித்திருந்தால் இராவணனும் விமானத்தைப் பாவித்திருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா ?
அடுத்தடுத்தப் பதிவுகளில் தென் அமெரிக்க மக்கள் கூட்டத்தினர் பயன்படுத்தியிருந்த விமானங்கள் பற்றிய தடயங்கள் குறித்து மேலும் விரிவாக ஆராய்வோம்."மாவீரன் இராவணனிடம் புட்பக விமானம் இருந்ததா ?" 
என்று ஆராய்ந்துகொண்டு இருக்கின்றோம் .
கிட்டத் தட்ட இராவணன் வாழ்ந்த அதே காலப்பகுதிகளில் தென்னமெரிக்காவில் வாழ்ந்திருந்த ஒரு மக்கள் கூட்டத்தினர் (நாஸ்கா நாகரீகத்தினர் அல்லது நாஸ்கா மக்கள் ) விமானப் பாவனைகளோடு தொடர்பு பட்டிருந்தது அண்மையில் ஆராட்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் , அந்த தென் அமெரிக்க மக்கள் கூட்டத்தினர் விமானங்களைப் பாவித்திருந்தால் , நமது இராவணனும் விமானத்தைப் பாவித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் எழுதியிருந்தேன் .
சரி தென் அமெரிக்க நாஸ்கா மக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் விமானங்களைப் பாவித்தனரா என்றும் , அதற்கான ஆதரங்களையும் சற்று ஆராய்வோம் .
(
ஆய்வாளர் நிராஜ் டேவிட் அவர்களின் ஆக்கத்தைத் தழுவி பயணிக்கின்றேன் )
தென்னமெரிக்க நாடான இன்றைய பெரு நாட்டில் நாஸ்கா பாலைவனம் என்றொரு பாலைவனம் அமைந்துள்ளது. இந்தப் பாலைவனத்தின் நடுப்பகுதியில் ,
சாதாரணத் தரைப்பகுதியில் இருந்து பலநூறு மயில்களுக்கு அப்பால் அதாவது இலகுவில் மனிதர்களால் சென்றடைய முடியாத பாலைவனத்தின் உள்ளே ஒரு பாறைகளால் ஆன மலைத்தொடர் காணப்படுகிறது .
இந்தப் பாறைகளால் ஆன நீண்ட மலையைச் சீர்செய்து அதாவது மட்டமாக வெட்டி 500 சதுர கி மீ பரப்பளவில் ஒரு இறங்குதளம் போன்ற சதுர வடிவிலான தளமொன்று அமைக்கப்பட்டுள்ளது . இத்தளத்தில் 23 கிமீ ஓடுதளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற ஒரு தளத்தை இன்றைய நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக்கூட அமைப்பது என்பது மிகவும் சவாலானது என்று கூறப்படுகிறது.
இந்த சதுர வடிவ 500 கிமீ பரப்பளவுள்ள தளத்தில் பல மையில்கள் நீளமான கோடுகள் வரையப்பட்டுள்ளது . இக்கோடுகள் பறையைத் துளையிட்டு சிலிக்கன் துகள்களால் நிரப்பி வரையப்பட்டுள்ளது . எனவே இக்கோடுகள் வானிலிருந்து பார்க்கும்போதும் தெளிவாகத் தெரியக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. தவிர இக்கோடுகள் இன்றுவரை அப்படியே இருக்கிறது .

இங்கு கோடுகள் தவிர்த்து பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தொடங்கிய புள்ளியிலேயே முடியும்.
இவை விமானிகளுக்கு வழிகாட்டும் குறியீடுகளாக (signals ) இருக்கலாம்.
இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம்.
கேத்திர கணித (Geometry) முறையிலான வடிவங்கள் விலங்குகள், பறவைகள் போன்ற உருவங்கள்.

இந்த நாசுகா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், வானம்பாடி பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பல இருக்கின்றன. இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள் கால் கிலோ மீட்டர் நீளத்துக்கும் நேர்கோடுகள் பல கிலோ மீட்டர் நீளத்துக்கும் வரையப்பட்டுள்ளன.

