சஞ்சீவி மூலிகைகள்



                      சஞ்சீவி மூலிகைகள்


1. கறுப்பு நாயுருவி

கறுப்பு நாயுருவிக் கஷாயத்தை ஐந்து மாதத்துக் கர்ப்பிணிக்கு அடிக்கடி மூன்றுதர மீந்தால் தசமதியாய் அஞ்சு கடிகைக்குள் தத்துவ பூர்த்தியாய்ச் சுகப் பிரசவமாம்.
(வேறு குறிப்பு)
கறுப்பு நாயுருவிக் கஷாயம் 5 மாதத்துக் கர்ப்பிணிக்குக் கொடுக்க, கொடுத்த ஐந்து நாழிகைக்குள் 10 மாதத்துப் பூர்ண கர்ப்பம் உண்டாய்ப் பிரசவமாகும்.2. குளிர்ந்த கொள்ளி (குளுந்த கொள்ளி) யென்பதைக் கசக்கிக் குக்குடாண்டத்திற்குக் கவசித்து இரண்டரைக் கடிகை மூடிவைத்தால், நவீனமான பார்ப்பு ஜனிக்கும்.
(வேறுகுறிப்பு)

2.குளிர்ந்த கொள்ளி
குளிர்ந்த கொள்ளி என்னும் பச்சிலையைக் கசக்கிக் குக்குட அண்டத்தின் கீழும் மேலும் வைத்து மூடிய இரண்டரை நாழிகைக்குள் கரு முற்றிக் குஞ்சு பொரிக்கும்.

3. தீப்பூடு
தீப்பூடு நசுக்கி இறந்த கிளி முதலிய பறவைகளின் வலது காதில் வைக்க அவை பிழைக்கும்.
(வேறுகுறிப்பு)
தீப்பூடு பிடுங்கி நசுக்கி இறந்தவனுடைய வலது காதில் வைத்தால் பிழைப்பான்.

4. முத்துப் பூண்டு

முத்துப்பூண்டுச் சாற்றை எல்லாப் பக்ஷிகளின் காதிலும் சிறுகச் சிறுக இரண்டரை நாழிகை பிழிய சீவிக்கும்.
(வேறுகுறிப்பு)
முத்துப் பூண்டுச் சாற்றை இறந்துபோன பக்ஷி எது ஆனாலும் அதன்மேல் சிறுகச் சிறுக இரண்டரை நாழிகை பிழிந்தால் பிழைக்கும்.

5. கருங்காந்தள்

கருங்காந்தளிலையைக் கசக்கி வெட்டுண்ட கைத்துண்டைச் சேர்த்து மேற்படி மூலிகையை யப்பிக் கட்டக் கை கூடும்.
(வேறுகுறிப்பு)

கருங்காந்தள் இலையைக் கசக்கி, வெட்டுப்பட்ட துண்டுகளைச் சேர்த்து, அவற்றோடு சேர்த்துக் கட்டி இரண்டரை நாழிகை வைத்திருந்தால், துண்டுகள் ஒன்றாய்ச் சேர்ந்து போகும்.


Comments

Popular posts from this blog

சங்க காலம் வரலாறு

தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு

நாவலன் தீவு வரலாறு