இந்தச் சித்திரங்களின் முழுமை எவருக்குமே தெரியாது.காரணம் இச்சித்திரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உதைப்பந்தாட்ட மைதானம் அளவுக்குப் பெரியவை . இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் வானத்தில் உயரப் பறந்தால் மட்டுமே முடியும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியம் இல்லை. இருந்தும் இந்தக் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றன. எரிக் வான் டேனிகன் இவற்றை வேற்று கிரக வாசிகளின் விமானத்தளம் என்று கூறியது அறிவியலாளர்களால் ஏற்கப்படவில்லை.
ஆக இந்தத் தளம் நாஸ்கா மக்களின் விமானம் இறங்குதலமாகவே இருக்க சாத்தியமுள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள் .அப்படியாயின் அவர்களிடம் விமானமும் இருந்திருக்க வேண்டுமல்லவா ?
அதுபற்றி அடுத்தப் பதிவில் ஆராய்வோம் .
இந்தப்பகுதியை ஆய்வு செய்ய பெரு அரசாங்கம் தடை விதித்து விட்டது. . இந்தப் பகுதியை தங்கள் நாட்டு மக்கள் புனிதப் பிரதேசமாகப் பார்ப்பதால் ஆய்வுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக பேரு அரசு கூறினாலும், உண்மையில் மேலை நாட்டவர்கள் ஆய்வு என்று புகுந்து ஆய்வு செய்துவிட்டு , எவ்வளவு விசயங்களை வெளியிட வேண்டுமோ அவ்வளவை மட்டுமே வெளியிட்டு விட்டு , முக்கியமான இரகசியங்களை வெளியிடாமல் திருடிக்கொள்வது வழமை.
உதாரணமாக மாயன்களின் நாகரீகம் , சுமேரிய நாகரிகம் , எகிப்திய , பாபிலோனிய நாகரீகங்கள் , சிந்துவெளி நாகரீகம் , ஆரியர் நாகரிகம் , கிரேக்கர்களின் நாகரீகம் என்று எல்லா நாகரீகங்களையும் ஆராய்ந்து அங்கிருந்து திருடிய இரகசியங்களைக் கொண்டே இன்று இலுமனாட்டிகளால் உலகை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிந்தது.
இவற்றையெல்லாம் பெரு அரசு நன்றாக அறிந்து வைத்துள்ளது."இராவணன் வாழ்ந்த காலப் பகுதிகளில் உலகில் வாழ்ந்திருந்த மக்கள் கூட்டத்தினர் யாராவது விமானங்களை உபயோகப்படுத்தி இருந்தனரா? அல்லது அதற்கான ஆதாரமாக ஏற்க்ககூடிய தடயங்கள் ஏதாவது சிக்கியிருக்கிறதா ? " என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.
தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் கிட்டத்தட்ட இராவணன் வாழ்ந்ததாகக் கருதப்படும் அதே காலப் பகுதிகளில் வாழ்ந்திருந்த மக்களால் உலோகங்களைக்கொண்டு செய்யப்பட்ட விமானத்தின் உருவத்தை ஒத்த உருவங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
விமானம் மட்டுமின்றி விண்வெளி ஓடங்கள் கூட பாவனையில் இருந்தமைக்கான சந்தேகங்களை உண்டுபண்ணுமளவுக்கு ஆதாரங்கள் உலகில் பல்வேறு நாடுகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஓவியங்களாக ,சிலைகளாக இன்றைய விவெளி வீர்கள் அணியும் விசேட ஆடைகள் போன்ற ஆடைகளுடன் வடிக்கப்பட்ட மனித உருவங்கள் , இன்றைய விவெளி ஓடங்களை ஒத்த விவெளி ஓடங்களின் கல்வெட்டுக்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வுருவங்களை உருவாக்கிய மனிதர்கள் எதற்க்காக அல்லது எதனைப்பார்த்து இந்த மாதிரி உருவங்களை உருவாக்கினார்கள் என்று விஞ்ஞானிகள் குழப்பதில் இருக்கிறார்கள்.
ஆக அன்றைய காலப் பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் விமானங்களையும் , விண் வெளி
ஒடங்களையும் உபயோகப் படுத்தியுள்ளனர். அல்லது அவற்றைக் கண்டுள்ளனர் என்ற முடிவுக்கு வரலாம் .
அப்படியாயின் " இராவணனிடம் ஏன் புட்பகவிமானம் இருந்திருக்க முடியாது ?" என்ற கேள்வி எழுகிறதல்லவா ?"இராவணனின் ஆட்சி அந்தக்காலப்பகுதியில் உலகிலேயே தலை சிறந்த நல்லாட்சியாக இருந்தது.
இராவணனிடம் பறக்கும் இயந்திரம் இருந்தபடியால் குன்றுகள் , மலைகள் தோறும் பறந்து சென்று தியானம் , தவம் போன்றவற்றைச் செய்து மிகுதியான நேர்மறைச் சக்திகளைப் பெற்றுக்கொள்வார்.அந்த சக்தியால்தான் அவர் இறை சக்தியை நெருங்க முடிந்தது. அந்த நேர்மறைச் சக்தியால்தான் அதிக சக்தி வாய்ந்தவராக பத்து பேரின் புத்திக்கூர்மையையும் பலத்தையும் தனியொருவராக பெற்று விளங்கினார். தனது விமானத்தின் மூலம் தென் அமெரிக்கா வரை பறந்து அந்த காலகட்டத்தில் வாழ்ந்திருந்த மாயன்களோடும் நட்பு கொண்டவராக இருந்தார் . அதனால்தான் சிகிரியாவில் அமைந்துள்ள அவரது கோட்டை மாயன்களின் கட்டுமானத்தை ஒத்ததாக அமைந்திருக்கிறது.
இராவணன் இறக்கவில்லை மாறாக அவர் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார் . தியானம் தவம் என்பவற்றினூடாக ஆயிரக்கணக்கான வருடங்கள் உறக்க நிலையில் இருக்கக்கூடிய சக்தியை இராவணன் பெற்றுள்ளார்.
இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் எரிபொருள் சக்தி தீர்ந்து போன பின்னர் இராவணன் பாவித்த ,அதாவது புவியீர்ப்பு விசைக்கு எதிரான சக்தியை உபயோகப்படுத்தி பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். அதற்கான இரகசியங்களை மேலை நாட்டவர்கள் திருடிக்கொண்டு போய்விட்டார்கள்.
இலங்கையில் இராவணின் பல்வேறு குகைகள் கணப்படுகிற்றன . அவற்றில் ஓன்று
ராவண எல்ல குகை . இந்தக்குகை மனிதர்களின் நடமற்றமில்லாத காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளது. அக்குகையானது உற்பகுதியில் பல பிரிவுகளைக் கொண்டது. அதோடு பலமாடிகளைக் கொண்ட மாளிகையைப்போல அடுக்கடுக்காக அமைந்துள்ளது. இந்தக் குகையினுள் சீதை நீராடுவதற்க்காக என நீர்த் தடாகம் ஒன்றும் இருக்கிறது.
இராவணன் வானில் மற்றுமின்றி பூமிக்கு அடியிலும் பயணம் செய்யக்கூடிய ஆற்றலைக் கொண்டிருந்தார்."
அவர்கள் வரலாறுகளில் மற்றும் புராணங்களில் படித்தவற்றை ஆதாரமாகக் கொண்டு மேற்க்கண்டவாறு கூறுகிறார்கள்.
இவர்களின் கூற்றுக்கள் உண்மைதானா என்று ஆராயவதற்க்காக இலங்கையின் NT தொலைகாட்சி ஒரு குழுவை ஒழுங்கு செய்து அனுப்பியது.இலங்கைத் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, யாழ்ப்பாணத்தில் (இலங்கையின் வடபகுதி ) அமைந்துள்ள அடி முடியற்ற நிலவறை கிணற்றில் சுமார் நாற்பது மீற்றர்கள் ஆழம்வரையில் நன்நீரும் நாற்பது மீற்றர்கள் ஆழதிற்க்குக் கீழ் உவர்ப்பு நீரும் காணப்படுகிறதாம்

10-20 மீற்றர்களுக்கு இடைப்பட்டப் பகுதியில் மண் கலந்ததெளிவில்லாத நீர் காணப்படுகிறதாம் . இதனால் சூரிய ஒளி உட்புக முடிவதில்லையாம் .
நிலவறை கிணறு என்று யாழ் மக்களால் அழைக்கப்படும் இந்தக் கிணறு போன்று இன்னொரு நிலவறைக்கிணறு யாழ்ப்பாணம்கீரிமலையில் காணப்படுகிறது. இந்த இரண்டு நிலவறைக் கிணறுகளுக்கும் இடையில் சுரங்கவழித் தொடர்பு காணப்படுவதாக முன்னோர்கள் கூறுகிறார்கள்.
சரி இந்தக் கிணறுகள் யாரால் எப்போது அமைக்கப்பட்டவை ?இதற்கு விடை காண்பது அவ்வளவு சிரமான ஒன்றல்ல.
ஏனெனில் கீரிமலையில் அமைந்துள்ள நிலவறைக் கிணற்றுக்கு மிகவும் அருகில்தான் கீரிமலை நகுலேஸ்வரம் சிவாலயம் (பிரதமர் மோடி அண்மையில் வழிபாடு செய்த ஆலயம் ) அமைந்துள்ளது.



இந்த சிவாலயம் இராவணனால் வழிபாடு செய்யப்பட்டதாக பதிவுகள் காணப்படுகின்றன. ஆனால் யாரால் கட்டப்பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை. சிலவேளைகளில் இராவணனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆக இந்த நிலவறைக் கிணறுகளும் இராவணனால் அல்லது இராவணனின் காலத்தில் வாழ்ந்த சிவனடியார்களான நாகர்களால் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.
மிகப்பாரிய தோற்றதையுடயதாக அமைந்திருந்த இந்தக் கோவிலும் 1620 களில் போர்த்துக் கேசியர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டது. இன்று நாம் காணும் ஆலயமானது 1800 களுக்குபின்னர் நலன் விரும்பிகளால் அமைக்கப்பட்டது.இலங்கையில் இராவணன் காலத்து குகைகள் வடக்குமுதல் தெற்கு வரை பல இருப்பதாகவும் அவை ஒன்றோடு ஓன்று தொடர்புடையவை என்றும், அவற்றில் சில சிதைவடைந்த நிலையில் இருப்பதாகவும் முந்தைய பதிவொன்றில் பதிவிட்டிருந்தேன்.அதனால்தான் இராவணனை ஆகாயத்தில் மட்டுமின்றி பூமிக்கடியிலும் பயணம் செய்யக்கூடியவர் என்று பௌத்த பிக்குகள் கூறுகிறார்கள்.
பண்டாரவளையில் உள்ள மலைக்குன்றிலுள்ள குகையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது . இந்தக்குகையும் இராவணனுடன் தொடர்புடையதா என்று சந்தேகம் எழுகிறது.
பண்டாரவளை அம்பதண்டேகம பிரதேசத்தில் நிலத்துக்கு கீழ் 300 அடி ஆழத்தில் குகை ஒன்று காணப்படுவதாக கட்டிட ஆய்வு நிறுவகத்தின் புவியியல் ஆய்வாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த 15ம் திகதி 40 அடி பள்ளம் ஏற்பட்டிருந்தது.
இது குறித்து ஆய்வு செய்த போது இந்த விடயம் தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்துக்கு கீழே உள்ள குகையின் சுண்ணாம்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் இந்த பள்ளம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறித்த பகுதியின் 500 மீற்றர் பிரதேசத்தை பொது மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்குள்ள 26 குடும்பங்களின் 90 பேர் வேறு இடமொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த இடிபாட்டுக்கும், உமாஓய வேலைத்திட்டத்துக்கும் இடையில் சம்பந்தம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராவண மகாராஜாவுக்கும் அதே காலப் பகுதியில் தென் அமெரிக்காவில் வாழ்ந்திருந்த
நாகரீகத்தில் கொடிகட்டிப்பறந்த மாயன் இனத்தவர்களுக்கும் நெருக்கமான உறவு இருந்ததாகவும் மாயன் இனத்துப் பெண்ணையே (மண்டோதரி ) இராவணன் திருமணம் செய்ததாகவும் பௌத்த பிக்குகள் கூறுகிறார்கள்.
 மாயன் இனத்தவர்கள் அடிக்கடி இலங்காபுரிக்கு வந்து போவதாகவும் அவர்களும் பறக்கும் இயந்திரங்களைப் வைத்திருந்ததாகவும் சிங்கள பிக்குகள் கூறுகிறார்கள். சிகிரியாவிலுள்ள இராவணன் கோட்டையானது மாயன் இனத்தவர்களாலேயே 
வடிவமைக்கப் பட்டதாகவும் கூறுகிறார்கள்.
மாயன் பண்டையத்தமிழர்கள். இது பற்றி சிலப்பதிகாரம் நூல்களில் கூறப்பட்டுள்ளது.முல்லைத்தீவு , குமுழமுனையில் உள்ள குருந்தனூர் மலை இராவணன் உடன் பிறந்த சகோதரர் ஆண்ட இடம் என்பது பல ஆக்கங்கள் கூறுகிறது , அந்த இடம் கொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவிலுக்கு பின்னால் காட்டில் உள்ளது , அங்கே முருகன் ஆலயம் உள்ளது .சிங்களவர்களின் பார்வையில் இராவணன் .......
சிங்களவர்கள் சொல்கிறார்கள்..... " இராவணன் எங்களது மகாராஜா . வால்மீகி எங்களது மகா ராஜாவைப்பற்றி தவறாக சித்தரித்துவிட்டார். எங்கள் மகராஜாவின் கீர்த்திக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டார். இது எமக்கு கவலை தருகிறது. இராவணன் ஒரு மகான். அவர் மருத்துவம் , பொறியியல் போன்ற பல துறைகளில் வல்லமை பெற்றவர் ." என்கிறார்கள் .
விருதுகள் பல வென்ற ஆய்வாளர் மற்றும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் உதயசிறி அவர்கள் ஒரு தொலைகாட்சி நேர்காணளில் ,
"
இராவணனைப் பற்றி ஆராய்ந்தால் , கச்சதீவு முதல் முழு இலங்கையிலும் ஆட்சிபுரிந்தமைக்கான வாழ்ந்தமைக்கான சான்றுகள் அங்குலம் அங்குலமாகக் கொட்டிக் கிடக்கின்றன. தவிர அவர் பத்து தேசங்களை ஆட்சி செய்தமை தெரியவருகிறது .

அதில் இலங்கையைத் தவிர ஏனைய அனைத்து தேசங்களும் இந்து சமுத்திரத்தினுள்(இலங்கைக்குத் தேற்கே) மூழ்கிக் கிடக்கின்றன. இலங்கையில் இராவணனால் நிறுவப்பட்ட சிவாலயங்கள் ஆறு .
அவற்றில் ஓன்று (தென் திசையில் அமைக்கப்பட்டது )சமுத்திரத்தில் மூழ்கி இருக்கலாம் . சமுத்திரத்தில் இறங்கி ஆய்வுகள் செய்யும் வல்லமை எம்மிடம் இல்லை .
ஆனால் பதினைந்து வருடங்களாக நான் நிலத்தில் ஆய்வு செய்து பல நூல்களை வெளியிட்டுள்ளேன் .


(
சிங்களத்தில் )
நக்லஸ் மலைத்தொடரில் இராவணன் பற்றிய ஆய்வு செய்யும் நோக்கில் தங்கியிருந்த சமயத்தில் (எட்டு வருடங்களுக்கு முன்பு ) ஒரு இரவுப் பொழுதில் இராவணன் தியானத்தில் இருக்கும் காட்சி என் கண்களில் பட்டது . ஒருசில வினாடிகள் நிலைகுலைந்து போன நான் அது பற்றி வெளியில் அறிவிக்கவில்லை.
தொடர்ச்சியான எனது தேடல்களால் அது எனது மன பிரமையாகக் கூட இருக்கலாம் . அல்லது உண்மையாகவும் இருக்கலாம் .

எனவே நான் பார்த்த அந்த இராவணனின் உருவத்தை ஓவியமாக வரைந்து வழிபாடு செய்கிறேன்.
இராவணன் சூரியனையும் சிவலிங்கத்தையும் வழிபாடு செய்திருந்தார் . அவர் கடுமையான தியானங்கள் , மந்திரங்கள் மூலமாக அதீத சக்தியைப் பெற்றுக்கொண்டார் . இராவணன் தியானம் செய்வதற்க்கான இடங்களாக மலை உச்சிகள் , நீர்வீழ்ச்சிகள் ,குகைகள் போன்ற இடங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது வழக்கம்"
இவ்வாறு கூறினார் .
இவர் கூறியதைக் காணுற்ற சிங்களமக்கள் மேகங்களோடு உரசிக்கொண்டிருக்கும் அந்த மலைத் தொடருக்குப் படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள் .
" எங்கள் மகாராஜா இராவணன் வாழும் மலைக்குச் சென்று ஆசி பெற்று வருவோம் "
என்று ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு சுமார் 4000 அடிகள் செங்குத்தான பாறைகள் கொண்ட அந்த மலை உச்சிகளுக்குச் சென்று வழிபாடு செய்கிறார்கள்.
குறித்த மலையடிவாரத்தில் வாழும் மக்கள் இராவணத் திருவிழாவும் கொண்டாடுகிறார்கள் .
"இந்தக் காலத்திலும் இதையெல்லாம் நம்புகிறீர்களா ?" என்று ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அந்த மக்களை நோக்கிக் கேட்டார் .
அதற்கு....
"
புத்தரை நம்புகிறோம் . இயேசுவை நம்புகிறோம் . நபிகள் நாயகத்தை நம்புகிறோம் . இன்னும் எத்தனையோ பேரை நம்புகிறோம் . போற்றுகிறோம் . வணங்குகிறோம் . அவர்கள் எல்லோரும் எங்கள் தேசத்தோடும் , மண்ணோடும் , மொழியோடும் சம்பந்தமே இல்லாதவர்கள் . ஆனாலும் நம்புகிறோமே ?
அதுபோல இராவணனையும் நம்பிவிட்டுப் போகிறோம் .
இராவணன் உண்மையிலேயே வாழ்ந்தாரோ இல்லையோ அவர் எங்கள் தேசதோடும் ,மண்ணோடும் , மொழியோடும் சம்பந்தப் பட்டவர். அதனால் அவர்தான் எங்கள் ஹீரோ" என்றார் ஒரு சிங்கள இளைஞர்.
அந்த பதில் என்னையும் கொஞ்சம் சிந்திக்கவும் சிலிர்க்கவும் வைத்தது.
ஆனாலும் ஒரு வருத்தம் . அவர்கள் இராவணனைச் சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள். நாம் வழமை போல உறக்கத்தில் இருக்கிறோம் . அல்லது பகுத்தறிவு பேசுகிறோம் .
வரலாறு திரிபுபடுகிறது .இலங்கையின் மூத்தக்குடி இராவணன் இனிமேல் சிங்களவன் ஆகிறான் .






Comments

Popular posts from this blog

சங்க காலம் வரலாறு

தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு

தமிழ் மொழியின் தொன்மை